விக்கி கரடி-The Bully Bear Who Learned to Be Kind: King Lion’s Great Lesson in Kuva Forest!:-முன்னாடி ஒரு காலத்துல குவா காடுனு ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு அந்த காட்டுக்குள்ள நிறைய குட்டி மிருகங்களும் அதுகளை வேட்டையாடி சாப்பிடர பெரிய மிருகங்களும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க

அந்தக் காட்ட ஒரு பெரிய சிங்க ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு குட்டி மிருகங்களுக்குள் நடக்கிற குடும்ப சண்டைல இருந்து வேட்டையாடி சாப்பிட பெரிய மிருகங்களுக்கு நடுவுல நடக்கிற சண்டைகளையும் அந்த சிங்க ராஜா தான் தீர்த்து வச்சுக்கிட்டு வந்தாரு

ரொம்ப பலசாலியா இருந்த சிங்க ராஜா ஆட்சி செய்ததனால அந்த காட்டுல இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் சுலபமாவே தீர்ந்திடுச்சு எந்த பிரச்சனையா இருந்தாலும் சிங்க ராஜா ஒரு சொல் சொல்லிட்டா அதை எல்லாம் மிருகங்களும் ஏத்துக்கிட்டு இருந்தது தான் அதுக்கு காரணம்

அந்தக் காட்டுல தான் விக்கி கரடி அப்படின்னு ஒரு மிகப்பெரிய பலசாலியான கரடி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது எப்பவும் மத்தவங்கள மதிக்காம திமிர் தனமாவே நடந்துச்சு, அத பொறுத்த வரைக்கும் மத்த மிருகங்கள் அதைவிட பலம் குறைந்தது அப்படின்னு நினைச்சுச்சு அதனால அவங்க கிட்ட மரியாதை இல்லாம தரக்குறைவா பேசிக்கிட்டே இருந்துச்சு

விக்கி கரடி வாழ்ந்துகிட்டு வந்த குகைக்கு பக்கத்துல வாழ்ந்துகிட்டு இருந்த மத்த மிருகங்களான கழுதையும் நரியும் மாடும் விக்கி கரடியோட இந்த நடவடிக்கை பிடிக்காம வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க இந்தக் கரடி இந்த மாதிரி தான் பேசும் அப்படிங்கறதுனால அத விட்டு கொஞ்சம் தள்ளியே இருந்துச்சுங்க மத்த விலங்குகள்

விக்கி கரடியோட தொல்லை ஏச்சு பேச்சு எல்லாமே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்துச்சு இதை இனிமேலும் பொருத்துக்க முடியாதுன்னு நெனச்ச கழுதையும் மாடும் நரிய கூப்பிட்டுகிட்டு சிங்கராஜாவை போய் பார்த்து தங்களோட பிரச்னையை பத்தி சொல்ல போனாங்க ,

என்ன பிரச்சனை அப்படின்னு கேட்ட சிங்க ராஜா கிட்ட விக்கி குரங்கு கரடி செய்கிற அராஜகத்தை பத்தி சொல்லுச்சு ,எதுக்கு எடுத்தாலும் எங்கள அவமதிச்சியே பேசுது இந்த கரடி நாங்க என்ன சொன்னாலும் பதிலுக்கு அதட்டி உதட்டி பேசுது, இதை எங்களால் சகிச்சுக்க முடியல எங்க குழந்தைகள் இதைப் பார்த்து வளர்ந்துச்சுங்கனா சொன்னா விக்கி கரடி மாதிரியே கெட்டுப் போயிடும் அதனால விக்கி கரடியை கூப்பிட்டு நல்ல புத்திமதி சொல்லி அனுப்புங்க அப்படின்னு சொல்லுச்சுங்க அந்த மிருகங்கள்

இதைக்கேட்ட சிங்க ராஜாவுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு உடனே அங்க இருந்த ஒரு குரங்கு வேலையாளை கூப்பிட்டு உடனே போயி விக்கி கரடியை கூட்டிட்டு வர சொல்லுச்சு சிங்கம் ராஜா, சிங்க ராஜா கூப்பிட்டதும் உடனே சிங்க ராஜாவை பார்க்க வந்துச்சு விக்கி கரடி

என்னப்பா நீ அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுத்து பேச மாட்டியாமே எல்லாரையும் அதட்டி உதட்டி கத்திகிட்டே இருக்கியாமே உனக்கு என்ன திமிரா அப்படின்னு கேட்டுச்சு சிங்கராஜா சிங்க

ராஜாவோட பலத்தையும் அவரோட ஆட்சியும் பத்தி தெரிஞ்சிருந்த விக்கி கரடி அன்னையிலிருந்து நான் இனிமே எல்லார்கிட்டயும் பணிவா நடந்துக்கிறேன் பணிவாகவே இனிமே எல்லார்கிட்டயும் பேசுவேன் அப்படின்னு சொல்லுச்சு

எந்தப் பிரச்சனையும் தீர்ப்பு சொன்னதுக்கு அப்புறம் அது தீர்ந்துச்சா இல்லையா அப்படினு தெரிஞ்சிக்கிடுறது அந்த சிங்க ராஜாவுக்கு தெருஞ்சு ஆகணும், அதனாலயே எந்த பிரச்சனை முடிஞ்சாலும் அது சில நாள் கழிச்சு தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி மேலும் என்ன பிரச்சனையும் நடக்குதா அப்படின்னு விசாரிப்பார் சிங்க ராஜா அது மாதிரி தான் அமைதியா இருக்கணும்னு விக்கி கரடி கிட்ட சொல்லி அனுப்பிச்சதுக்கு அப்புறமா தன்னுடைய வேலையால் ஆன ஒரு குரங்க விக்கி கரடி இப்ப எப்படி வாழ்ந்துகிட்டு வருதுன்னு போயி பாத்துட்டு வர சொன்னாரு

உடனே அந்த குரங்கு விக்கி கரடி வாழ்ந்துகிட்டு வந்த பெரிய பாறை கிட்ட போயி நின்னுச்சு, அங்க தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்த விக்கி கரடி படுத்து ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த வழி வந்த கழுத விக்கி கரடிக்கு தொந்தரவு செய்கிற மாதிரி அது காதுக்கிட்ட போயி கனச்சுச்சு

உடனே பதறி அடிச்சு எழுந்திருச்ச விக்கி கரடி ஒன்னும் பேசாம வேற பக்கம் நடந்து போயிடுச்சு கொஞ்ச நேரம் கழிச்சு தான் சேமிச்சு வச்சிருந்த மண் சட்டியில இருந்த தேனை எடுத்து சாப்பிடுறதுக்கு உட்கார்ந்துச்சு விக்கி கரடி

அப்ப அங்க வந்த மாடு வேகமா ஓடி வந்து கரடிய முட்டுற மாதிரி வந்து பயம் காமிச்சுச்சு உடனே விக்கி கரடி பயத்தினாலயும் பதட்டத்துலயும் அந்த மண் சட்டிய கீழே போட்டுருச்சு அது சேமிச்சு வச்சிருந்த தேன் எல்லாம் பாறை மேல விழுந்துச்சு,அத அங்க இருந்த நரிகள் வந்து சாப்பிட ஆரம்பிச்சுச்சு இதை பார்த்த பிறகும் விக்கி கரடி எதுவும் சொல்லாமல் தன்னுடைய குகைக்குள்ள போய் ஓய்வெடுக்க ஆரம்பிச்சுச்சு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் விக்கி கரடியோட குகை ஓட வாசல்ல பெரிய சத்தம் கேட்டுச்சு யாரோ யாரையோ போட்டு அடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு உடனே வெளியே என்ன நடக்குது அப்படின்னு பார்க்க வெளிய வந்துச்சு விக்கி கரடி

வெளிய வந்து பார்த்தா சிங்கராஜா அங்க கோபத்தோட நின்னுகிட்டு இருந்தாரு அங்க இருந்த நரிகளையும் மாட்டையும் கழுதையயும் கோபத்துல அடிச்சுக்கிட்டு இருந்தாரு சிங்கராஜா உடனே அவர் கிட்ட போன விக்கி கரடி ஏன் சிங்க ராஜா நான் உங்க சொல்படி அமைதியா தான் இருக்கேன் இப்ப எதுக்கு இங்க வந்திருக்கீங்க அப்படின்னு கேட்டுச்சு

அப்பத்தான் சிங்க ராஜா சத்தம் போட்டு சொல்லுச்சு நீ செய்யற தப்ப திருத்த சொல்லி என்கிட்ட சொன்னாங்க அதுப்படி அமைதியாக வாழறதுக்கு உனக்கு கட்டளை இட்டேன் ஆனா என்னுடைய கட்டளைய ஏத்துக்கிட்டு அமைதியா வாழ்கிற உனக்கு அவங்களால வர தொந்தரவுக்கு நான்தான் பொறுப்பு

என் பேச்சைக் கேட்டுகிட்டு அமைதியாக இருக்கிற உன்னை அவங்க தொந்தரவு செய்கிறது என்னோட பேச்சையும் என்னையும் தொந்தரவு செய்யறதுக்கு சமம் அதனால அவங்களுக்கு சரியான தண்டனை கொடுக்காமல விடமாட்டேன் அப்படின்னு சொன்னாரு சிங்க ராஜா

உஙக்ளோட செயல் எனக்கு மன வேதனைய கொடுக்குது ,வலியவன் கொடுக்குற தொல்லை தாங்காம என்கிட்ட வந்தீங்க ,இப்ப நீங்க வலிமையா மாறுனதும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுடீங்க ,உங்கள எல்லாம் இந்த காட்ட விட்டு வெளியேற கட்டளை இடுறேனு சொன்னாரு சிங்க ராஜா ,உடனே பக்கத்துல இருந்த குரங்கு காவலர்கள் அங்க வந்து கழுதையையும் ,நரியையும் ,மாட்டையும் இழுத்துட்டு போயி காட்ட விட்டே தொரத்தி விட்டுட்டாங்க

இந்தக் குவா காட்டுலையே பலசாலியாவும் நீதி நேர்மையாகவும் ஆட்சி செய்து கொண்டு வந்த சிங்க ராஜாவோட இந்த செயல் விக்கி கரடிக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அன்னையில இருந்து சிங்க ராஜாவை தன்னோட குருவா ஏத்துகிட்டு விக்கி கரடி சிங்கராஜா சொல்லுற வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சுருச்சு விக்கி கரடி அதுக்கு அப்புறமா சிங்க ராஜாவோட புகழ் பரபர மாதிரி விக்கி கரடியோட புகழும் பரவுச்சு