Bad Son – Very short story for Kids :- ரத்தினம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன் , அவனோட அப்பா ஒரு விவசாயி
அவுங்க அப்பா கஷ்டப்பட்டு படிக்க வச்சாலும் ரத்தினத்துக்கு படிப்பு நல்லா வரல தன்னால நல்ல ஸ்கூல்ல படிக்க முடியாதது தான் இதுக்கு காரணம்னு நினைச்சான்
அவுங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்குறத அவன் பொருட்படுத்தவே இல்ல
சில காலங்களுக்கு பிறகு வளந்த ரத்தினம் நல்ல வேலைல சேந்தன் நல்ல குடும்பமும் அமைச்சுக்கிட்டான்
வயசான காலத்துல அவுங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு
விவசாயத்தையும் விட்டுட்டாரு, அதனால ரொம்ப கஷ்டப்பட்டாரு
ஒருநாள் மருத்துவ செலவுக்காக ரத்தினத்துக்கிட்ட உதவி கேட்டாரு அவுங்க அப்பா
தன்னல நல்லா படிக்க முடியாததும் தன்னோட அப்பா தான் காரணம்னு நினச்ச ரத்தினம் கோபத்துல திட்டி அனுப்பிச்சுட்டான்
கொஞ்ச நாள் கழிச்சு வேல விஷயமா வெளியூர் போன ரத்தினம் ஒரு போம்ம விக்கிற பையன பாத்தான்
என்னப்பா இவ்வளவு சின்ன வயசுல வியாபாரம் பாக்குறான்னு கேட்டான் ரத்தினம்
எங்க அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்காரு, என்ன கிடைச்சாலும் எனக்கே கொடுத்துக்கு தன்னோட உடல் நிலைய அக்கறை கட்டாததால இப்ப கஷ்டப்படுறாரு
அவருக்கு உதவுற தவிர எனக்கு வேற எந்த சிந்தனையும் கிடையாதுன்னு சொன்னான்
அப்பத்தான் தான் எவ்வளவு கேவலமா நடந்துக்கிடட்டோம்னு அவனுக்கு தோணுச்சு
அப்புறமா வீட்டுக்கு வந்த ரத்தினம் தன்னோட அப்பாவ பாத்து மன்னிப்பு கேட்டு தன்னோடவே கூட்டிட்டு வந்து நல்லா கவனிச்சான்