Two Head Bird Story – இரண்டு தலை பறவை :- ஒரு காட்டுல ரெண்டு தல கொண்ட பறவ வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த ரெண்டு தலையும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கும்

ஒருநாள் ஒரு மரத்துல இருந்து சிவப்பு பலத்த எடுத்து அந்த வலது தல சாப்டுச்சு
இடது தல எனக்கும் பழத்தை கொடுன்னு கேட்டுச்சு .
நான் பார்த்து எடுத்த பழம் எனக்குதான் உனக்கு இல்லனு சொல்லுச்சு வலது தலை
அடுத்ததா ஒரு மரத்துல உக்காந்துச்சு பறவை

அங்க இருந்த மஞ்சள் நிற பழத்த சாப்பிட ஆரம்பிச்சது இடது தலை
ஏய் இது விச பழம் அத சாப்பிடாதான்னு சொல்லுச்சு வலது தலை

அது பேச்ச கேக்காத இடது தல அந்த பழத்த சாப்டுச்சு
தல ரெண்டா இருந்தாலும் வயிறு ஒன்னான பரவ செத்து போச்சு
நீதி : குடும்ப உறுப்பினர்கள் சண்டை போட்டா குடும்பமே பாதிக்கும்