நன்றி சொன்ன அணில் -Kiya’s Brave Forest Adventure!:-குவா காட்டுல நிறைய குட்டி குட்டி மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க இருந்தாலும் அந்த காட்டுல வேட்டையாடி சாப்பிடுற மிருகங்கள் குறைவா இருந்துச்சு அதனால குவா காட்டுல வாழ்ந்துகிட்டு இருந்த குட்டி குட்டி காட்டு மிருகங்களுக்கு ரொம்ப பயமே கிடையாது

அந்த குட்டி மிருகங்கள் எப்பவும் சுதந்திரமா காட்டுக்குள்ள திரிஞ்சிச்சுங்க,சுதந்திரமா உணவு தேடி சாப்புட்டுச்சுங்க, சுதந்திரமா நண்பர்களோடு சேர்ந்து விளையாடுறதுமா ரொம்ப சந்தோசமாக இருந்துச்சுங்க ,கால போக்குல அதுங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாம போய்டுச்சு

அந்தக் காட்டுக்குள்ள தான் கியா அப்படின்னு ஒரு குட்டி அணில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த அணில் பிறக்கும்போதே வாய் பேச முடியாத ஊமையா பறந்துச்சு, இருந்தாலும் அந்த அணில் தன்னோட அதிகப்படியான மோப்ப சக்தி திறனாள எங்க என்ன நடக்குது அப்படின்னு சுலபமா தெரிஞ்சுகிடுச்சு

கியா அணிலோட இந்தத் திறமை அங்க இருந்த குட்டி மிருகங்களிடையே ரொம்ப பிரபலமா இருந்துச்சு ஏன்னா எந்த பக்கம் போனா தங்களுக்கு சாப்பிடுறதுக்கு பழம் கிடைக்கும், எந்த பக்கம் போனா சுலபமா நமக்கு குடிக்கிறதுக்கு தண்ணி கிடைக்கும் அப்படின்னு தன்னுடைய மோப்பம் பிடிக்கிற திறமையால எல்லாம் மிருகங்களுக்கும் கண்டுபிடித்து சொல்லி உதவி பண்ணிக்கிட்டு இருந்துச்சு

அந்த கியா அணிலுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்துச்சு கியா அணில் கூட இருந்த நண்பர்கள் செஞ்ச சின்ன சின்ன உதவிகளுக்கு கூட அது நன்றி சொல்லிக்கிட்டே இருந்துச்சு,கியா அணில்னால வாய் பேச முடியாததுனால யாரு கிட்ட நன்றி சொல்லணுமோ அவங்களுக்கு பக்கத்துல எந்த பொருள் இருக்கோ அதுல நன்றின்னு எழுதி காமிச்சு தன்னோட நன்றியை காமிச்சுச்சு இப்படி எல்லாம் மிருகங்களுக்கும் நன்றி சொல்லிக்கிட்டே இருந்த கியா அணில அங்க இருந்த எல்லா மிருகங்களுக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு

நல்ல திறமையோடு இருக்கிற ஒரு சில காட்டு மிருகங்கள் திமிர்த்தனமா நடந்துகிட்டு இருக்கிறத அங்கே இருந்தவர்கள் தெரிஞ்சு வச்சிருந்தாங்க ,ஆனா அவங்கள எல்லாம் போல இல்லாம நல்ல மோப்ப சக்தியோட நல்ல ஓடுற சக்தியோடவும் இருந்த கியா அணில் அங்க இருக்கிற எல்லாரும் போற்றி பாதுகாத்தாங்க

தன்னோட நல் மதிப்பையும் நல்ல திறமையாளையும் புகழ்ல இருந்த கியா அணிலுக்கு பக்கத்துக் காட்ட சுத்தி பார்க்கணும்னு தோணுச்சு உடனே பக்கத்துல இருந்த கவா காட்டுக்கு சுற்றுலா போச்சு

அப்படி இருக்கிறபத்தா ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு வேட்டை நாய் கூட்டம் குவா காட்டுக்குள்ள வந்துச்சுங்க வேட்டையாடுறதுக்கு ஆள் இல்லாமல் குட்டி குட்டி மிருகங்கள் சுதந்திரமா காட்டுக்குள்ள ஓடி திரிகிறத பார்த்த அந்த வேட்டையாடி சாப்பிடற வேட்டை நாய்கள் ரொம்ப சந்தோஷ பட்டுச்சுங்க

உடனே வேகமா ஓடி வந்த அந்த வேட்டை நாய்கள் ஒரு முயல பிடிச்சு தின்னுச்சிங்க அப்பத்தான் அந்த வேட்டை நாய்களோட தலைவன் சொல்லுச்சு நாம கிராமத்திலும் மத்த காட்டுலையும் வேட்டையாடி அலைஞ்சோம்னா நமக்கு ஒரு நாளைக்கு ஒரு மிருகம் கூட கிடைக்க மாட்டுது பல நாள் அழஞ்சோம்னாத்தான் வேட்டையாடுறதுக்கு கூட ஒரு நல்ல மிருகம் கிடைக்காது

ஆனா இந்த குவா காட்டுக்குள்ள எங்க பாத்தாலும் குட்டி குட்டி மிருகங்கள் சுதந்திரமா நடமாடுது நம்ம இனிமே தினமும் கிராமத்திலிருந்து இங்க வந்து வேட்டையாடி நல்லா சாப்பிடலாம் அப்படின்னு சொல்லுச்சு

இதை கேட்ட எல்லா வேட்டை நாய்களும் சத்தம் போட்டு கொலைச்சு தங்களோட தலைவர் சொன்னத ஆமோதிச்சிதுங்க

அன்னையிலிருந்து தினமும் அந்த வேட்டை நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து குட்டி குட்டி காட்டு மிருகங்களை பிடித்து வேட்டையாடி சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சுங்க இப்படியே இருந்தா நம்ம மொத்தமா அழிஞ்சு போயிடுவோம்னு நினைத்த குட்டி மிருகங்கள் எல்லாம் நம்மையெல்லாரும் கொஞ்ச நாளைக்கு குவா காட்டுல இருந்து கவா காட்டுல போயி தங்கலாம்னு நினைச்சுச்சுங்க

அப்படி இருக்கிறப்ப ஒரு நாள் வழக்கத்தை விட நிறைய வேட்டை நாய்கள் குவா காட்டுக்குள்ள வர்றத மரத்து மேல இருந்து பார்த்த குரங்குகள் வேகமா எல்லாம் மிருகங்களையும் எங்கேயாவது போய் ஒளிங்க இல்ல கவா காட்டுக்கு வேகமா போங்க அப்படின்னு சொல்லுச்சுங்க

இதைக்கேட்ட எல்லா குட்டி குட்டி மிருகங்களுக்கும் ரொம்ப பயம் வந்துருச்சு எப்படி நம்ம கவா காட்டுக்கு பயணம் போறது நமக்கு சரியான பாதையும் தெரியாது,அது எவ்வளவு தூரத்துல இருக்கு ,எந்த திசையில இருக்குனு கூட தெரியாது அப்படின்னு அவங்களுக்குள்ள பேசுங்க அப்பத்தான் மரத்து மேல இருந்து இறங்கி வந்த ஒரு வயசான குரங்கு துணிந்தவனுக்கு தான் இந்த உலகம் வாங்க நாம எல்லாரும் ஏதாவது ஒரு பாதையில போவோம் ,துணிவான ஆரம்பம்தான் முக்கியம்னு சொல்லுச்சு

அங்கேயும் வேட்டை நாய்கள் வந்துச்சுன்னா சில மிருகங்களை பிடிச்சு திங்கத்தான் செய்யும் ,அப்படி இல்லாம இங்கேயே இருந்தோம்னா நம்ம கூட இருக்கிற எல்லா மிருகங்களையும் அந்த வேட்டை நாய்கள் தின்னுடும் அதனால ஏதாவது ஒரு பக்கம் நடந்து போக ஆரம்பிப்போம் கடவுள் அருளால நமக்கு சரியான நல்ல பாதை கிடைக்கும் அப்படின்னு சொல்லுச்சு

வயசான குரங்கோட சொல்பேச்ச கேட்ட காட்டு மிருகங்கள் குத்துமதிப்பா ஒரு பாதையில நடக்க ஆரம்பிச்சுசுங்க,அந்த வயசான குரங்கும் அவுங்களுக்கு தொணைக்கு பின்னாடியே போச்சு , அவுங்க அப்படி போறப்பத்தான் ஒரு இடத்தில இருந்த ஒரு பாறையில் நன்றின்னு எழுதி இருந்துச்சு அதை பார்த்துக்கிட்டே நடந்த காட்டு மிருகங்கள் கொஞ்ச தூரத்துக்கு அப்புறம் ஒரு உடைஞ்சி போன மண் பானையில நன்றின்னு எழுதி வெச்சிருக்கறதையும் பார்த்துச்சுங்க

அப்பத்தான் அந்த காட்டு மிருகங்களுக்கு தெரிஞ்சது கவா காட்டுக்கு ஊர் சுற்றி பார்க்க போன கியா அணில் இங்க யார்கிட்டயோ நன்றி சொல்லிக்கிட்டே போய் இருக்கு அதனால பேச முடியாதனால பாறை மேலேயும் உடைஞ்ச பானை மேலேயும் நன்றின்னு எழுதி வெச்சிருக்கு அப்ப இதுதான் கவா காட்டுக்கு போறதுக்கு சரியான பாதை வேகமா எல்லாரும் வாங்க நம்ம கியா அணில் நன்றினு எழுதி வைச்சிருக்கிற எல்லாத்தையும் பின் தொடர்ந்து போனோம்னா நம்ம சுலபமா கவா காட்டுக்கு போயிடலாம் அப்படின்னு அந்த வயசான குரங்கு சொல்லுச்சு

அந்த மிருகங்கள் கொஞ்சம் தூரம் போனதுக்கு அப்புறமா ஒரு மரத்துல நன்றினு எழுந்திருந்துச்சு அதை பார்த்த உடனே இந்த வயதான குரங்கு சொல்லுச்சு , வேகமா வாங்க நம்ம சரியான பாதையில் தான் போய்கிட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லுச்சு உற்சாகமான எல்லா மிருகங்களும் குடுகுடுன்னு அந்த வயசான குரங்குக்கு பின்னாடி ஓட ஆரம்பிசுச்சுங்க

கிட்டத்தட்ட நூறு நன்றி வார்த்தைகள் எழுதி வைத்திருக்கிறதைப் பார்த்துக்கிட்டே போன காட்டு மிருகங்கள் கடைசியா கவா காட்டுக்கு நடுவுல போயி நின்னாங்க அவங்க நின்ன இடத்துல ஒரு குட்டி எலி வலை மாதிரி ஒரு சின்ன குகை தெரிஞ்சுச்சு அதுக்குள்ள இருந்து எல்லோருக்கும் நன்றி சொன்ன கியா அணில் வெளியே வந்துச்சு

குவா காட்டுல இருக்க வேண்டிய எல்லா மிருகங்களும் தன்னோட வீட்டுக்கு முன்னாடி அதுவும் கவா காட்டுல இருக்குறத பார்த்ததும் கியா அணிலுக்கு ஒண்ணுமே புரியல பேந்த பேந்த முழிச்சுச்சு,அப்பத்தான் அங்க இருந்த எல்லாம் மிருகங்களும் கியா அணிலுக்கு நன்றி நன்றினு சொல்லிக்கிட்டே இருந்துச்சுங்க நான் என்ன செஞ்சுட்டேனு இந்த குட்டி குட்டி குட்டி மிருகங்கள் நன்றி சொல்லுதுங்கனு கூட கியா அணிலுக்கு புரியல

அப்பத்தான் அந்த வயசான குரங்கு சொல்லுச்சு உன்னோட நன்றி சொல்லுற பழக்கத்து காரணமா தான் இன்னைக்கு குவா காட்டில இருக்கிற எல்லா குட்டி மிருகங்களும் உயிர் தப்பிச்சோம் அப்படின்னு சொல்லிட்டு நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் ஒன்று விடாமல் சொல்லுச்சு

அப்பத்தான் அவங்க யாரு எதிர்பார்க்காத ஒன்று நடந்துச்சு அங்க ஒரு புலியும் கரடியும் வந்து நின்னுச்சுங்க ,அடடா வேட்டையாடி சாப்பிட நாய்கள் கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது இவ்வளவு பெரிய வேட்டையாடி சாப்பிடற மிருகத்துங்ககிட்ட மாட்டிக்கிட்டமே அப்படின்னு நினைச்சுசுங்க அப்பத்தான் அந்த பெரிய கரடி பேசிச்சு பயப்படாதீங்க நண்பர்களே

நாங்க இந்த கியா அணிலோட நண்பர்கள் எப்போதும் நன்றி சொல்லி நல்ல புள்ளைய இருக்குற இந்த கியா அணில் கூட நாங்க சுலபமா அதோட நண்பனா மாறிட்டோம் ,அதனால அதோட நண்பர்களான நீங்களும் எங்களுக்கு நண்பர்கள் தான் உங்களுக்கு நாங்க என்ன உதவி செய்யணும் அப்படின்னு கேட்டுச்சிங்க புலியும் கரடியும் , அப்பத்தான் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்லுச்சு வயசான குரங்கு

உடனே கோபமான புலியும் கரடியும் காட்டுக்குள்ள வேட்டையாடுறதுக்குத்தான் காட்டு மிருகங்கள் இருக்கு அத விட்டுட்டு கிராமத்தில் இருக்கிற மிருகங்கள் காட்டுக்குள்ள வந்து வேட்டையாடுவதை ஒரு நாளும் ஏத்துக்க முடியாது அப்படி செஞ்சா காட்டோட நிலை குலைந்து போகிடும் அப்புறம் காட்டுல வேட்டையாடி சாப்பிட மிருகங்கள் மட்டும்தான் இருக்கும் அது குவா காட்டுக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா காட்டுக்கும் நல்லது இல்ல அப்படின்னு சொல்லுச்சுங்க

உடனே எல்லோரும் சேர்ந்து திரும்ப குவா காட்டுக்கு வந்தாங்க இந்த தடவை தங்களுக்கு துணைக்கு புலியும் கரடியும் இருக்கிறதுனால வேட்டையாட வந்த கிராமத்து நாய்களை சுலபமா துரத்திட்டு தங்கள் காட்டையே நல்ல சுதந்திரமான இடமா மாத்திக்கிட்டு அங்கேயும் ரொம்ப சந்தோசமா வாழ்ந்தாங்க எல்லாரும்
