யானையின் துதிக்கை – குவா காட்டு கதை -How the Elephant Got His Trunk: A Divine Tug-of-War:_உலகம் தோன்றியதற்கு அப்புறம் எல்லா மிருகங்களும் படிப்படியா பரிணாம வளர்ச்சியை அடைந்து இப்ப நம்ம பார்க்கிற காட்டு மிருகங்களாவும் வீட்டு மிருகங்களாவும் மாறி வந்துச்சுங்க,இது பல்லாயிர கணக்கான வருசமா நிகழ்ந்து பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறப்ப யானைகளுக்கு முதல்ல துதிக்க இல்லாம இருந்துச்சு யானைகள் இப்ப இருக்கிற மாதிரி குண்டா இருந்தாலும் அதுகளுக்கு பலம்கிறது சுத்தமா இல்லை லேசா யாராவது தள்ளிவிட்டா கூட கீழே விழுந்துருங்க இப்படி இருக்கப்பத்தான் அவங்க வாழற காட்டுல தண்ணி பஞ்சம் வந்துச்சு

காட்டுக்கு நடுவுல இருக்கிற ஒரே ஒரு குளத்துல மட்டும் தண்ணி இருக்கிறது தெரிஞ்சுகிட்ட காட்டு மிருகங்க எல்லாம் தினமும் அந்த குளத்திலேயே வந்து தண்ணி குடிச்சுக்கிட்டே இருக்கும் எல்லா மிருகங்களும் தண்ணி குடிக்கிறதுக்கு அந்த குளத்துல இட வசதியே இல்ல அதனால ஒரு மிருகத்தோட ஒரு மிருகம் சண்டை போட ஆரம்பிச்சுச்சுங்க

யான மெதுவா உட்கார்ந்து தன்னோட வாயால தண்ணி குடிக்க முயற்சி செய்கிறப்ப எல்லாம் ரொம்ப நேரம் ஆகிடும் அதுக்குள்ள மத்த மிருகங்கள் எல்லாம் தண்ணி குடிச்சிட்டு போறத வெறுமனே பார்த்து வருத்தப்பட்டுச்சு யானை எல்லா மிருகங்களும் சுலபமா தண்ணி குடிக்கிறப்ப தன்னால மட்டும் வேகமா தண்ணி அள்ளி குடிக்க முடியலையே அப்படின்னு வருத்தப்பட்டுச்சு யானை

அந்தக் குளத்துல ஒரு முதல இருந்துச்சு யானை எவ்வளவுதான் கஷ்டப்பட்டு குனிஞ்சு உட்கார்ந்து தண்ணி குடிக்கிறப்ப சரியா அந்த முதல யானையை கடிக்கிற மாதிரி வந்து அதை பயமுறுத்தும் பயத்துபோன யானை எந்திரிச்சு நின்னுக்கிடும் திரும்பவும் தண்ணி தாகம் எடுத்து கீழே உட்கார்ந்து தண்ணி குடிக்கலாம்னு போகிறப்ப திரும்பவும் அந்த முதல யானையை பயமுறுத்தும்

வேற குளத்துல தண்ணி இல்லாததுனால இந்த குளத்து தண்ணியத்தான் அந்த யானை குடிச்சே ஆகணும்கிற நிலைமை இந்த முதல தினமும் இப்படி செய்யறதுனால யானைக்கு போதுமான தண்ணி இல்ல அப்பத்தான் யானை கடவுள் கிட்ட வேண்டிக்கிடுச்சு தனக்கு சுலபமா தண்ணி கொடுப்பதற்கு வழி செய்யவும் போதுமான பலமும் வேணும் அப்படின்னு வேண்டிகிடுச்சு

இப்படி வருத்தத்தில் இருந்த யானை தொடர்ந்து கடவுள வேண்டும் அதனால ஒரு நாள் கனவுல விஷ்ணு பகவான் வந்து ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கிறப்ப தான் மிருகங்களோட குணங்கள் மாறுது நீ தொடர்ந்து என்ன வேண்டிக்கிட்டே இரு உனக்கு நடக்க வேண்டியது ஒரு சின்ன நிகழ்வுல கூட உன் வாழ்க்கை உன் வலிக்கு மாறிடும் அதுக்கு அப்புறம் நீ யாருக்கும் பயப்படாடம் உன் இஷ்டத்துக்கு வாழலாம் அப்படின்னு சொன்னாரு

கண்விழிச்சுப் பார்த்த யான கடவுள் தனக்கு வரம் கொடுத்து இருக்காரு அப்படின்னு நினைச்சுகிடுச்சு உடனே அதோட மனசுல பெரிய தைரியம் வந்துச்சு , இருந்தாலும் முதலய சந்திக்கிறதுக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செஞ்சுச்சு கடவுளே நமக்கு துணை இருக்கிறப்ப யாரை வேணாலும் சமாளிக்கலாம் அப்படின்னு ஒரு உத்திவேகம் யானைக்கு வந்துச்சு எல்லா மிருகங்களும் தண்ணீர் குடிக்கிற இடத்துக்கு வேகமா ஓடிப்போச்சு யானை

அங்க போயி குனிஞ்சு தைரியமா தண்ணி குடிக்க ஆரம்பிச்சுருச்சு துதிக்க இல்லாத யானை அப்பதான் அந்த முதல வந்து யானையை பயமுறுத்துச்சு இந்த முறை கடவுள் துணை இருக்கு அப்படின்னு நம்பிக்கையில எந்திரிக்காமல் மெதுவா தண்ணி குடிச்சிட்டு இருந்துச்சு யானை ,இத பார்த்த முதலை என்னடா இது? நம்மள பார்த்த உடனே பயந்து ஓடுற இந்த குண்டு பையன் இன்னைக்கு இவ்வளவு திமிரா தண்ணி குடிக்கிறானே அப்படின்னு யோசிச்சு

திருப்பி ஒருக்க பயம் காட்டிச்சு முதல இந்த தடவையும் யானை பயப்படாம இருக்கவும் தாவி யானையோட மூக்கை பிடிச்சு இழுத்துச்சு யானைக்கு வலி ஏற்பட்டுச்சு இருந்தாலும் கடவுள் துணை எனக்கு இருக்கு நான் எவனையும் சமாளிப்பேன் அப்படின்னு எழுந்து நின்னு முதலோட சேர்த்து மூக்கு ஆட்டு ஆட்டு நாட்டுச்சு அப்பத்தான் யானையோட மூக்கு நீண்டு துதிக்கையா மாறுச்சு

அதுக்கப்புறம் யானை நின்னுக்கிட்டே தண்ணிய உறிஞ்சு தன்னோட வாய்க்குள்ள ஊத்தி சுலபமா தண்ணி குடிச்சுச்சு சேட்டைக்கார முதல வந்தா தன்னோட துதிக்கையை வச்சு ஒரே அடி அடிச்சு முதலய பறக்க விட்டுச்சு, முதல பறந்து போயி தண்ணிக்கு நடுவுல விழுந்துருச்சு

யானைக்கு துதிக்க எப்படி வந்துச்சு நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை தான் இது புராண கதைகள் நிறைய கதைகள் ஏன் யானைக்கு துதிக்க பெருசா இருக்கு அப்படின்னு நிறைய கவிதைகள் இருக்கு ஆனா இது எதுவுமே அறிவியல் காரணங்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி கடைசியா நம்ம பாக்குற அழகான யானை வந்திருக்கு
