விக்ரமாதித்தன் வேதாளம் கதை -5 யார் முட்டாள் – Vikram and Betal Story in Tamil :- தனது குருவின் ஆணைப்படி வேதாளத்தை பிடித்து கொண்டுவரும் வழியில் வேதாளம் கதை சொல்லி கேள்வி கேக்குறதும் அதர்க்கு விக்ரமாதித்தன் சரியான விடை சொல்வதும் வேதாளம் மீண்டும் தனது இருப்பிடமான புளியமரத்தில் ஏறிக்கிறதும் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்துச்சு

தனது முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை தூக்கிக்கொண்டு தனது குருவை சந்திக்க போனாரு

அப்ப திரும்பவும் வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு ,ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தாரு அவரை பார்க்க ஒரு வயசானவரு வந்தாரு

அரச பார்க்க வந்த அவரு நான் கொஞ்ச நாள் வெளியூர் போகப்போறேன் அதனால கண்ணு தெரியாத என்னோட ரெண்டு பிள்ளைங்களையும் அரண்மனையில் வச்சு பார்த்துக்கோங்கன்னு சொன்னாரு

அரசரும் அதுக்கு சம்மதம் தெரிவிச்சாரு ,அப்ப அந்த வயசானவர் சொன்னாரு என்னோட பிள்ளைங்களை கண்ணு தெரியலைனு சாதாரணமா நினைச்சுடாதீங்க அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப திறமைசாலிங்க

என்னோட மூத்த மகன் குதிரைகளை பத்தி நல்லா தெரிஞ்சவன் ,குதிரைய தடவி பார்த்தே அதோட குணத்த பத்தி சொல்லிடுவான்

என்னோட இளையமகன் நகைகள் வைரங்கள் எல்லாத்தயும் பத்தி தெரிஞ்சவன் , அந்த நகைகள் நல்லது செய்யுமா கெட்டது செய்யுமானு தடவி பார்த்தே சொல்லிடுவான்னு சொன்னாரு
இத கேட்ட அரசர் அந்த வயசானவருக்கும் அவரோட மகன்களுக்கும் விருந்து வச்சிட்டு அந்த வயசானவர வெளியூருக்கு அனுப்பி வச்சாரு

ஒரு நாள் அரண்மனை தோட்டத்துல இருந்த அரசர்கிட்ட ஒரு குதிரை வியாபாரி ஒரு குதிரைய விக்கிறதுக்கு வந்தாரு ,அப்பத்தான் கன்னுதெரியாத மூத்த மகன கூட்டி அந்த குதிரைய பத்தி கேட்டாரு

அந்த குதிரைய தடவி பார்த்த அவன் இந்த குதிரை யாருக்கும் உதவாது இது முரட்டு சுபாவமா இருக்குறதால இது சவாரிக்கு ஒத்துவராதுனு சொன்னான் ,உடனே தன்னோட தளபதியா கூப்பிட்டு அந்த குதிரைய ஓட்டி பார்க்க சொன்னாரு

குதிரைமேல தளபதி ஏறி உக்காந்ததும் குதிரை அவர தள்ளி விட்டுட்டு ஓடிருச்சு ,இத பார்த்த அரசருக்கு ஆச்சர்யமா போச்சு

இன்னொரு நாள் ஒரு வைர வியாபாரி அரசர பார்க்க வந்தாரு ,அவரு கையில ஒரு பெரிய வைரத்தை வச்சிருந்தாறு ,இந்த வைரத்தை உங்க கிரீடத்துல வச்சுக்கிட்டிங்கனா ரொம்ப நன்மை கிடைக்குமுன்னு சொன்னாரு அந்த வியாபாரி

அப்பத்தான் கண்ணு தெரியாத ரெண்டாவது மகனை பத்தி ஞாபகம் வந்துச்சு ,அவன கூப்பிட்டு அந்த வைரத்தை சோதிக்க சொன்னாரு ,வைரத்தை ரொம்ப நேரம் தடவி பார்த்த இளைய மகன் இந்த வைரம் ராசியானது இல்ல ,இத இதுக்கு முன்னாடி அணிஞ்சிருந்தவறு கொஞ்ச வயசுல இறந்துட்டாருனு சொன்னான்

உடனே தளபதிய கூப்பிட்டு நல்லா விசாரிக்க சொன்னாரு ,ரெண்டுநாள் கழிச்சு அரசர்கிட்ட வந்த தளபதி அரசே இந்த வைரத்தை இதுக்கு முன்னாடி பக்கத்து நாட்டு அரசர்தான் அணிஞ்சிருந்தாரு ,இத போட்ட கொஞ்ச காலத்துலயே அவரு நோய் வாய்ப்பட்டு இறந்துட்டாரு ,அதனால இத நீங்க அணிய வேண்டாம்னு சொன்னாரு

இத கேட்ட அரசருக்கு கண்ணு தெரியாத ரெண்டு பேர தன்னோட வச்சிருக்குறது ரொம்ப பெருமையா இருந்துச்சு ,அதே நேரத்துல இவுங்களே ரொம்ப திறமையா இருந்தா இவங்களோட அப்பா எவ்வளவு திறமைசாலியா இருப்பாருனு நினைச்சாரு

ஒரு நாள் அந்த வயசான அப்பா தன்னோட மகன்களை பார்க்க அரண்மனைக்கு வந்தாரு ,அப்ப அரசர் அவருகிட்ட உங்க கிட்ட என்ன திறமை இருக்குனு கேட்டாரு
அதுக்கு அவரு சொன்னாரு என்னால ஒருத்தரோட முகத்தை வச்சே அவர பத்தி சொல்லிடுவேன்னு சொன்னாரு ,உடனே என்ன பத்தி சொல்லுன்னு சொன்னாரு அரசர்

அதுக்கு அந்த வயசானவர் சொன்னாரு என்னதான் நீங்க அரசரா இருந்தாலும் உங்களுக்கு சின்ன சின்ன திருட்டு செய்யுற பழக்கம் இருக்குனு சொன்னாரு

அப்ப ராஜாவுக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு , எப்படி என்னோட விஷயம் இவனுக்கு தெரிஞ்சுதுனு யோசிச்சு இவுங்க மூணு பேரையும் நாட்டை விட்டே விரட்டிட்டாரு

-இதுல யார் முட்டாள் , தன்னை பத்தி உண்மைய ஒருத்தர் சொன்னதும் கோபப்பட்ட அரசரா ,இல்ல அரசர்கிட்ட அறிவில்லாம உண்மைய சொன்ன அந்த வயசானவரான்னு கேட்டுச்சு வேதாளம்
-உடனே இந்த திருட்டு தனத்தை சொன்ன அரசர் கோபப்பட்டதால அவரை முட்டாள்னு சொல்லமாட்டேன் ஆனா உலகத்துலயே யாருகிட்டயும் இல்லாத திறமை கொண்ட மூணு பேத்த இழந்ததால் அவருதான் முட்டாள்னு சொன்னான் விக்ரமாதித்தன்

தன்னோட திட்டப்படி விக்கிரமாதித்தனை பேச வெச்ச வேதாளம் திரும்பவும் புளிய மரத்துல ஏறிக்கிடுச்சு ,அடடா இன்னொரு தடவ இந்த வேதாளத்துக்கிட்ட ஏமாந்துட்டமேன்னு நினச்ச விக்ரமாதித்தன் இந்த வேதாளத்தை பிடிக்காம விடக்கூடாதுனு வேகமா அத தொடர்ந்து போனாரு