எத்தனை காகங்கள் -The Number of Crows and Bangles – Akbar Birbal Stories in Tamil:-ஒருநாள் அரசவையில அக்பரும் பீர்பலும் இருந்தாங்க ,அப்ப பீர்பாலோட புகழ பாத்து பொறாம பட்ட ஒரு மந்திரி கேட்டாரு
அரசே இந்த நாட்டுல எத்தனை காக்கைகள் இருக்கும்னு நம்ம மந்திரி பீர்பாலுக்கு தெரியுமான்னு கேட்டாரு
அரசர் அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள ,பீர்பால் எந்திரிச்சு 8500 காக்கா இருக்குனு சொன்னாரு
இத கேட்ட அந்த மந்திரிக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு ,காக்கையோட எண்ணிக்கைய பீர்பால் சரியா சொல்ல முடியாது ,அவரு குழம்புவாருனு நினச்சா ,இவரு பட்டுனு ஒரு பதில சொல்லிட்டாரே
இப்ப இத சரிபாக்குற பொறுப்பு தனக்கு வந்துடுச்சேன்னு நினச்சு சங்கடப்பட்டாரு ,
இத பாத்த அரசர் பீர்பால் அவர்களே நீங்க ஜெயிச்சுடீங்கனு சொன்னாரு
அதுக்கு அப்புறமா அரசர் கேட்டாரு ,அவரு உண்மையாவே காக்கவ எண்ணி நீங்க சொன்னத விட அதிகமா இருந்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு வெளியூர் காக்கா இங்க நிறைய வந்திருக்கு அதுவும் சேந்திருக்கலாம்னு சொல்லிடுவேன்னு சொன்னாரு
உடனே அக்பர் அப்ப காக்காவோட எண்ணிக்கை குறைவா இருந்தா என்ன சொல்லுவீங்கன்னு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு நம்ம ஊரு காக்கா கொஞ்சம் வெளிநாட்டுக்கு சுத்திப்பாக்க போயிருக்குனு சொல்லிடுவேன்னு சொன்னாரு
இத கேட்டு சிரிச்ச அரசர் ,பீர்பால் அவர்களே நீங்க தினமும் பாக்குற உங்க மனைவியோட கைல இதனை வளையல் இருக்குனு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே என்னோட தாடியில எத்தன முடி இருக்கோ அதுல 200 ல ஒரு பங்கு வளையல் இருக்குனு சொன்னாரு
அப்பத்தான் அரசருக்கு புரிஞ்சது சரியான கேள்விகள் இல்லாம ,ஏடா கூடமா சரிபார்க்கவே முடியாத கேள்வி கேட்டா இப்படி பீர்பால் மாதிரி பதில் சொன்னாதான் சமாளிக்க முடியும்னு புரிஞ்சிக்கிட்டாரு