அறிமுகம்
காட்டு விலங்குகள் என்றவுடன் முதன் முதலில் நமக்கு நினைவிற்கு வருவது சிங்கம் மட்டுமே. வசீகரமான தோற்றத்தோடும் அதீத கம்பீரத்தோடும் காடுகளில் வலம்வரும் சிங்கத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நாம் இங்கு காணலாம்
சிங்க ராஜா
சிங்கம் ஒரு மாமிச உண்ணியாகும், காட்டு விலங்குகளில் முதன்மை இடத்தை சிங்கங்களே வகிக்கின்றன .இருந்த போதிலும் சிங்கங்கள் பூனை இனத்தை சேர்ந்தவை என்றே அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.சிங்கங்களில் வேட்டையாடும் திறன் காட்டு விலங்குகளில் சமநிலையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன ,எனவேதான் இந்திய இலக்கியங்களில் சிங்கங்களை காட்டு ராஜா என்று குறிப்பிடுகிறோம்
பெண் சிங்கம்
பெண் சிங்கங்களுக்கு தலையை சுற்றி முடிகள் இருப்பதில்லை ,இருந்த போதிலும் ஆண் சிங்கங்களின் பலத்தில் எந்த வித குறையுமின்றி வேட்டையாடும் திறன் கொண்டவை பெண் சிங்கங்கள்.
பெண் குட்டிகள்
பெண்சிங்கங்கள் 90 முதல் 110 நாட்கள் வரை கர்பமாக இருந்து சிங்க குட்டிகளை ஈனுகின்றன.பொதுவாக இரண்டு முதல் ஆறு சிங்க குட்டிகளை ஈனுகின்ற சிங்கங்கள் .சிங்க குட்டிகள் பிறக்கும் பொது கண்பார்வை இல்லாமலும் இந்து கிலோவுக்கு குறைவான உடல் இடையுடனும் பிறக்கின்றன
சிங்க கூட்டம்
பொதுவாக சிங்கங்கள் கூட்டமாகவே தென் படுகின்றன ,ஒவ்வொரு சிங்கமும் 200 கிலோவுக்கு அதிகமான எடையும் உள்ளன .8 கிலோமீட்டர் தூரம்வரை சிங்கத்தின் கர்ஜனை கேட்கும்,அதன் பார்வை திறன் மனிதர்களை விட பன்மடங்கு சக்தி வந்தது என்றும் ,ஒரு நாளில் 12 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும் வழக்கத்தை உடையவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
முடிவுரை
காட்டு விலங்குகளில் முதன்மை இடத்தில இருக்கும் சிங்கங்களை பாதுகாக்க இந்திய மட்டுமல்லாது ,உலக நாடுகள் அனைத்தும் தீவிர வேட்டை தடுப்பு பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளன ,உணவு சங்கிலியில் முதல் பகுதியில் தென்படும் சிங்கங்களை பாதுகாத்தலே உலக மக்களை பாதுகாக்கும் முதல் முயற்சி என்பதில் ஐயமில்லை