பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish:_பிரம்மா உலகத்தை படைச்சதும் அடுத்ததா எல்லா மிருகங்களையும் படைக்க ஆரம்பிச்சாரு ஒவ்வொரு மிருகத்தையும் படச்சதும் அவர்களுக்கான குணாதிசயங்களை தன்னோட குறிப்பேட்டில் எழுதிட்டு தான் பூமிக்கு அனுப்பி வச்சிக்கிட்டு இருந்தாரு அவரு

முதல்ல எல்லா மிருகத்தையும் படைச்சு முடிச்சுட்டு பூமிக்கு அனுப்பறதுக்கு முன்னாடி தனித்தனியா கூப்பிட்டு உனக்கு இந்த இந்த குணாதிசயங்கள் தான், இது மாதிரி எல்லாம் பின்பற்றினாய் என்றால் உன் வாழ்க்கையில நல்லா இருக்கலாம் அப்படின்னு சொல்லித்தான் பூமிக்கு அனுப்பிச்சாரு பிரம்மா

அப்படித்தான் முதல்ல படைச்ச சிங்கத்தை கூப்பிட்டு உனக்கு வலிமையை தர்றேன் வலிமையை தவறா பயன்படுத்தாம உனக்கு சாப்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்து அப்படின்னு சொல்லிட்டு அதை தன்னுடைய குறிப்பேட்டில் எழுதி வச்சுக்கிட்டு சிங்கத்தை பூமிக்கு அனுப்பிச்சாரு

அப்ப பச்சோந்திக்கு நிறம் மாறுற திறமை இல்லை வெறும் சாம்பல் நிறத்தில தான் இருந்துச்சு அந்த பச்சோந்தி சிங்கம் பூமிக்கு போறதுக்கு முன்னாடி சிங்கத்து கிட்ட வந்து உங்க தோள் நிறம் ரொம்ப அழகா இருக்கு நீங்க தான் பிரம்மா படச்சதுலையே மிக அழகானவரு அவர் மனிதர்களை படைக்கும் போது கூட இவ்வளவு திறமையை பின்பற்றல அப்படின்னு சொல்லி சிங்கத்துக்கு ஐஸ் வச்சுச்சு

அடுத்ததா புலியை கூப்பிட்டு அதோட குணாதிசயங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தாரு பிரம்மா அத நோட்டில் அவர் எழுதும் போது பக்கத்துல இருந்த பச்சோந்தி பேச ஆரம்பிச்சுச்சு அடடா சிங்கத்துக்கு நிகரான அழகு இருக்குமானு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா உங்களுக்கு அத விட அழகு அதிகமா இருக்கு உங்க ஆரஞ்சு நிறம் ரொம்ப அருமையா இருக்கு எனக்கு கூட இந்த தோள் நிறம் கிடைச்சா ரொம்ப அழகா இருக்கும்னு விரும்புறேன் அப்படின்னு சொல்லி புலியையும் காக்கா பிடிச்சுச்சு

அடுத்ததா கரடிகளை கூப்பிட்டு அதுகளுக்கு குறிப்பு எழுதிகிட்டே குணாதிசயங்களை பத்தி பேச ஆரம்பிச்சாரு இப்பயும் அந்த பச்சோந்தி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாம கரடியாரே உங்களுக்குத்தான் மிகப் பொருத்தமான நிறத்தை கடவுள் கொடுத்திருக்கிறார் அப்படின்னு சொல்லி ஐஸ் வச்சுச்சு

அப்பத்தான் பிரம்மா நினைச்சாரு இந்த பச்சோந்திக்கு நம்ம படைச்சதை விட வேற ஒவ்வொருத்தர் கிட்டையும் வெவ்வேற மாதிரி பேசுற குணமும் பச்சோந்தித்தனமும் இருக்கு அப்படின்னு சொல்லி அதோட குணத்தை குறிப்பிட்டு எழுதிக்கிட்டு இருக்கும்போதே அவருக்கு தூக்கம் வந்துருச்சு குறிப்பேட்ட அப்படியே வச்சுட்டு தூங்க போயிட்டாரு பிரம்மா

பிரம்மா தனக்கு என்ன நிறம் கொடுக்கப் போறாரு அப்படின்னு யோசனையிலேயே இருந்த பச்சோந்தி குறிப்பேட்டு மேல ஏறி உட்கார்ந்து கொண்டு வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டு இருந்துச்சு , சரியா விடிய ஆரம்பித்ததும் வானத்தில் வானவில் தோன்றியது அதை பார்த்த உடனே ஒவ்வொரு நிறமா சொல்லுச்சு முதல்ல எனக்கு சிகப்பு நிறம் தான் வேணும் அப்படின்னு கேட்டுச்சு அடுத்த இல்லை எனக்கு மஞ்சள் நிறம் தான் வேணும் நான் பச்சை நிறமாக தான் மாறுவேன் எனக்கு எனக்கு சிகப்பு நிறம் தான் வேணும் அப்படின்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு

பிரம்மாவோட குறிப்பேட்டு மேல உக்காந்து இப்படி கேட்டதுனாலே என்னவோ பச்சோந்திக்கு ஒவ்வொரு தடவையும் நிறம் மாறுற சக்தி வந்துருச்சு அப்பத்தான் எந்திரிச்சு வந்த பிரம்மா நடந்தத பார்த்தாரு தெரிஞ்சோ தெரியாமலோ நிறம் மாறுற தன்மை உனக்கு வந்துருச்சு இது உனக்கு வரமோ சாபமோ எனக்கு தெரியாது ஆனால் உன்ன மாதிரியே ஒவ்வொருத்தர்டையும் ஒவ்வொரு மாதிரி பேசி நடித்து தங்களுடைய வாழ்க்கையை நடத்துற எல்லாருக்கும் உன் பேர சொல்லி தான் கூப்பிடுவாங்க

இந்த கெட்ட பெயர் நீ வாழ்ற காலம் முழுசு உனக்கு இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு பூமிக்கு அனுப்பிச்சாரு அன்னையிலிருந்து திருட்டுத்தனம் பண்றவங்களுக்கும் அடுத்தவங்கள உசுப்பேத்தி விடுபவங்களுக்கும் அடுத்தவங்கள நயவஞ்சகம் செய்கிறவங்களுக்கும் பச்சோந்தின்னு சொல்லி பச்சோந்தி என்ற வார்த்தையை கெட்ட வார்த்தையா மாத்திட்டாங்க
