ஆந்தையின் தூக்கம்- குவா காட்டு கதை -The Owl’s Midnight Temptation: A Lesson in Sweet Sleep

ஆந்தையின் தூக்கம்- குவா காட்டு கதை -The Owl’s Midnight Temptation: A Lesson in Sweet Sleep:-காட்டுல வாழுற எல்லாம் மிருகங்களும் ராத்திரி முழுசும் நல்லா தூங்கிட்டு பகல் முழுசும் உணவு சேகரிச்சும் சந்தோஷமா இருந்து வாழ்க்கையை நடத்துச்சுங்கள ஆனா ஆந்தை மாதிரி சில பறவைகளும் விலங்குகளும் மட்டும் காலையில் தூங்கி ராத்திரியில முழுசும் உணவு சேகரிச்சு தங்களோட வாழ்க்கையை நடத்துச்சுச்சுங்க

Peaceful Daytime Life in the Forest

அதனாலையே ஆந்தைக்கு இரவு வாழ்க்கை ரொம்ப பிடிச்சமா இருந்துச்சு இரவுல தூங்குற மத்த மிருகங்கள கிண்டல் செய்ய ஆரம்பிச்சுச்சு ஆந்த, இது காலப்போக்கில் எல்லாம் மிருகங்களுக்கும் ஒரு அச்சத்தையே உண்டுச்சு, ஒவ்வொரு மிருகத்துக்கிட்டயும் தனித்தனியா போயி ராத்திரியோட இனிமையச் சொல்லி பகல்ல தூங்கிட்டு ராத்திரியில என்கூட முழிச்சிருங்க அப்படின்னு எல்லாருடைய மூளையையும் குழப்பிச்சு ஆந்த

The Owl's Nighttime Mockery and Mind Games

ஒரு நாள் சிங்கமும் யானையும் குதிரையும் ஒரு வயலுக்கு பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க அப்ப அங்க வந்த ஆந்த ராத்திரி யோட இனிமைய ரசிக்காம இப்படி பகல்ல பூரா முழிச்சிருந்துட்டு ராத்திரி என்னதான் செய்யப் போறீங்க அப்படின்னு கேட்டுச்சு அதுக்கு சிங்கம் உன்னோட பழக்கம் வேற எங்களோட பழக்கம் வேற தயவு செஞ்சு உன்னோடதை நீயே வச்சுக்க எங்களை தொந்தரவு செய்யாத அப்படின்னு சொல்லுச்சுங்க

The Animals' Firm Rejection

இதை கேட்காம தொடர்ந்து ராத்திரியில நிலாவ பார்க்கலாம் விண்மீன்கள பார்க்கலாம் குளிரான சூழ்நிலைய அனுபவிக்கலாம் காலையில கதகதப்பா வெயிலுள தூங்கலாம் அப்படின்னு சொல்லி எல்லாரையும் குழப்பிச்சு அப்பத்தான் எல்லா மிருகங்களுக்கும் நம்மளும் கொஞ்ச நாள் ஆந்த மாதிரி ராத்திரியில முழிச்சிருந்து பகல்ல தூங்கி பார்க்கலாமா அப்படின்னு யோசனை வந்துச்சு

The Owl's Persistent Temptations and Growing Confusion

அதன்படி ஒரு மூணு நாள் மட்டும் நம்ம பகல்ல தூங்கிட்டு ராத்திரியில முழிச்சி இருக்கலாம்னு முடிவு செஞ்சு அதே மாதிரி செய்ய ஆரம்பிச்சாங்க முதல் நாள் ராத்திரி முழுசா முழிச்சிருந்து நெருப்பை பத்த வச்சு அதை சொல்லு சுற்றி உட்கார்ந்து எல்லாம் மிருகங்களும் பாட்டு பாடி ஆனந்தமா இருந்துச்சுங்க இரண்டாவது நாள் அந்த சந்தோசம் கொஞ்சம் குறைஞ்சிருச்சு

The First Two Nights of Experimentation

மூணாவது நாள் எல்லா மிருகங்களுக்கும் எதையோ பறி கொடுத்த ஒரு உணர்ச்சி இருந்துச்சு சிங்கத்துக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வந்துச்சு,ராத்திரியில தூங்காதது நாள ரொம்ப சோர்வா இருந்த சிங்கத்தோட கோபம் நேரம் ஆக ஆக கூடுரத பார்த்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை விட்டு விலகி ஓட ஆரம்பித்துச்ச்சுங்க,இதே நிலைமைதான் யானைக்கும் பக்கத்துல இருந்த பறவைகள் வாழுற ஒரு மரத்த தேவையில்லாம உடைச்சு எரிஞ்சுச்சு

The Third Night's Frustrations and Chaos

அப்பத்தான் குதிரை சொல்லுச்சு ராத்திரி வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு ஆனா ராத்திரி முழுவதும் நம்மளோட உடம்பு இளைப்பாரி கண்களை நல்லா மூடி தூங்கணம்னா தான் நம்மளுக்கு மறுநாள் காலையில சுறுசுறுப்பு கிடைக்கும் அப்படி இல்லாம ராத்திரி முழிச்சிருந்து சந்தோசம் என்கின்ற பேர்ல கூத்தடிச்சோம்னா ஒவ்வொருத்தருடைய மனநிலையும் மாறித்தான் போகுது இத நாங்க கண்கூட கண்டுட்டோம் இனிமே எங்க கிட்ட வந்து ராத்திரி அப்படி இருந்த இப்படி இருந்தனு ஏதாவது கதை சொன்ன அந்த யானையை விட்டு தான் உன்னை மிதிக்க சொல்லுவேன் அப்படின்னு சொல்லி மெரட்டி அனுப்பிச்சு ஆந்தைய அந்த குதிரை

The Horse's Stern Warning to the Owl

குழந்தைகளா ராத்திரி முழுவதும் போன் பார்க்கிறது டிவி பார்க்கிறது இன்னைக்கு வேணா நல்லா இருக்கலாம் இது காலப்போக்கில் உங்க உடம்ப வருத்தும் உங்களோட உடம்ப பேணிப் பாதுகாக்கிறது தான் உங்களுடைய தலையாயக் கடமை அப்படி இருந்தால் தான் உங்க மனசும் நல்லா இருக்கும் இதை பின்பற்றினீங்கன்னா நாட்டுல இருக்கிற மேதாவிகளோட பட்டியல்ல நீங்களும் இடம் பெறுவீர்கள்

Moral Lesson for the Young