Thumbelina Story in Tamil- தம்பலினா குட்டி தேவதை கதை :- முன் ஒரு காலத்துல ஒரு கிராமம் இருந்துச்சு

அங்க ஒரு அம்மா வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவுங்க ரொம்ப தனிமையா இருந்ததால ஒரு குழந்தை வேணும்னு கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருந்தாங்க

அப்ப ஒருநாள் ஒரு சூனிய கார கிழவியை சந்திச்சாங்க ,தனக்கு ஒரு குழந்தை வேணும்னு அந்த கிழவிகிட்ட கேட்டாங்க அந்த அம்மா

உடனே அந்த கிழவி ஒரு தங்க விதையை கொடுத்து இந்த விதையை உன் வீட்டு தோட்டத்துல போடு உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும்னு சொன்னாங்க

வீட்டு வந்த அந்த அம்மா பெரிய குழி தோண்டி அந்த தங்க விதைய பொதச்சி வச்சாங்க

மறுநாள் வந்து பார்த்தா அது ஒரு செடியா மாரி ஒரு தங்க பூ பூத்திருந்துச்சு

வேகமா அந்த பூவை திறந்து பார்த்தாங்க அந்த அம்மா உள்ள ஒரு அழகான குட்டி குழந்தை இருந்துச்சு

அந்த குழந்தை கட்ட விறல் அளவே இருந்ததால அந்த குழந்தைக்கு ஆங்கிலத்துல கட்டை விரலை குறிக்கிற சொல்லான தம்ப் (Thumb)வோட சேர்த்து தம்பலினானு பேர் வச்சாங்க

அவ ரொம்ப குட்டியா இருந்ததால அவளை ரொம்ப பத்திரமா பார்த்துக்கிட்டாங்க அந்த அம்மா
கொஞ்ச நாள்லயே அவ பெரிய பெண் ணா வளர்ந்தா இருந்தாலும் அவ கட்டைவிரல் அளவே உயரம் இருந்தா

ஒருநாள் ஜன்னல் வழியா ஒரு தவளை அங்க வந்துச்சு ,தம்பலினா அழக பார்த்த அந்த தவளை அவளை தூக்கிட்டு போய் தாமரை இலையில சிறை வச்சுச்சு

தம்பலினா ரொம்ப பயந்து போய்ட்டா ,அந்த தவளை அவளை கல்யாணம் செஞ்சுக்கிட சொல்லி கேட்டுச்சு ,உடனே ரொம்ப பயந்து போய் அழ ஆரம்பிச்சா

இத அங்க இருந்த மீன்கள் எல்லாம் கேட்டுச்சுங்க ,உடனே அந்த தாமரை தண்ட கடிச்சி தம்பலினாவ விடுதலை செஞ்சதுங்க
தண்ணியில விழுந்த அந்த தாமரை இலை தண்ணியில படகு மாதிரி போய்கிட்டே இருந்துச்சு

அப்ப ஒரு பெரிய வண்டு அவளை பார்த்துச்சு ,உடனே அதுவும் அவளை தூக்கிட்டு வந்து தன்கூடவே ஒரு தோட்டத்துல வச்சிக்கிடுச்சு

அந்த வண்டும் தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கயே இருக்க சொல்லி கேட்டுச்சு

தம்பலினாவுக்கு என்ன செய்றதுன்னே தெரியல ,எப்படி இந்த பெரிய வண்டுகிட்ட இருந்து தப்பிக்கிறதுனு பார்துகிட்டே இருந்தா
ஒருநாள் அந்த தோட்டத்துல ஒரு சின்ன கதவை பார்த்தா ,உடனே அந்த கதவை தட்டுனா

உள்ள ஒரு எலி இருந்துச்சு ,அந்த எலி அவளை அந்த சின்ன குகைக்குள்ள இருந்துகிட அனுமதிச்சுச்சு

கொஞ்ச நாள் கழிச்சி இன்னொரு எலி அங்க வந்துச்சு ,அந்த எலி தம்பலினாவ கல்யாணம் பண்ணிகிட சொல்லி கேட்டுச்சு

அப்பத்தான் ஒரு குட்டி குருவி அங்க வந்து விழுந்துச்சு ,உடனே தம்பலினா அந்த குருவிக்கு வைத்தியம் செய்ய ஆரம்பிச்சா

கொஞ்ச நாள்ள அந்த பறவை நல்லா ஆகிடுச்சு ,அந்த பறவைக்கிட்ட தன்னோட கதைய அந்த குருவிகிட்ட சொன்னா தம்பலினா
எல்லாரும் என்ன கல்யாணம் பண்ணிக்கிட சொல்லி கேக்குறாங்க ஆனா எனக்கு என்னோட அம்மாகிட்ட போகணும்னு சொல்லி அழுதா

அப்பத்தான் அந்த குருவி எனக்கு உன்னமாதிரியே ஒரு குட்டி பையனை தெரியும் அவன்கிட்ட உன்ன கூட்டிட்டு போறேன் அவன் உனக்கு உதவி செய்வான்னு சொல்லுச்சு

உடனே தம்பலினாவ அந்த பையன்கிட்ட கூட்டிட்டு போச்சு அந்த குருவி,
அந்த பையன் சொன்னான் நீ ரொம்ப குட்டியா இருக்குற பிரச்னை இல்லை உனக்கு என்ன மாதிரி இறகு இல்லாதது தான் பிரச்சனைன்னு சொல்லி ஒரு மந்திரம் சொன்னான்

உடனே ரொம்ப அழகான ரெக்கை தம்பலினாவுக்கு வந்துடுச்சு ,உடனே அவளோட அம்மாகிட்ட பறந்து போய்ட்டா