வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night:-கடவுள் உலகத்தை படைக்கிறப்ப ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொடுத்து இருந்தாரு. நிறைய மிருகங்கள் கடவுள் தங்களுக்கு கொடுத்த குணாதிசயத்தை பின்பற்றி நல்லபடியா வாழ்க்கையை அமைச்சு நல்லபடியா வாழ்ந்துச்சுங்க

அதே நேரத்துல எல்லா மிருகங்களுக்கும் சின்ன சின்ன குறைகளும் இறைவனுடைய படைப்புல இருந்துச்சு அதை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்த மிருகங்கள் எல்லாம் சந்தோஷமா இருந்துச்சு ஆனா தனக்கு இருக்கிற குறையை பெருசு பண்ணி தனக்கு இருக்கிற நல்ல குணத்த ஏலம் செஞ்ச மிருகங்கள் பின்னால ரொம்ப கஷ்டப்பட தான் செஞ்சுச்சுங்க

அப்படித்தான் ராத்திரி பூரா முழுச்சிகிட்டு மரத்து மேல தலைகீழா தொங்குகிறது வவ்வால்களுக்கு அமைஞ்ச சாபம் கடவுள் படச்சப்ப வௌவால்களை ஒரு சாதார இறக்கை இருக்குற பறவை இனமாக தான் படைச்சாரு அது எல்லா பறவைகளோட காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு

காலையில விடிஞ்ச உடனே பறவைகள் கூட்டம் கூட்டமா பழங்கள் மரம் இருக்கிற பக்கம் போயி பழங்கள கொத்தி தின்னு தங்களுடைய பசியை ஆத்திக்கிறது தினசரி நடக்கிற விஷயமாத்தான் இருந்துச்சு ஆனால் காலப்போக்கில வேகமா பறந்து போயி பழங்களை முதல்ல கொத்தி திங்கிற பறவைகளுக்கு நல்ல பழங்களும் லேட்டா வருகிற பறவைகளுக்கு அழுகி போன பழங்களும் சரியா பழுக்காத காய்களும் தான் கிடைச்சுச்சு

இது காலப்போக்கில் பறவைகள் இனத்துக்குள்ள ஒரு போட்டியாவே மாறுச்சு அப்பத்தான் பறவையாக இருந்த வவ்வால் தினசரி லேட்டா போய் அழுகிப்போன பழத்தை மட்டும் சாப்பிட்டு இருந்துச்சு அதனால அதுக்கு கடவுள் மேல கோபம் வந்துச்சு கடவுளை வேண்டுமா எல்லாம் கிடைக்கும் அப்படின்னு இருக்கிறப்ப வவ்வால் மட்டும் கடவுள்கிட்ட போய் சண்டை போட்டுச்சு

எனக்கு ஏன் வேகமா பறக்க முடியாத அளவுக்கு திறமை இல்லாம படச்சீங்க அப்படின்னு சண்டை போட்டுச்சு,அந்த நேரம் முக்கியமான வேலையில் இருந்த கடவுள் உனக்கு என்ன வேணும்னு வேகமா சொல்றியா அப்படின்னு கோவத்துல கேட்டாரு அப்பத்தான் பறவையாக இருந்த வவ்வால் சொல்லுச்சு நான் இருட்டா விடிகிறதுக்கு முன்னாடியே பறக்குற ஆற்றல் வேணும் வேகமா பறக்கிற ஆற்றல் வேணும் வேகமா பழத்தை எல்லாம் பறவைகளுக்கு முன்னாடி சாப்பிடுற பாக்கியமும் எனக்கு வேணும் அப்படின்னு கேட்டது

கோவத்துல இருந்த கடவுள் அப்ப ராத்திரியில் பறக்கிற பறவையா உன்னை மாத்துறேன் வேகமாக நீ பிறக்கலாம் எந்த பழத்த நீ வேகமாக போய் புடுங்கனும்னு நெனச்சியோ அந்த மரத்திலேயே தலைகீழா தொங்கி வாழ்க்கை நடத்து அப்படின்னு சாபம் விடுற மாதிரி வரத்தை கொடுத்தார் அன்னையிலிருந்து ராத்திரி நேரத்திலையும் பகல் நேரத்தில் பல மரங்களில் வவ்வால்கள் தலைகீழா தொங்க ஆரம்பிச்சுடுச்சுங்க

–இது நகைச்சுவைக்காக குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை இதில் அறிவியல் உண்மைகள் இல்லை ,விலங்குகளில் பரிணாம வளர்ச்சி பத்தி படிசீங்கன்னா உங்களுக்கு உண்மையான காரணம் தெரியும் ,அத பத்தி நம்ம டார்வின் மாமா ஒரு புத்தகமும் எழுதி இருக்காரு