Tweetie The Brave Bird Tamil Animal Birds Story – டுவீடி குருவி கதை :- ஒரு காட்டுகுள்ள டுவீடினு ஒரு குருவி வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த குருவி எப்பவும் சந்தோசமா பாட்டு பாடிகிட்டு ,ஜாலியா டான்ஸ் ஆடிக்கிட்டு , பறக்கும்போது விசில் அடிச்சிக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு
அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த சில பெரிய பறவைகள் ஒருநாள் டுவீடி அதுபாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்குறத பார்த்துச்சுங்க
உடனே டுவீடிய வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சுச்சுங்க , ஏய் குட்டி குருவியே எதுக்கு இந்த ஆட்டம் ஆடுற நீ என்ன இந்த உலகத்துலயே பலசாலியான பறவையா
இல்ல எங்கள மாதிரி உயரமா பறக்கிற பறவையா எதுக்கு இந்த ஆட்டம்னு கேட்டு சிரிச்சுச்சுங்க
அந்த பறவைகள் ரொம்ப கிண்டல் செஞ்சத கேட்ட டுவீடிக்கு ரொம்ப வருத்தமா போச்சு , நாம ரொம்ப குட்டியா இருக்கோம் ,நம்மளால ரொம்ப உயரம் பறக்க முடியலைன்னு அதுக்கு வருத்தம் வந்துடுச்சு
அப்பத்தான் அங்க வந்தாரு ஆந்தை தாத்தா , ஏன் இப்படி சோகமா இருக்க டுவீடி னு கேட்டாரு ஆந்தை தாத்தா
உடனே நடந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுச்சு டுவீடி ,இத கேட்ட ஆந்தை சொல்லுச்சு இதுக்கு பேருதான் தாழ்வு மனப்பான்மை , ஓவ்வொரு உயிருக்கும் ஓவ்வொரு குணாதிசயத்தை இந்த கடவுள் கொடுத்திருக்கார் அத சரியா பயன்படுத்தனும்
அத விட்டுட்டு உன்ன அடுத்தவங்களோட ஒப்பிட்டு பாக்கும்போது நமக்கு தாழ்வு மனப்பான்மை வந்திடும் , நீ அழகா பாடுற , ஆடுற இது உன்னோட தனித்தன்மை இத அந்த பெரிய பறவைகளால செய்ய முடியாது
அத விட்டுட்டு அவுங்க செய்யற சாதாரண வேலைய நீ செய்ய முடியலையேன்னு வருத்தப்படுறதுல எந்த புரொஜனமும் இல்லைனு சொல்லுச்சு
இத கேட்ட டுவீடி அடடா இது தெரியும அவுங்கள பார்த்து பொறாமை பட்டுட்டனே ,இனிமே அந்த பறவைகள் வந்தா நான் என்னோட திறமைகளை காட்டி அவுங்கள ஜெயிச்சிடுறேனு சொல்லுச்சு
அதுக்கு ரொம்ப பலமா சிரிச்சாரு ஆந்தை தாத்தா , சிரிச்சிட்டு சொன்னாரு அவுங்க செஞ்ச தப்பையே நீயும் செய்யாத , உன்னோட திறமையை நீ நம்பணுமே தவிர ,அத யார்கிட்டயும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை , நீ உன்னோட வாழ்க்கை வாழுனு சொன்னாரு.
நீ இதுமாதிரி தாழ்வு மனப்பான்மைல சிக்கி தங்களோட போட்டி போடணும் ,அதுனால உனக்கு மனஉளைச்சல் வரணும்னே சிலர் உன்கிட்ட தவறா பேசுனா ,அவுங்கள ஒதுக்கு தள்ளிட்டு உனக்கு ,எது சந்தோஷமோ ,எது செய்ய முடியுமோ ,எது செய்ய விருப்பமோ அத செய் ,திரும்ப உன்ன யாராவது வம்பிழுத்தா காது கேக்காத மாதிரி அடுத்த பக்கம் போயிடுனு சொல்லுச்சு அந்த ஆந்தை தாத்தா
அன்னைல இருந்து டுவீடி அந்த காட்டு பகுதியில ரொம்ப சந்தோசமா வாழ ஆரம்பிச்சுச்சு ,அங்க வாழ்ந்துகிட்டு இருந்த மத்த குருவிகளும் டுவீடியோட சேர்ந்து சந்தோசமா வாழ ஆரம்பிச்சுச்சுங்க