வரிக்குதிரையின் வரிகள் – அறிவியல் கதைகள் -The Stripes of Courage:why zebra have stripes

வரிக்குதிரையின் வரிகள் – அறிவியல் கதைகள் -The Stripes of Courage:why zebra have stripes:-வரிக்குதிரைகள் அழகழகான கருப்பு கோடுகளோட ரொம்ப அழகா இருக்கும் ஆனா முன்னாடி காலங்கள்ல அதுக்கு அந்த மாதிரி அழகான வரிகள் கிடையாது அப்ப எல்லாம் வரிக்குதிரை ஒரு வெள்ளை குதிரையாவே தான் இருந்துச்சு

The Plain White Horse of Old

குவா அப்படின்னு ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சி அந்தக் காட்டுல ஒரு மிகப்பெரிய கிணறு இருந்துச்சு அந்தக் கிணத்துல எப்பவும் சுவையான நல்ல தண்ணி குடிக்கிறதுக்கு கிடைக்கும் அதனாலேயே எல்லா காட்டுமிருகங்களும் அங்க வந்து தான் தண்ணி குடிக்கும்

The Majestic Forest Well

அதனாலயே அந்தக் கிணத்தை பொதுக் கிணறா அறிவிச்சிருந்தாங்க குவா காட்டுல வாழுற எல்லாம் மிருகங்களும், அப்படி இருக்கப்பத்தான் கவா காட்டுல இருந்து ஒரு மிகப்பெரிய ராட்சச குரங்கு அங்க வந்துச்சு குவா காட்டுல இருக்கிற குட்டி குட்டி குரங்குகள் கூட எட்டடிக்கு உயரமா இருந்த புது ராட்சச குரங்க பாத்து பயப்படத் தான் செஞ்சுச்சுங்க அதுங்க எல்லாம் புது ராட்சச குரங்கு கூட பேசக்கூட செய்யாம ஓடி ஒளிஞ்சுச்சுங்க

The Arrival of the Terrifying Giant

குரங்குகளே இப்படி பயப்படும்போது மத்த மிருகங்களை பத்தி சொல்லத் தேவையில்லை அதுங்களும் ஓடி ஒழிய ஆரம்பிச்சுசச்சுங்க இப்படி இருக்க பத்தா அந்த ராட்சச குரங்கு எல்லா மிருகங்களும் தண்ணீர் குடிக்கிற பெரிய கிணத்த பத்தி தெரிஞ்சுச்சுங்க அங்க போன ராட்சச குரங்கு அங்க இருக்கிற தண்ணிய பிடிச்சு குடிச்சு பார்த்துச்சு தன்னோட வாழ்நாள்ல அழுக்கு தண்ணிய மட்டுமே குடிச்சு வாழ்ந்த ராட்சச குரங்கு இப்படி ஒரு சுவையான தண்ணீர் கிடைத்ததும் ரொம்ப குஷி ஆயிடுச்சு உடனே இனிமே இந்த கிணறு எனக்கு தான் சொந்தம்னு சொல்ல ஆரம்பிச்சுடுச்சு

Fear Spreads and the Claim Begins

இனிமே இங்கு யாரும் தண்ணீர் குடிக்க வரக்கூடாது இனிமே நான் வச்சது தான் சட்டம் அப்படின்னு ஒரு பெரிய கல்லத் தூக்கி கிணத்து பக்கத்துல வச்சு அதுல தன்னோட பெயரை எழுதி வச்சுச்சு இனிமே யாரும் இதுல தண்ணி குடிக்க கூடாதுன்னு அந்த கல்லுல எழுதி வச்சிருந்துச்சு இதை பார்த்த எல்லாம் மிருகங்களும் ரொம்ப பயந்து போயி தண்ணி குடிக்க கூட வராம இருக்க ஆரம்பிச்சுச்சுங்க.

The Stone of Ownership

பஞ்சகலாம் ஆரம்பிச்சதும் அங்கு இருந்த எல்லாம் ஆறும் எல்லா நீர் நிலைகளும் வற்ற ஆரம்பிச்சுடுச்சு அப்பத்தான் பெரிய கிணத்துல மட்டும் தண்ணி இருக்கிறது அவங்களுக்கு தெரிஞ்சுச்சு எப்படியாச்சும் அங்க போய் தண்ணி குடிச்சிரணும் அப்படின்னு ஒரு நாள் முயற்சி செஞ்சு கூட்டமா அங்க போனாங்க. எல்லா மிருகங்களும் தண்ணி குடிக்க வந்தத பார்த்த ராட்சச குரங்கு கோபப்பட்டு எல்லாரையும் புடிச்சு கிணத்துக்குள்ள தூக்கி போட்டுருச்சு

Drought and Desperate Return

அந்தக் கிணறு ரொம்ப ஆழமா இருந்ததுனால யாருனாலும் மேலே ஏறி வர முடியல அப்பொழுதுதான் வெள்ளை குதிரை அந்தப் பக்கமா வந்துச்சு கிணத்துக்குள்ள இருந்து மிருகங்களோட சத்தம் அது காதில கேட்டுச்சு உடனே அவங்கள காப்பாத்தணும்னு நினைச்ச வெள்ளை குதிரை என்ன செய்யலாம்னு யோசிச்சு இந்த ராட்சசன் இருக்கிற வரைக்கும் நம்மளால கிணத்துல இருக்குறவங்கள காப்பாற்ற முடியாது அதனால ராத்திரி ஆகுற வரைக்கும் காத்துக்கிட்டு இருப்போம்னு சொல்லிட்டு அங்க இருந்த ஒரு பெரிய மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சு கிட்டு கிணத்தையே பார்த்துகிட்டு இருந்துச்சு.

Trapped and the Hero's Plan

ஒருவழியா ராட்சச குரங்கு தூங்குச்சு அப்பத்தான் ஒரு பெரிய கயிறு எடுத்துட்டு வந்து தன்னோட உடம்பு முழுவதும் கட்டிக்கிட்டு அதோட இன்னொரு முனையை கிணத்துக்குள்ள போட்டுச்சு வெள்ளை குதிரை அதை பிடிச்சு எல்லாம் மிருகங்களும் ஒவ்வொன்னா சத்தம் போடாம வெளியில வந்து தப்பிச்சாங்க அப்பத்தான் தூக்கம் கலஞ்சு எழுந்திருச்சு அந்த ராட்சச குரங்கு

Midnight Rescue

எல்லா மிருகங்களையும் வெள்ள குதிரை காப்பாற்றினத தெரிஞ்சுகிட்ட ராட்சச குரங்குக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு , வெள்ளை குதிரை கட்டியிருந்த கயித்துல தீய வைத்திருச்சு தீ உடனே வெள்ளை குதிரை மேல பரவிருச்சு இதை பார்த்த எல்லாம் மிருகங்களும் வெள்ளை குதிரைக்கு நம்ம உதவி செய்யணும்னு வேகமா ஓடி வந்தாங்க தீய அணைக்க பார்த்த அப்ப அதை தடுத்துச்சு ராட்சச குரங்கு

Flames of Betrayal

உடனே கோவமான எல்லாம் மிருகங்களும் அந்த ராட்சச குரங்க படிக்க அடிச்சு கிணத்துக்குள்ள தூக்கி போட்டுட்டாங்க அதே நேரத்துல தீயால வெள்ளைக் குதிரையோட உடம்பு முழுவதும் கருப்பு கோடுகள் உருவாச்சு, அதை பார்த்து தனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டுச்சு வெள்ளை குதிரை

Justice and the Stripes Emerge

அப்பத்தான் அங்க இருந்த எல்லா மிருகங்களும் சொன்னாங்க நீ இதுவரைக்கும் சாதாரண வெள்ளை குதிரை தான் இருந்த இப்பதான் நீ வெற்றி திருமகனா மாறிட்ட இனிமே இந்த கோடுகள் தான் உனக்கு தனி அடையாளமா தெரியும் இந்த கோடுகளை வைத்து தான் நீ எவ்வளவு பெரிய வீரங்கிறது இந்த உலகத்துக்கே தெரிய போகுது அப்படின்னு சொல்லி வெள்ளை குதிரையோட மனசு தேத்துசிங்க அன்னையிலிருந்து வெள்ளை குதிரை வரிக்குதிரையா மாறி சாதாரண குதிரைகளை விட அதிகம் பெரும் புகழோடு இருக்கு

The Medal of Honor

ஆனால் உண்மையில், ஜெப்ராவின் கோடுகள் பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்டவை. பல கோடுகள் கொண்ட ஜெப்ராக்கள் கொசுக்களும் ஈக்களும் கடிப்பதைத் தவிர்த்தன, ஏனெனில் அந்தக் கோடுகள் ஈக்களின் கண்களைக் குழப்பி, அவை ஜெப்ராவின் உடலில் தரையிறங்குவதைத் தடுக்கின்றன.

இந்த ஈக்கள் கொடிய நோய்களைப் பரப்புவதால், கோடுகள் உள்ள ஜெப்ராக்கள் அதிகம் உயிர் வாழ்ந்து, குட்டிகளைப் போட்டன. காலப்போக்கில், இயற்கைத் தேர்வு மூலம் அனைத்து ஜெப்ராக்களுக்கும் கோடுகள் வந்தன. இதுதான் விலங்குகளின் தோற்றம் மாறுவதற்கான அறிவியல் காரணம்!