சூரிய சந்திர வெளிச்சம் – Water and Nectar-Akbar Birbal story:-ஒருநாள் அக்பருக்கு ஒரு வித்தியாசமான கேள்வி உதிச்சது

மறுநாள் அரசவையில இருந்த பெரியவங்க கிட்ட அந்த கேள்வியை கேட்டாரு
எது மேல சூரிய வெளிச்சமும் சந்திர வெளிச்சமும் படுறது இல்லை-இதுதான் அந்த கேள்வி

இத கேட்ட உடனே அரசவையில இருந்த எல்லாரும் திகைச்சு போய்ட்டாங்க
ஒவ்வொருத்தரா பதில் சொல்ல ஆரம்பிச்சாங்க ,ஆனா எந்த பதிலும் அரசருக்கு பிடிக்கல
அப்பத்தான் அக்பர் பீர்பால பாத்தாரு , பீர்பால் அவரு பாட்டுக்கு வெத்தலை போட்டுக்கிட்டு இருந்தாரு

பீர்பால் என் கேள்விக்கு பதில் சொல்லாம என்ன பன்றிங்கனு கேட்டாரு
மன்னிக்கணும் அரசெனு சொல்லிட்டு பதில் சொல்ல ஆரம்பிச்சாரு
இருட்டு ,இருட்டு மேலதான் சூரிய வெளிச்சமும் சந்திர வெளிச்சமும் படுறது இல்லைனு சொன்னாரு
இத கேட்ட அக்பருக்கு குழப்பமா போச்சு ,திரும்ப பீர்பால் கிட்ட விளக்கமா சொல்ல சொன்னாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே இருட்டு மேல சூரிய வெளிச்சமோ ,சந்திர வெளிச்சமோ பட்டா அதுக்கு பேரு இருட்டு இல்ல ,அதனால் இருட்டு தான் சரியான பதில்னு சொன்னாரு