நண்பர்களை தூக்கிய கரடி-Balu the Bear’s Heartwarming Transformation: From Lonely Cub to Joyful King of the Guava Forest

நண்பர்களை தூக்கிய கரடி-Balu the Bear’s Heartwarming Transformation: From Lonely Cub to Joyful King of the Guava Forest:-முன்னொரு காலத்துல இருந்த மிகப்பெரிய குவா காட்டுக்குள்ள பாலுன்னு ஒரு கரடி வாழ்ந்துகிட்டு வந்துச்சு

Balu Arrives in the Guava Forest

அந்தக் கரடி வழக்கமா இருக்கிற எல்லா கரடிகளையும் விட ரொம்ப குண்டா இருந்துச்சு அதைப் பார்த்த மத்த மத்த கரடிகள் மட்டும் இல்லாம குவா காட்டுல வாழ்ந்துகிட்டு இருந்த சின்ன சின்ன மிருகங்கள் கூட கிண்டல் செய்ய ஆரம்பிச்சுடுச்சுங்க

Teasing in the Forest

பாலு கரடி இத பத்தி எல்லாம் கவலைப்படாம அதோட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டே இருந்துச்சு தன்னம்பிக்கையோட , ஒரு நாள் பாறை மேல இருக்கிற தேன்கூட்ல இருந்து நிறைய தேன குடிச்ச பாலு கரடி அந்த பாறை மேலே படுத்துகிட்டு வானத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்துச்சு

 Balu's Carefree Day

அப்பத்தான் ஒரு பெரிய பருந்து வானத்தில் பறக்கிறத பார்த்துச்சு உடனே ஏ பருந்தே இங்க வா அப்படின்னு கூப்பிடுச்சு உடனே அந்த பருந்து பாலு கரடிக்கு பக்கத்துல இருக்கிற பெரிய மரத்தில வந்து உட்கார்ந்துச்சு எனக்கும் உங்களை மாதிரி பறக்கணும்னு ஆசையா இருக்கு அதுக்கு உதவி செய்யுங்க அப்படின்னு சொல்லுச்சு பாலு கரடி

Calling the Eagle

அத கேட்ட பருந்து மட்டும் இல்லாம அங்க இருந்த எல்லா பறவைகளும் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சுங்க பறவைகளோட சிரிப்ப கேட்ட பக்கத்துல சாப்பிட்டுகிட்டு இருந்த குவா காட்டு மிருகங்கள் எல்லாம் என்ன ஏன் இப்படி சிரிக்கிறீங்க அப்படின்னு கேட்டுச்சுங்க அப்பத்தான் அந்த பருந்து சொல்லுச்சு இந்த குண்டு பயலுக்கு வானத்துல பறக்கணுமானு

Birds Burst into Laughter

பறக்குறதுக்காகவே படைக்கப்பட்ட எங்களுக்கே உடம்பு கொஞ்சம் கூடிட்டா வானத்துல பறக்குறது ரொம்ப கஷ்டம் இதுல தரைவால் மிருகமான இந்த பாலு கரடி வானத்துல எப்படி பறக்கும் அப்படின்னு கிண்டல் செஞ்சு அன்னைக்கு முழுசும் சிரிச்சுக்கிட்டே இருந்துச்சுங்க காட்டு மிருகங்கள்

Mocking Balu's Dream

காட்டோட நிலைமை இப்படி இருக்கிறப்பத்தா வெயில் காலம் ஆரம்பிச்சுச்சு குவா காட்டுல இருந்த பெரிய பெரிய மரங்கள் எல்லாம் காஞ்சி போயி பசுமையே இல்லாம இருந்துச்சு அப்ப அங்க வந்த வேட்டைக்காரர்கள் வேட்டையாடி முடித்ததோட இல்லாம சமைக்க ஆரம்பிச்சாங்க சமைச்சு சாப்பிட்ட அவங்க சமைக்க பயன்படுத்தின தீ அடுப்ப அணைக்காமலேயே போயிட்டாங்க

Summer Drought and Hunters

அவங்க போனதுக்கு அப்புறம் அந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்துல இருந்த இலை தலைகள் மேலே விழுந்து குவா காட்டுல இருக்க பெரிய பெரிய மரங்கள் எல்லாத்தையும் தீப்பிடித்து எரிய ஆரம்பிச்சிருச்சு அப்ப அங்க இருந்த பறவைகளால் கூட அந்த பெரிய மரங்களை தாண்டி பறக்க முடியல வானம் முழுசும் கரும் புகையா எரிஞ்சுகிட்டு இருந்துச்சு

The Fire Spreads

அப்பத்தான் அந்த பகுதியில் வாழ்ந்துகிட்டு இருந்த எல்லா பறவைகளும் தரையிலேயே மொத்தமா ஒன்னு சேர்ந்துச்சுங்க இப்ப நம்மல யாராவது காப்பாத்துனா தான் உயிர் தப்பிக்க முடியும் நம்மளால சுயமா பறந்து தப்பிக்க முடியாத நிலையில இருக்கோம் அப்படின்னு சொல்லுச்சுங்க, தங்கள யாராவது காப்பாத்த வருவாங்க அப்படிங்கிற ஆவல்ல சத்தம் போட்டு கத்த ஆரம்பிச்சுச்சுங்க அந்த பறவைகளும் அவங்க கூட இருந்த குட்டி குட்டி காட்டு மிருகங்களும்

Animals in Despair

அப்பத்தா ஒரு பெரிய பாறை அசையுற சத்தம் கேட்டுச்சு எல்லா மிருகங்களும் பறவைகளும் அந்த பாறை அசையிற பக்கம் திரும்பி பாத்துச்சிங்க அப்பத்தான் அந்த பாறை குழிக்குள்ள இருந்து பாலு கரடி மெதுவா வெளியில வந்துச்சு குவா காட்டோட நிலைமையை டக்குனு புரிஞ்சுகிட்ட கரடி நீங்க எல்லாரும் என் மேல ஏறுக்குங்க நான் உங்களை காப்பாத்துறேன் அப்படின்னு சொல்லுச்சு

Balu Emerges from the Cave

அப்பத்தான் அங்க இருந்த ஒரு வயசான பருந்து சொல்லுச்சு உன்னால எங்கள காப்பாத்த முடியாது உன் உடம்பு முழுவதும் ரோமம் மொளச்சு இருக்கு எங்கள் சிறகுகளை எப்படி தீ வேகமாக பிடித்து விடுமோ அது மாதிரி உன் மேலையும் தீ பிடிச்சி பரவிடும் அது உனக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் ஆபத்து அப்படின்னு சொல்லுச்சு உடனே குகைக்குள்ள போன பாலு கரடி தான் சேமித்து வைத்திருந்த தேன் எல்லாத்தையும் அதோட தலை மேல ஊத்தி கிடைச்சு

 The Old Eagle's Warning

முழு உடம்பும் தேன்ல நனஞ்ச பாலு கரடி வெளியே வந்து காட்டு மிருகங்கள் எல்லாத்தையும் அதோட கையில தூக்கிகிடுச்சு பறவைகள் எல்லாம் அதோட ரோமங்களுக்கு நடுவுல ஒளிஞ்சு கிடைச்சு உடனே வேகமா நடந்த பாலு கரடி தீப்பிடித்து இருந்த பகுதியிலிருந்து வெளியில போயி அதுங்கள பத்திரமா இறக்கி விட்டது இப்படியே ஒரு நாள் முழுசும் தீக்குள்ள போயிட்டு போயிட்டு வந்த கரடி கடைசியா எல்லா மிருகங்களையும் காப்பாத்திடுச்சு

Balu's Heroic Rescue

இத்தனை நாள் ஒருத்தரோட உடம்ப பாத்து கிண்டல் செஞ்ச நம்ம இப்ப அந்த உடம்பு வச்சிருக்கற ஒருத்தராலயே காப்பாற்றப்பட்டது நினைச்சு அங்க இருந்த காட்டு மிருகங்களும் பறவைகளும் ரொம்ப வருத்தப்பட்டுச்சிங்க

Regret Among the Survivors

தன்னோட உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் தன்னோட மதி நுட்பத்துனாளையும் உடல் வலிமைனாளையும் அந்த மிருகங்களையும் பறவைகளையும் காப்பாற்றின பாலு கரடி அன்னையிலிருந்து அவங்க எல்லாத்துக்கும் சிறந்த நண்பனா மாறிடுச்சு

Balu Becomes the Hero Friend

புதுசா கிடைச்ச நண்பர்களோட ஓடி விளையாட ஆரம்பிச்சுச்சு ,அதனால காப்பாத்த பட்ட மிருகங்கள் தங்களோட குழந்தைகளையும் பாலு கரடி கூட விளையாட அனுப்புச்சாங்க ,பாலு கரடி நாள் ஆக ஆக உடம்பு இளைச்சி சரியான உடல் தகுதியோட உடல் நிலை ஓட ரொம்ப நாள் வாழ்ந்து எல்லாருக்கும் முன்மாதிரியா இருந்துச்சு

Playful New Life