ரவீந்திரநாத் தாகூர் கட்டுரை

ரவீந்திரநாத் தாகூர் கட்டுரை:- இந்திய தேசிய கவிஞர் என போற்றப்படுபவர் இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். கவிஞர் மட்டுமல்லாது .தத்துவ ஞானி சுதந்திர போராட்ட வீரர் ஓவியர் மற்றும் மனிதநேய வல்லுநர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. குருதேவ் என அனைவராலும் போற்றப்படும் நரேந்திர நாத் தாகூர் மே 7ஆம் தினம் 1861 இல் கல்கத்தாவில் பிறந்தார். தனது வீட்டிலேயே நிறைய ஆசிரியர்கள் கொண்டு இளமைக்கால படிப்பை தொடங்கிய ரவீந்திரநாத் தாகூர் பல வகைகளும் தனது அறிவை பெருக்கிக் கொண்டார். இங்கிலாந்து சென்று மேல் படிப்பையும் தொடங்கினார் ரவீந்திரநாத் தாகூர். பல துறைகளில் அறிவாளியாக உயர்ந்த ரவீந்திரநாத் தாகூர் இளம் காலம் தொட்டே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.

 தமது பதினாறாம் வயதிலேயே நாடகங்களில் ஏற்றுவதை முழுவீச்சில் தொடங்கினார் தனது தனது இருபதாவது வயதிலேயே வால்மீகி பிரதீபா என்கிற முழு நாடகத்தை எழுதி முடித்து அரங்கேற்றினார் ரவீந்திரநாத் தாகூர்.  1890 ஆம் ஆண்டு அவர் விசர்ஜன் என்ற நாடகத்தையும் எழுதி முடித்தார்.

 தனது பதினாறாம் வயது முதலாகவே சிறுகதைகளை புனைய தொடங்கிய தாகூர் முதன்முதலாக Bhikarini என்கிற சிறுகதையை எழுதினார் .தொடர்ச்சியாக பெங்கால் மொழியில் நிறைய சிறுகதைகளை எழுதி வந்தார் 84 கதைகளை அடங்கிய Galpaguchchha என்ற தொகுப்பை வெளியிட்டார்.

 தனது திறமையால் நாவல்கள் எழுதத் தொடங்கிய ரவிந்திரநாத் தாகூர் எட்டு நாவல்களை  சிறப்புமிக்க நாவல்களாக படைத்திருந்தார் மேலும் அவர் பல நாவல்களை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. ரவீந்திரநாத் அவர்களின் மிகப்பெரிய படைப்பாக கீதாஞ்சலி போற்றப்படுகிறது இதற்காக அவர் 1913 இல் நோபல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

 நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவந்த இரவீந்திரநாத் தாகூர் பாடல்கள் ஏற்றுவதை செவ்வனே செய்து வந்தார் இதன் காரணமாக இவர் 2230 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். இவரது படைப்பான அமர் சோனார் பங்களா என்ற பாடல் பங்களாதேசின் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 இவை அனைத்திற்கும் மேலாக இவரியற்றிய பாடலான ஜனகணமன இந்திய தேசிய பாடலாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது.

 எழுத்து மட்டும் அல்லாது ஓவியத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரவீந்திரநாத் தாகூர். நிறக்குருடு எனும் கண் பார்வை குறைபாட்டை உடைய ரவிந்திரநாத் தாகூரின் ஓவியப் படைப்புகள் வித்தியாசமான நிறங்களுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து இவர் பல சுதந்திரப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்திய அளவில் சுதேசி இயக்கங்களை ஆதரித்தும் ஆங்கிலேய அரசை எதிர்த்தும் இவர் எழுதிய பல படைப்புகளும் பாடல்களும் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. இவரது படைப்புகளை சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் பயன்படுத்தி சுதந்திர போராட்ட வீரர்களின் சாமானிய மக்களை ஒன்று திரட்ட முயற்சி செய்தார். 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையை தொடர்ந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்