முல்லாவின் பதக்கம் – Mulla The Turban of a Scholar

முல்லாவின் பதக்கம் – Mulla The Turban of a Scholar:-முல்லாவோட அறிவுத்திறமைக்கு எல்லையே இல்ல, அவருடைய புகழ் உலகமெல்லாம் பரவி இருந்ததால அவரு வாழ்ந்து கிட்டு வந்த ஊர் பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து அவர் ரொம்ப படிச்சவருன்னு அவருக்கு ஒரு பதக்கம் கொடுத்தாங்க அதை ரொம்ப பெருமையா நினைச்சாரு முல்லா அதை எப்பவும் தன்னோட நெஞ்சில குத்திக்கிட்டே இருப்பாரு முல்லா

அப்படி இருக்க ஒருநாள் முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல ஒரு அஞ்சல் அலுவலகம் திறந்தாங்க அந்த ஊர்ல நிறைய பேரு படிக்காம இருந்ததுனால அவங்களுக்கு வர்ற கடிதத்தை படிக்கிறதுக்கும் ,கடிதம் எழுதுரத்துக்கும் முல்லா உதவி செஞ்சாரு சந்தையில வியாபாரத்தை முடிச்சதும் நேரா இங்க வந்து ஊர் மக்களுக்கு உதவி செஞ்சுட்டு தான் வீட்டுக்கு போவாரு

ஒரு நாள் ஒரு பெரியவர் முல்லா கிட்ட வந்து தனக்கு வந்த ஒரு கடிதத்தை கொடுத்து படிக்கச் சொன்னாரு உடனே கடிதத்தை வாங்கி பிரித்து பார்த்த முல்லா அதுல இருந்த கையெழுத்து ரொம்ப கிறுக்கலா இருந்தத பார்த்தாரு அதுல என்ன எழுதி இருக்குன்னு முல்லாவால வாசிக்க முடியல உடனே பெரியவரே என்னால உங்க கடிதத்தை வாசிக்க முடியல இதுல இருக்கிற எழுத்துக்கள் ரொம்ப கோணலாவும் கிறுக்கலாகவும் இருக்கு அப்படின்னு சொன்னாரு

ஆனா அந்தப் பெரியவருக்கு கோவம் வந்துருச்சு அட என்னப்பா உலகத்திலேயே நீதான் பணக்காரன்னு என்னமோ உனக்கு தான் பதக்கம் கொடுத்திருக்காங்க அதை தினமும் நெஞ்சிலே வீறாப்பா குத்திக்கிட்டு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு திரியுற இதைக்கூட படிக்க தெரியலனா நீ என்ன என்ன அறிவாளி அப்படின்னு கேட்டாரு

இதைக் கேட்டதும் முல்லாவுக்கு கோபம் வந்துருச்சு நெஞ்சில் குத்தி இருந்த பதக்கத்தை எடுத்து அந்த பெரியவருக்கு கொடுத்துட்டு இதை நெஞ்சில் குத்திக்கிட்டு அங்க போய் உட்காருங்க இனிமே ஊருக்குள்ள வர்ற கடிதம் எல்லாத்தையும் நீங்களே எல்லாருக்கும் படிச்சு குடுங்க அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து போயிட்டாரு

முல்லா அதி புத்திசாலியா இருக்குறதுனால தான் பதக்கம் கொடுத்திருக்காங்களே ஒழிய பதக்கத்தை மாட்டுனதுனால முல்லா அதிபுத்திசாலி இல்ல அப்படிங்கிறது அங்கு இருக்கிற எல்லாருக்கும் புரிஞ்சுச்சு