விக்ரமாதித்தன் வேதாளம் கதை -2 யார் தியாகம் பெரியது – Vikram and Betal Story in Tamil:- தன்னோட கதைக்கு சரியான விடைசொன்ன விக்ரமாதித்தன் வாய தொறந்து பேசிட்டானு சொல்லி மீண்டும் புளிய மரத்துல ஏறுன வேதாளத்தை புடிச்ச விக்ரமாதித்தன் இந்த தடவ இந்த வேதாளம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாம குருகிட்ட போயி இந்த வேதாளத்த ஒப்படைக்கணும்னு நெனச்சாரு

ஆனா அந்த வேதாளம் திரும்பவும் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு
ஒரு ஊருல ஒரு மிக பெரிய ராஜா இருந்தாரு ,அவருக்கு ஒரு திறமையான தளபதி இருந்தாரு ,அவர் ராஜாவோட சேனைகளையும் ராஜாவோட குடும்பத்தையும் திறம்பட பாதுகாத்துக்கிட்டு வந்தாரு

அப்ப ஒருநாள் அரண்மனை பக்கத்துல ஒரு பூததோட சத்தம் கேட்டுச்சு , சத்தம் கேட்ட பக்கம் போன தளபதி அங்க ஒரு பெரிய பூதம் நிக்கிறத பார்த்தாரு

உடனே ஏய் பூதமே எதுக்கு அரண்மனை பக்கம் வந்திருக்கண்ணு கேட்டாரு
அதுக்கு அந்த பூதம் சொல்லுச்சு காட்டுக்கு வேட்டையாட வந்த அரசர் தன்னோட அப்பாவ கொன்னுட்டாரு அதுக்கு அரசனை கொன்னு பழிவாங்க வந்திருக்கேன்னு சொல்லுச்சு அந்த பூதம் ,அரசரோட உயிருக்கு பொறுப்பான தளபதி நான் உனக்கு அரசருக்கு பதிலா வேற ஒரு ஆள கொடுக்குறேன் நீ அத ஏத்துக்கிட்டு அரசரை விட்டுடுன்னு சொன்னாரு

பூதமும் அதுக்கு சரினு சொல்லுச்சு ,உடனே அரண்மனைக்கு வந்து எல்லார் கிட்டயும் அரசருக்கு பதிலா யார் பூத்துக்கிட்ட போறீங்கன்னு கேட்டாரு ,ஆனா ஒருத்தரும் சம்மதிக்கல அப்பத்தான் தளபதியோட ஒரே மகன் அங்க வந்தான் ,நான் என்னோட அப்பாவோட கடமையை செய்ய உறுதுணையா இருக்கேன் ,அதனால நானே அந்த பூதத்துக்கிட்ட போறேன்னு சொன்னாரு

இத கேட்ட தளபதி தன்னோட கடமைக்காக இந்த முடிவெடுத்த மகனை பாராட்டி பூதம் இருக்குறப்பக்கம் போனாரு ,இந்த விஷயம் எல்லாம் கேள்விப்பட்ட அரசர் அடடா என்னோட உயிரை காப்பாத்தா தன்னோட ஒரே மகன பலி கொடுக்க நினச்ச தளபதிக்கு துன்பம் வர கூடாதுனு நினைச்சாரு

பொத்துக்கிட்ட போன தளபதியையும் அவரோட மகனையும் தடுத்து நிறுத்தின அரசர் என்னோட உயிரையே நீ எடுத்துக்க இந்த சின்ன பையன விட்டுடுன்னு சொன்னாரு

–அப்பத்தான் விக்ரமாதித்தன் கிட்ட ஒரு கேள்வி கேட்டுச்சு வேதாளம் , அந்த அரசனை மாதிரி நீயும் ஒரு அரசன் தானே நீ இந்த மாதிரி தியாகம் எல்லாம் செய்ய மாட்டியானு கேட்டுச்சு

ஆனா விக்ரமாதித்தன் இதுல என்ன தியாகம் செஞ்சுட்டாரு அரசரு , தன்னோட மக்களை காப்பாத்துற கடமை அவருக்கு இருக்கு அதனால அவர் செஞ்சத தியாகம்னு ஏத்துக்க முடியாது ,ஆனா தன்னோட தந்தையோட கடமைக்காக தன்னோட உயிரையே விட துணிஞ்சு அந்த சின்ன பையன் செஞ்சதுதான் மிக பெரிய தியாகம்னு சொன்னாரு
மறுபடியும் வாய தொறந்து பேசிட்டியே விக்ரமாதிதா திரும்ப என்ன வந்து பிடின்னு சொல்லிட்டு பறந்து போயி மரத்துமேல உக்காந்துகிடுச்சு அந்த வேதாளம்