குட்டிப் குருவியின் பாட்டு-Sweet Chirp Amplified

குட்டிப் குருவியின் பாட்டு-Sweet Chirp Amplified:-குவா காட்டுக்குள்ள நிறைய காட்டு மிருகங்கள் மட்டுமல்லாமல் நிறைய பறவைகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ஒவ்வொரு தினமும் குவா காட்டுல பறவைகளோட இனிமையான சத்தத்தாலும் பாட்டாலும் சூரியன் உதயமாச்சு

The Birth and Aspiration of the Little Sparrow

அப்பத்தான் ஒரு குட்டி குருவி பிறந்துச்சு தினமும் பறவைகளோட இனிமையான குரல் வளத்தோட பாட்ட கேட்டு எழுந்திரிச்ச குட்டி குருவிக்கு தாணும் ஒரு பாடகரா மாறனும்னு நினைச்சது பறவைகளோட பாட்டை கேட்டு கேட்டு தினமும் அதுவும் பயிற்சி செஞ்சுச்சு ரொம்ப குட்டியா இருந்த அந்த குருவியோட பாட்டு ரொம்ப சத்தம் கம்மியாவே இருந்துச்சு அதனால மத்த பறவைகளுக்கு அது கேட்கல இதனால ரொம்ப வருத்தத்தில இருந்துச்சு அந்த குட்டி குருவி

The Sparrow's Plea to the Divine and Encounter with the Wise Monkey

தன்னுடைய குரல் சத்தமா மாறிடனும் அப்படின்னு கடவுள வேண்ட ஆரம்பிச்சுருச்சு அந்த குட்டி குருவி அப்படி இருக்கப்பத்தான் ஒரு புத்திசாலி ஆன குரங்க சந்திச்சுது அந்த குட்டி குருவி நீங்க புத்திசாலித்தனமா காட்டுல இருக்க மிருகங்களோட பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறதா சொல்றாங்க எனக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கு அதை தயவு செஞ்சு நீங்கதான் தீர்த்து வைக்கணும்னு சொல்லுச்சு அந்த குட்டி குருவி

The Monkey's Surprise and the Sparrow's Lament

குட்டி குருவி யோட வேண்டுகோள ஆச்சரியமா பார்த்த அந்த புத்திசாலி குரங்கு என்னப்பா நீ இப்பதான் பிறந்து வளர்ந்துக்கிட்டு இருக்க அதுக்குள்ள உனக்கு என்ன பிரச்சனை உனக்கு அப்படின்னு கேட்டுச்சு குரங்கு, அப்பதான் குட்டி குருவி சொல்லுச்சு என்னோட குரல் இனிமையானதா இருக்கு ஆனா நான் பாடுறப்ப அவ்வளவு சத்தம் வரமாட்டேங்குது ஏதாவது செஞ்சு என்னோட குரலை பெருசா ஆக்குங்க அப்படின்னு சொல்லுச்சு குட்டி குருவி

இதைக் கேட்ட குரங்கு கலகலன்னு சிரிச்சுச்சு என்கூட ஒரு நடை நடந்து வா அப்படின்னு சொல்லிட்டு குட்டி குருவியை கூப்பிட்டுகிட்டு மெதுவா காட்டுக்கு உள் பகுதிக்கு போச்சு, இப்பதான் பேய் இரைச்சலா ஒரு அகவை சத்தம் கேட்டுச்சு இதை கேட்ட குட்டி குருவி அடடா இது என்ன இந்த பறவையோட சத்தம் இவ்வளவு பெருசா இருக்கு சத்தமா இருக்கு ஆனா காது கொடுத்து கேட்க முடியல ஒரே இரைச்சலா இருக்கே இது என்ன பறவை அப்படின்னு கேட்டுச்சு

The Monkey's Chuckle and Journey to the Interior

அப்பத்தான் குரங்கு சொல்லுச்சு இதுதான் மயில் இதோட அழகுல மயங்காதவங்களே இந்த காட்டுல கிடையாது ஆனா இதுக்கு சத்தமான குரலையும் கரகர பேச்சையும் கொடுத்திருக்கிறார் கடவுள் ஒருவேளை நீ சத்தமா பாட ஆரம்பிச்சா இது மாதிரி கூட உன் குரல் மாறிடலாம் அப்படின்னு சொல்லுச்சு குரங்கு

The Lesson of the Peacock's Voice

இதைக் கேட்ட குட்டி குருவி என்னுடைய குரல் சத்தம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை எனக்கு இனிமையானதா இருக்கிற என் குரலே போதும் சத்தத்தை கூற்றேன்னு சொல்லி இந்த மயில் மாதிரி கரகர குரல் எனக்கு வேணாம் அப்படின்னு சொல்லுச்சு குட்டி குருவி

The Sparrow's Contentment with Her Voice

தான் சொல்ல நினைச்சத குட்டி குருவி புரிஞ்சுகிடுச்சு அப்படின்னு நினைச்ச குரங்குக்கு சந்தோசமாயிருச்சு உடனே தனக்கு பக்கத்துல இருந்த பெரிய வாழை இலையை பிடுங்கி அதை பெரிய மெகா ஃபோன் செஞ்சு குட்டி குருவிக்கு முன்னாடி வச்சு எங்க இப்ப பாடு பார்ப்போம் அப்படின்னு சொல்லுச்சு குரங்கு

The Monkey's Ingenious Solution

ஒன்னும் புரியாத குட்டிக் குருவியும் மெதுவா பாட ஆரம்பிச்சுச்சு அதுக்கு முன்னாடி மெகா ஃபோன்சரியான இடத்தில் வைத்திருந்ததுனால குட்டி குருவி ஓட பாட்டு காடு முழுசு கேட்டுச்சு இதைக் கேட்ட காட்டு பறவைகள் எல்லாம் ஓடோடி வந்து குட்டி பறவை முன்னாடி நின்னு முழு பாடலையும் கேட்டாங்க

The Amplified Song and Avian Audience

சாதாரண இலைய வச்சு செஞ்ச மெகா ஃபோன் தன்னோட பிரச்னையை சுலபமா தீர்த்துடுச்சேன்னு ஆச்சார்ய பட்ட குட்டி குருவி கிட்ட வந்த குரங்கு ,இனிமே எந்த பிரச்சனை வந்தாலும் கலங்காம எதிர் கொள்ளணும் அப்படி புரியிற மாதிரி எடுத்து சொல்லுச்சு