அக்பார் பீர்பாலை சந்தித்த கதை – How Akbar Meets Birbal Story in Tamil :- அக்பர் சக்ரவர்த்தியாக இருந்த காலம் அவருக்கு வேட்டைக்கு போறது ரொம்ப பிடிக்கும் ,
வரத்தோட இறுதி நாட்கள்ல தன்னோட படை வீரர்கள் சிலரோட சேர்ந்து காட்டுக்கு போயி வேட்டையாடுவாரு
ஒரு நாள் பக்கத்துல இருக்குற காட்டுக்கு வேட்டைக்கு போனாரு ஆனா அந்த காடு மிக பெரிய காடு ,ரொம்ப கொடூரமான மிருகங்கள் வாழ்ந்த அந்த காட்டுல வேட்டையாடுன அக்பர் ரொம்ப தூரம் உள்ள போயிட்டாரு ,அவர்கூட சிலபேர் மட்டுமே இருந்தாங்க
ரொம்ப நேரம் கழிச்சி அரண்மனைக்கு திரும்ப நினைச்ச அக்பர் குதிரையை திருப்பிட்டு மெதுவா அங்க இருந்து நகர்ந்தாரு ,அப்பத்தான் அவருக்கு புரிஞ்சது அடடா நாம ரொம்ப தூரம் காட்டுக்குள்ள பாத எதையும் பார்க்காம வந்துட்டமேன்னு நினைச்சாரு
அரண்மனைக்கு போற பாதை அவருக்கும் அவர்கூட வந்த யாருக்குமே தெரியல .ரொம்ப நேரமா பாதை தேடி போன அக்பர் ரொம்ப களைச்சு போனாரு.அப்பத்தான் அவருக்கு முன்னாடி மூணு பாதை தென்பட்டுச்சு
அடடா இந்த பாதைல எந்த பாதை அரண்மனைக்கு போகும்னு தெரியாலயனே யோசிக்கும்போது ,ஒரு பாதை வழியா ஒரு பையன் நடந்து வர்றத பாத்தாரு
உடனே அந்த பையன்கிட்ட இந்த பாதைல எந்த பாதை அரண்மனைக்கு போகுதுன்னு கேட்டாரு
அதுக்கு அந்த பையன் சொன்னான் பாதை எங்கயும் போகாது நாமதான் பாதை வழியா போகணும்னு சொன்னான்
அதைக்கேட்ட அக்பர் தன்னோட களைப்பையும் மறந்து சிரிச்சிட்டாரு ,புத்திசாலியான அந்த பையன் கிட்ட தன்னோட மோதிரத்த கொடுத்து நீ அரண்மனைக்கு வந்து என்ன பாருன்னு சொன்னார்
அரண்மனைக்கு வந்த அந்த பையன் தன்னோட அறிவாற்றலால் நாட்டோட மந்திரியாகவும் உலக புகழ் பெற்ற அக்பராவும் ஆனான்
உலக புகழ் பெற்ற பீர்பால் ஆனான்