மாப்பிள்ளை தேடிய எலி குட்டி -The Sun,the Wind, the Wall, and the Mouse

மாப்பிள்ளை தேடிய எலி குட்டி -The Sun,the Wind, the Wall, and the Mouse:-ஒரு காட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பெரிய கிராமத்துல ஒரு பண்ணை வீடு இருந்துச்சு அந்தப் பண்ணை விட்டு ஓரமா ஒரு எலி வலை இருந்துச்சு அங்க ஒரு எலி குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

Village and Mouse Home

அப்பத்தான் ஒரு எலிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துச்சு அது பிறக்கும்போதே ரொம்ப அழகா இருந்ததுனால அதோட அம்மா எலி அத ரொம்ப பாதுகாப்பா வளத்துச்சு, இந்த உலகத்திலேயே தன்னோட மகள் தான் ரொம்ப அழகானவன் அப்படி என்ற ஒரு எண்ணம் அம்மா எலிக்கு வந்துச்சு

Village and Mouse Home

ஒவ்வொரு நாளும் தன்னுடைய மகளை புதுப்புது உடைகள் உடுத்தி புதுப்புது அலங்காரம் செஞ்சி அதோட அழக ரசிச்சுச்சு அம்மா எலி இப்படியே கொஞ்ச காலம் கழிச்சு அந்த குட்டி எலி வளர்ந்து ராஜகுமாரி மாதிரி அழகா மாறிடுச்சு

The Beautiful Birth

அப்பத்தான் அந்த அம்மா எலி தன்னோட மகள் எலிக்கு இந்த உலகத்திலேயே அழகான மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும் அப்படின்னு சொல்லுச்சு, இப்படி இருக்கப்பத்தான் பக்கத்து வீட்டுல வசித்துக்கொண்டு வந்த ஒரு தாத்தா எலி அங்க வந்துச்சு என்னுடைய பேரன் உன்னுடைய மகள் மாதிரியே அழகானவன் அதோட நிறைய அறிவும் வளமும் உடையவன் அவனுக்கு உன்னுடைய மகளுக்கு கல்யாணம் செஞ்சு கொடு அப்படின்னு சொல்லிச்சு அந்த தாத்தா எலி

 Daily Adornments and Growth

தன்னுடைய மகளோட அழக ரொம்ப பெருமையா நினைச்சுக்கிட்டு இருந்த அந்த அம்மா எலி இல்லை இல்லை இந்த உலகத்திலேயே அதிக வலுவுடைய அதிக பலம் உடைய ஒருத்தருக்கு தான் நான் என்னுடைய மகளை திருமணம் செய்து கொடுப்பேன் அப்படின்னு சொல்லுச்சு இதைக் கேட்ட அந்த தாத்தா எலி ஒண்ணுமே சொல்லாம அங்க இருந்து போயிடுச்சு

The Groom Proposal

மறுநாள் தன்னுடைய மகளுக்கு நல்ல மாப்பிள்ளை தேடி கண்டுபிடிக்கிற அவசரத்துல வெளியில வந்த அம்மா எலி சூரியன் தகதகன்னு மின்னுறத பார்த்துச்சு உடனே சூரியரே சூரியரே உங்கள் அழகுக்கு மிகவும் பொருத்தமா என்னுடைய மகள் இருப்பா அவள தயவு செஞ்சு நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க ஏன்னா நீங்க தான் இந்த உலகத்திலேயே திறமைசாலி பலசாலி அப்படின்னு சொல்லுச்சு

The Refusal

இதைக் கேட்ட சூரியன் சொல்லுச்சு நான் என்னவோ மிகவும் பலசாலி தான் ஆனால் என்ன மறைக்கிற சக்தி உள்ள இந்த மேகங்கள் தான் என்ன விட பலசாலின்னு எனக்கே தெரியுது அதனால உன்னுடைய குட்டி மகளை செல்ல மகளை அழகிய மகளை அந்த மேகத்துக்கு கல்யாணம் செஞ்சு வை அப்படின்னு சொல்லுச்சு

Seeking the Sun

இதைக் கேட்ட அம்மா எலிக்கு ஓஹோ இந்த உலகத்திலேயே சூரியன மறைக்கிற அளவுக்கு திறமை இருக்கிற மேகம் தான் தன்னோட மகளுக்கு சரியான மாப்பிள்ளையாக இருக்க முடியும்னு நினைச்சுச்சு நேரா மேகத்துக்கிட்ட போயி தன்னுடைய அழகான மகளை கல்யாணம் செஞ்சிக்க படி கேட்டுச்சு

 Sun's Humility

அதுக்கு மேகம் சொல்லுச்சு நான் வேணா சூரியனை மறைக்கிற அளவுக்கு திறமை உள்ளவனா இருக்கலாம் ஆனா என்னையும் சுலபமா நகர்த்தி அங்கேயும் இங்கேயும் அலைய வைக்கிற சக்தி காற்றுக்குத்தான் உண்டு அதனால நீ காத்த கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேளு அப்படின்னு சொல்லுச்சு  மேகம்

Approaching the Clouds

அப்பத்தான் அம்மா எலி நினைச்சுச்சு வானத்தில் மிதக்கிற மேகத்தையே தள்ளி விடுற சக்தி உடைய காத்துதான் தன்னுடைய அழகிய மகளுக்கு மாப்பிள்ளையா இருக்க முடியும் அப்படின்னு சொல்லுச்சு உடனே நிறைய ஆசையோட காத்து கிட்ட போயி தன்னுடைய மகளை கல்யாண செஞ்சுக்கிட சொல்லி கேட்டுச்சு

Clouds' Wisdom

இதை கேட்ட காத்து சொல்லுச்சு நான் வேணா மேகத்தையே பிடிச்சு தள்ளலாம் ஆனால் இங்கே இருக்கிற ஒரு சுவர கூட என்னால தள்ள முடியாது அதனால அந்த செவத்துக்கு உன்னுடைய மகளை கல்யாணம் செஞ்சு குடு அப்படின்னு சொல்லுச்சு காத்து

Chasing the Wind

காத்தையே தடுக்கிற அளவுக்கு அரணா இருக்கிற சுவத்தையே தன்னுடைய மகளை கல்யாணம் செய்து கொடுக்கலாம்னு நினைச்சுச்சு அம்மா எலி . நேரா சுவத்துக்கிட்ட போயி தன்னுடைய விருப்பத்தை சொல்லுச்சு அப்பத்தான் அந்த சுவர் சொல்லுச்சு நான் வேணா காத்தயே தடுத்து பலசாலின்னு பேர் எடுத்து இருக்கலாம் எனக்கு கீழே இருக்கிற உன்னை மாதிரி எலிகள் தான் பள்ளம் தோண்டி எவ்வளவு பெரிய சுவரையும் ஓட்ட போட்டு கீழ சாய்க்குது அதனால எனக்கு கீழ வாழுற ஒரு எலிக்கு கல்யாணம் செஞ்சு கொடு அப்படின்னு சொல்லுச்சு

Wind's Admission

அப்பத்தான் அந்த சுவத்துக்கு கீழ ஒரு எலி வலை இருக்கிறத பார்த்துச்சு சோகமான அம்மா எலி அதுக்குள்ள போச்சு அங்க தன்னிடம் மாப்பிள்ளை கேட்டு வந்த பெண் கேட்டு வந்த அந்த மாப்பிள்ளை யோட தாத்தா உக்காந்து இருந்தாரு

The Wall's Revelation

சோகமா இருந்த அம்மா எலிக்கு ஆறுதல் சொல்லி தன்னுடைய பேரனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தாரு அந்த தாத்தா

 Homecoming and Union

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையும் ஒவ்வொரு பலமும் இருக்குன்னு சைனா போன்ற நாடுகள்ல சொல்லப்படுற கிராமிய கதை இது

The Moral Lesson

1 thought on “மாப்பிள்ளை தேடிய எலி குட்டி -The Sun,the Wind, the Wall, and the Mouse”

Comments are closed.