பெரிய யானையும் சிறிய பறவையும் -Harmony at Dusk-From Foes to Friends

பெரிய யானையும் சிறிய பறவையும் -Harmony at Dusk-From Foes to Friends:முன்னொரு காலத்துல குவா அப்படின்னு ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு அந்தக் காட்டுக்குள்ள நிறைய காட்டு மிருகங்களும் குட்டி குட்டி சின்ன மிருகங்களும் பருந்து மாதிரி பெரிய பறவைகளும் புறா மாறி சின்ன பறவைகளும் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

The Enchanted Forest Haven

அந்தக் காட்டுல ஒரு மிகப்பெரிய யானையும் வசிச்சிக்கொண்டு வந்துச்சு அந்த யானை ஒரு குருவி கூட தினமும் சண்டை போட்டுக்கிட்டே இருந்துச்சு யான ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கும்போது குருவி அதோட நெத்தியில வந்து உட்கார்ந்து கொத்தி யானைய தொந்தரவு செஞ்சு எழுப்பி விட்டுட்டு பறந்து போயிடும்

The Daily Quarrel Begins

அதே மாதிரி கிளையில தூங்கி கிட்டு இருக்கிற குட்டி குருவி மரத்தோட கிளையை புடிச்சு தன்னோட துதிக்கையை பயன்படுத்தி கீழே தள்ளிவிட்டுரும் யானை இவங்க ரெண்டு பேரும் தினம் தினம் இது மாதிரி ஏதாவது சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க அந்த காட்டுல இருக்குறது எல்லாருக்கும் தெரியும்

The Sparrow's Slumber Shaken

இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறத பக்கத்துல இருந்து பார்த்துகிட்டே இருந்த ஒரு வயசான குரங்கு ரொம்ப வருத்தப்பட்டுச்சு ஒரே காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு இருக்கிற நமக்குள்ள இப்படி சண்டை போடுறது சரி இல்ல இது என்னைக்கு இருந்தாலும் ஒருநாள் ஆபத்தில போய் முடியும் அப்படின்னு நினைச்சுச்சு அந்த வயசான குரங்கு

The Worried Observer

நல்லது நடக்கணும்னா ஒரு சின்ன பொய் கூட சொல்லலாம் அப்படின்னு அவங்க அப்பா சொன்னது அந்த குரங்குக்கு ஞாபகம் இருந்துச்சி உடனே நேரா யானைக்கிட்ட போச்சு குரங்கு ,யானையாரே யானையாரே நீயும் அந்த குட்டி குருவியும் தினம் தினம் சண்டை போடுவதை பார்த்திருக்கேன் ஆனா உனக்கு அந்த குட்டி குருவி எவ்வளவு நல்லது செய்து தெரியுமா அப்படின்னு கேட்டுச்சு அந்த வயசான குரங்கு

The Monkey's Wise Counsel to the Elephant

அதுக்கு யானை யாரு அந்த திருட்டுப் பயலா இன்னைக்கு வரட்டும் அவனை துதிக்கையாலேயே ஒரே அடியா அடிச்சு கீழ தள்ளி விடுறேன் அப்படின்னு சொல்லுச்சு ,இத கேட்டு உடனே சிரிச்ச குரங்கு சொல்லுச்சு அன்னைக்கு ஒரு நாள் நீ தூங்கிகிட்டு இருக்கும்போது உன் நெத்தியில கொத்தி உன்னை எழுப்பி விட்டதா நெனச்ச ஆனா உண்மையாவே சில குளவிகள் உன் மேல உட்கார்ந்து கொட்டி உனக்கு வலியை ஏற்படுத்தி இருக்கும் அதை பார்த்த குட்டி குருவி அதைக் கொத்தி வெளியில போட்டுக்கிட்டு இருக்கிறப்பத்தான் நீ எந்திரிச்சிட்ட அந்த குருவி உனக்கு நல்லது தான் செஞ்சுச்சு அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து போயிருச்சு குரங்கு

Revealing the Sparrow's Hidden Kindness

நேரா குட்டி குருவி கிட்ட வந்த குரங்கு என்னப்பா யானை கூட சண்டை போட போகலையா அப்படின்னு கேட்டுச்சு குரங்கு ,உடனே குருவி சொல்லுச்சு அந்த குண்டனை இன்னைக்கு காலையில இருந்து காணோம் இன்னைக்கு வரட்டும் அவனை என்ன செய்கிறேன் பாருங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த குட்டி குருவி அப்பத்தா குரங்கு சொல்லுச்சு நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சண்டை போடுறீங்களே இருந்தபோதிலும் உனக்காக நிறைய நன்மகள் செஞ்சுகிட்டு இருக்கான்னு தெரியுமா தெரியாதா அப்படின்னு கேட்டு குரங்கு

Questioning the Feisty Sparrow

இதைக் கேட்ட குட்டி குருவி அப்படி என்ன நல்லது எனக்கு செஞ்சுட்டா அப்படின்னு கேட்டுச்சு போன வாரம் ஒரு தடவை நீ கிளையில நல்லா தூங்கிக்கிட்டு இருந்த அப்ப ஒரு பெரிய பாம்பு உன்ன பிடிக்க மேல வந்துச்சு அதை பார்த்த அந்த குண்டுயான கிளையை ஆட்டி உன்னை உஷார் படுத்தி எழுப்பி விட்டுருச்சு கண் முழிச்ச நீ பாம்ப பார்க்காம நேரா யானை கூட சண்டை போட போயிட்ட அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து போயிருச்சு

Uncovering the Elephant's Secret Aid

தினம் தினம் சண்டை போட்டுக்கிட்டு இருந்த யானையும் குருவியும் ஒவ்வொருத்தர் மேல இருந்த வன்மமும் கோவமும் குறைந்து சாந்தமா மாறிட்டாங்க அன்னையில இருந்து நேருக்கு நேர் பாத்துக்கிட்டா கூட சண்டை போடாமல் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு அந்தப் பக்கம் போயிருவாங்க அவங்களுக்குள்ள நட்பு வருதோ இல்லையோ சண்டை ஒருபோது வரதா இல்ல

From Foes to Friends

அன்னையிலிருந்து அந்த காடு ரொம்ப அமைதியா மாறிடுச்சு தினம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தவங்க கொஞ்சம் கொஞ்சமா தங்க சண்டையை குறைச்சாங்க ஒரு நல்லது நடக்கணும் என்பதற்காக சின்னதா பொய் சொன்ன குரங்கு மகிழ்ச்சியோட இதை பார்த்து ரசித்து

Peace Restored in the Forest