முயலும் பச்சை இலைகளும் -Leafy Leaps

முயலும் பச்சை இலைகளும் -Leafy Leaps;-குவா காட்டுல நிறைய காட்டு மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுங்களோட சேர்த்து நிறைய குட்டி குட்டி மிருகங்களும் அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அப்படி இருக்கிறப்பத்தான் ஒரு பெரிய மரத்துக்கு அடியில் இருந்த குட்டி வீட்டுல ஒரு முயல் குட்டி பிறந்துச்சு

The Lush Forest and the Newborn Rabbit

இந்த முயல் குட்டி பிறக்கும்போது குண்டு குண்டு கொலு கொலுன்னு இருந்துச்சு அதைப் பார்த்த முதல் நொடியே எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க முயலுங்கிறது வேகமா ஓடக்கூடிய ஒரு குட்டி மிருகம் ஆனா இந்த புது முயல் குட்டி இவ்வளவு குண்டு உடம்பு வச்சுக்கிட்டு எப்படி ஓட போது அப்படின்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க

Laughter at the Chubby Arrival

அந்த முயல் குட்டி ஓட அப்பா அம்மாவே நம்ம மகனுக்கு இவ்வளவு குண்டு உடம்பு இருந்துச்சுன்னா அதனால வேகமாக ஓட முடியாது இது சுலபமா காட்டு மிருகங்கள் வேட்டையாடி சாப்பிடறதுக்கு உணவா போனாலும் போயிரும் அதனால இத ரொம்ப தூரம் வெளியில விடக்கூடாது அப்படின்னு முடிவு செஞ்சாங்க அதனால அந்த முயல் குட்டிய எப்பயும் வீட்டுக்குள்ளேயே வச்சு வளர்க்க ஆரம்பிச்சாங்க

Parents' Protective Decision

அதனால அந்த முயல் குட்டி அந்த மரத்தைச் சுத்தியே தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சு அமைச்சு கிடுச்சு இருந்தாலும் அந்த முயல் குட்டிக்கு காட்டுக்குள்ள போயி தானும் சுதந்திரமா வாழனும் அப்படின்ற நினைப்பு இருந்துச்சு அப்படி இருக்கப்பத்தான் அந்த பெரிய மரத்துல ஒரு புறா வந்து கூடு கட்ட ஆரம்பிச்சுருச்சு

Dreams of Freedom and the Bird's Arrival

இதைப் பார்த்த குட்டி முயல் மரத்தை சுத்தி குட்டி குச்சிகளையும் அதை கட்டுறதுக்கு நாணல்களையும் பொருக்கி புறா பாக்குற மாதிரி போட்டுச்சு தான் வீடு கட்டுறதுக்கு இந்த குட்டி முயல் உதவி செய்யுது அப்படின்னு புரிஞ்சுகிட்ட புறா அந்த குச்சிகளையும் நாணலையும் பயன்படுத்தி சுலபமாவே தன்னோட கூட்ட அந்த மரத்து மேல இருந்த ஒரு கிளையிலே கட்டுச்சு

The Helpful Little Rabbit

அப்பத்தான் அந்த புறா கவனிச்சுச்சு இந்த குட்டி முயல் இவ்வளவு குண்டா இருக்கு இதுக்கு நண்பர்களே கிடையாது காட்டுக்குள்ள போய் விளையாடவும் இதுக்கு அனுமதி கிடையாது அதனால இந்த மரத்தை சுத்தி சுத்தி வருது இதுக்கு நாமளாச்சும் நண்பனா இருப்போம் அப்படின்னு நினைச்ச புறா அன்னையிலிருந்து குட்டி முயலோட நண்பனா மாறிடுச்சு

The Bird's Kind Observation

அப்படி இருக்கிறப்பத்தான் ஒரு நாள் நல்லா தூங்கி எந்திரிச்ச குட்டி முயல் தன்னோட வீட்டு வாசல்ல வந்து நின்னுச்சு அங்க நிறைய பச்சை இலைகள் ஒரு பாதை மாதிரி போட்டு வச்சிருந்தாங்க அது தானா விழுந்த இலைகள் மாதிரி இல்லாம யாரோ போட்டு வச்சது மாதிரி அழகா தெரிஞ்சுச்சு உடனே உற்சாகமான குட்டி முயல் தன்னோட கால் தரையில இருந்த மண்ணுல படாம ஒவ்வொரு இலை மேலே குதிச்சு விளையாடிச்சு

The Magical Leaf Path Discovery

மறுநாள் இதே மாதிரி தூங்கி முழிச்சு வந்து பார்த்த குட்டி முயல் இன்னும் உற்சாகம் ஆயிடுச்சு இப்ப அந்த இலைகள் மரத்தைச் சுற்றி போடப்பட்டு இருந்துச்சு உடனே ஒவ்வொரு இலை இலையா ஓடி விளையாடுச்சு இது தினமும் தொடர்கதையா அமைஞ்சுக்கிட்டே இருந்துச்சு இதை எல்லாம் தன்னோட புறா நண்பர் தான் செய்யுறாருனு அப்படின்னு புரிஞ்சுகிட்டு அந்த குட்டி முயல் தொடர்ந்து புறா போட்டு வச்ச பச்சை இல்லை விளையாட்ட விளையாடுச்சு

Daily Leaf Adventures Escalate

சின்ன வயசா இருக்குர எனக்கு அடுத்தவங்களோட விளையாட கூட அனுமதி கிடையாது ஆனால் என்னுடைய புறா நண்பர் எனக்காக நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு செஞ்சி கொடுத்திருக்காரு அப்படின்ற நினைப்புலயே இந்த விளையாட்டை தினமும் விளையாடிச்சு குட்டி முயல் ஆனா புத்திசாலியான புறாவுக்கு மட்டும்தான் தெரியும் அது வெறும் விளையாட்டு இல்ல அது ஒரு உடற்பயிற்சி அப்படின்னு

Playful Thoughts and Hidden Wisdom

பிறவியிலேயே குண்டு உடம்போட பிறந்த குட்டி முயல் அம்மா அப்பா விதிச்ச கட்டுப்பாடுனால வீட்டிலேயே இருந்து உடம்பு கூடிக்கிட்டே இருக்கு இதுக்கு சரியான தீர்வு உடற்பயிற்சி தான் அதனால தான் ஒவ்வொரு இலையையும் தள்ளித்தள்ளி போட்டு ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சிய கூட்டிக்கிட்டே போச்சு இதை ஒரு விளையாட்டுனு நினைத்து தினமும் பச்சை இலைகள் மேல குதிச்சு விளையாண்ட குட்டி முயல் கொஞ்ச நாள்லயே உடம்பு வத்தி வேகமா ஓட வேண்டிய உடல் தகுதியோட வளர ஆரம்பிச்சுச்சு

Transformation Through Play

இப்ப அந்த குட்டி முயலால ,எங்க வேணா போக முடியும் ,ஆபத்து நேரங்கள்ல துரிதமா தாவி ஓடி தன்னை காப்பாத்திக்க முடியும் ,தன்னோட இரைய தானே தேடிக்கிட முடியும் அப்படிங்கிற நிலைக்கு வுயர்ந்துச்சு அந்த குட்டி முயல்

The Capable Young Rabbit

இதைப் பார்த்த எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனாங்க இந்த குட்டி முயலோட அம்மா அப்பாவும் உனக்குத்தான் நல்ல நண்பன் கிடைச்சுட்டாங்க நாங்க கூட உனக்கு உடற்பயிற்சி மாதிரி ஏதாவது சொல்லிக் கொடுத்து உன்னோட உடம்ப மாத்திரலாம் என்று நினைப்பு இல்லாமல் இருந்தோம் இனிமே அந்த புறாவோட நண்பரா சேர்த்துக் கொண்டு காட்ட உனக்கு புடிச்ச மாதிரி சுத்தி வா அப்படின்னு அனுமதி கொடுத்தாங்க

Amazement and Freedom Granted