Zebra Lion and Tiger Story – வரிக்குதிரை சிங்கம் புலி கதை

Zebra Lion and Tiger Story – வரிக்குதிரை சிங்கம் புலி கதை :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு சிங்க ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்துச்சு

அந்த சிங்கத்துக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ,அதனால கடவுள் பெயரை சொல்லி அந்த சிங்கத்த ஏமாத்த ஆரம்பிச்சுச்சுங்க மத்த மிருகங்க

ஒருநாள் பசியில வேட்டையாட போன சிங்கம் ஒரு வரிக்குதிரைய பார்த்துச்சு ,உடனே வேகமா ஓடி போயி அந்த வரி குதிரைய பிடிச்சிடுச்சு

அப்ப அந்த வரிக்குதிர சொல்லுச்சு அரசே நாங்க கடவுளால ஆசிர்வதிக்க பட்டு கடவுளோட கையாலயே உடம்பு முழுசும் கொடு போட்டுட்டு பிறந்துருக்கோம்

எங்கள வேட்டையாட எங்களுக்கு இருக்குற மாதிரியே உடம்புல வரி இருக்குற மிருகங்களுக்கு தான் அனுமதினு சொல்லுச்சு

இத கேட்ட சிங்கமும் அந்த வரிக்குதிரைய விட்டுடுச்சு ,இத கேள்வி பட்ட எல்லா வரிக்குதிரைகளுக்கும் சிங்கத்து மேல இருந்த பயமே போய்டுச்சு

சிங்கத்து முன்னாடியே ஓடுறது ,சிங்கம் தூங்கும்போது நடனமாடி தொந்தரவு செய்யிறதுனு சேட்டை செய்ய ஆரம்பிச்சுங்க

அடடா இந்த வரிக்குதிரைகள வேட்டையாட வேணாம்னு முடிவு செஞ்சது ரொம்ப தொந்தரவா போச்சேன்னு யோசிச்ச சிங்கத்துக்கு ஒரு யோசனை வந்துச்சு

பக்கத்து காட்டுக்கு தூது அனுப்பி அங்க இருந்த புலிகளை கூட்டிட்டு வந்து வரிக்குதிரைகளை வேட்டையாட சொல்லுச்சு

அப்படி வந்த புலி ஒன்னு ஒரு வரிக்குதிரைய பிடிச்சதும் ,திரும்பவும் எங்களை கொள்ள எங்கள மாதிரியே வரி இருக்குற மிருகங்கள்தான் வரணும்னு சொல்லுச்சு

அப்பத்தான் புலி சொல்லுச்சு கொஞ்சம் என்னோட உடம்ப பாரு ,உங்கள வேட்டையாட கடுவுளே எங்களை படச்சு அவரோட கையாள எங்களுக்கும் கோடு போட்டு அனுப்பியிருக்காருனு சொல்லுச்சு

அப்பத்தான் அந்த வரி குதிரைகளுக்கு உண்மையான ஆபத்து புரிஞ்சது ,சிங்க ராஜா கிட்ட பொய் சொல்லாம இருந்தா கூட காட்டுக்கு வேறு பக்கம் போயி தப்பிச்சு இருக்கலாம் ,

இப்ப நிறய புலிகள் இங்க வந்திருக்கு நாம எல்லாம் மொத்தமா புலி கூட்டத்துக்கிட்ட மாட்டிகிட்டோம்னு நினச்சு வருத்தப்பட்டுச்சு