Unhelpful Friends – உதவாத நண்பர்கள் குழந்தைகள் கதை :-ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு ,அதுல ஒரு முயல் குட்டிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க

எப்பவும் அந்த முயல்குட்டி அதோட நண்பர்கள் கூடவே இருக்கும் ,என்ன நிகழ்ச்சி நடந்தாலும் தன்னோட நண்பர்கள் கிட்டயே நேரத்தை செலவிடும்.

ஒருநாள் அந்த காட்டுக்கு ஒரு வேட்டைக்கார கும்பல் வந்துச்சு ,அவுங்க நிறைய வேட்டை நாய்கள் வச்சிருந்தாங்க ,
அந்த நாய்கள் எல்லாம் மிருகங்களை தொரத்தி வேட்டைக்காரங்க பிடிக்க உதவி செஞ்சுகிட்டு இருந்துச்சுங்க

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா இந்த முயல் குட்டிய அந்த வேட்டை நாய்கள் பாத்துடுச்சுங்க.உடனே அந்த நாய்கள் எல்லாம் முயலை தொரத்த ஆரம்பிச்சதுங்க

உடனே அந்த முயல் தன்னோட மான் நண்பர்கிட்ட ஓடிப்போயி என்ன காப்பாத்துங்க மான் நண்பரேனு சொல்லுச்சு ,அதுக்கு மான்குட்டி என்னால முடியாதுனு சொல்லிடுச்சு

அடுத்ததா பக்கத்துல இருந்த குரங்கு நண்பர் கிட்ட போயி காப்பாத்த சொல்லுச்சு ,அதுக்கு குரங்கும் என்னால முடியாதுனு சொல்லிடுச்சு

அடுத்து கரடி நண்பர்கிட்ட போயி காப்பாத்த சொல்லுச்சு ,அதுவும் என்னால முடியாதுனு சொல்லிடுச்சு.

அதுக்கு அப்புறமாத்தான் முயலுக்கு தோணுச்சு ஒரு ஆபத்துனு வரும்போது தன்னோட நிலைமையை தான்தான் சரி பண்ணிக்கிடனும் இன்னொருத்தர நம்பக்கூடாதுனு தோணுச்சு
உடனே பக்கத்துல இருக்குற அடர்ந்த புதற்குள்ள போயி,ஆடாம அசையாம உக்காந்துகிட்டு இருந்துச்சு ,அந்த வேட்டை நாய்கள் கொஞ்ச நேரம் தேடிட்டு போயிடுச்சுங்க

அதுக்கு அப்புறமா நண்பர்களை பொழுது போக்குக்கு மட்டும் வச்சுக்கிட்டு ,முழுமையா நம்புறதை விட்டுட்டு ரொம்ப நாள் வாழ்ந்துச்சு அந்த முயல்