அடுத்தவருக்கும் வேண்டும்-பழமொழி கதைகள் Proverb Story in Tamil

அடுத்தவருக்கும் வேண்டும்-பழமொழி கதைகள் Proverb Story in Tamil :ஒருநாள் ஒரு ராமன்ற விவசாயி பாலைவன பகுதியில் நடந்து போய்கிட்டு இருந்தாரு ,அப்போது அவனுக்கு அதிகமாக தாகம் எடுத்துச்சு.

தண்ணீர்தேடி ரொம்ப தூரம் நடந்த அவனுக்கு தண்ணி கிடைக்கவே இல்ல ,ரொம்ப சோர்வடைந்த அவனுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு ,நடக்கவே முடியாத நிலைக்கு போன ராமனுக்கு ஒரு கிணறு கண்ணுல பட்டுச்சு

உடனே வேகமா ஓடிப்போன ராமன் அந்த கிணத்து பக்கத்துல ஒரு அடி குழாயும் ,அதுக்கு பக்கத்துல ஒரு பழைய பாட்டில்ல தண்ணியும் இருக்குறத பாத்தான்.வேகமா தண்ணிய எடுத்து குடிக்க போன ராமன் அங்க ஒரு பலகைள “இந்த தண்ணீரை குழாயில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும் அதனை குடித்துவிட்டு ,மீண்டும் பாட்டிலில் நிரப்பி வைக்கவும் ” என்று எழுதி இருந்தது

இதை படித்த ராமனுக்கு ஏற்கனவே இருக்கும் தண்ணீரை குடிப்பதா ,இல்லை பலகையில் சொல்லியிருக்குற மாதிரி தண்ணி அடிச்சி குடிக்கிறதான்னு ஒரு கேள்வி வந்துச்சு

தண்ணிய குடிச்சிட்டா திரும்ப தண்ணி எடுக்க யாராலயும் முடியாது ,ஒரு வேல தண்ணி ஊத்தி அடிச்சாலும் தண்ணி வருமான்னு தெரியாது ,தன்னோட தாகத்த மட்டும் போக்கிகிறதா இல்ல அடுத்தவங்களுக்கு தண்ணி எடுத்து வைக்கிறதான்னு ஒரே குழப்பமா இருந்துச்சு

அப்பத்தான் அவனுக்கு யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படிங்கிற திருமந்திரம் ஞாபகத்துக்கு வந்துச்சு ,தனக்கு தண்ணி கிடைக்கலனாலும் பரவா இல்லை ,என்ன போல வர்றவங்களுக்கு தண்ணி பிடிக்க ஏற்கனவே ஒருத்தர் தண்ணிய பாட்டில்ல பிடிச்சி வச்சிருக்காரு

அவரு மாதிரியே நாமளும் அடுத்து தாக்கத்தோட இங்க வர்றவங்களுக்கு தண்ணீர்கிடைக்க ஏற்பாடு செய்யணும்னு நினச்சு ,அந்த குழாய்ல தண்ணிய ஊத்தி அடிச்சான் நிறைய தண்ணி வந்துச்சு அத வேணும்ங்கிற அளவுக்கு குடிச்சிட்டு ,அந்த பாட்டில் நிறைய பிடிச்சி வச்சுட்டு தன்னோட பயணத்த தொடர்ந்தான் ராமு