Think Before You Speak Story in Tamil – பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்:- ஒரு ரயில் நிலையத்துல ஒரே கூட்டமா இருந்துச்சு
அங்க வந்த சில காலேஜ் பசங்க ரொம்ப குதூகலமா இருந்தாங்க
தங்களோட ரயில் எப்பவரும்னு காத்துட்டு இருந்த அவுங்க , ரயில் வந்ததும் எல்லாரையும் முந்திகிட்டு போயி அவுங்க அவுங்க இடத்துல உக்காந்தாங்க
அப்பத்தான் ஒரு முதியவரும் ஒரு 15 வயசு பையனும் அந்த ரயில் பெட்டில ஏறுனாங்க
அந்த பையன் ஜன்னல் வழியா வெடிக்க பாத்துகிட்டே வந்தான்
அப்பா இங்க பாருங்க மரங்கள் எல்லாம் பின்னாடி ஓடுதுங்கன்னு சின்ன புள்ள மாதிரி பேசுனன்
இத பத்த காலேஜ் பசங்க களுக்குனு சிரிச்சாங்க இதுயென்ன சின்ன பையன் மாதிரி பேசுறேன்னு அவனையே பாத்தாங்க
அப்பா அங்க பாருங்க வானம் கலர் மறிக்கிட்டே இருக்குன்னு சொன்னான்
அவுங்க அப்பா ஒரு ஆப்பிள் பழத்த அவனுக்கு சாப்பிட கொடுத்தாரு, அத சாப்பிட்ட அந்த பையன் இந்த அப்பிளோட கலர் இந்த பழத்தோட சுவையைவிட அருமையா இருக்கு அப்படின்னு சொன்னான்
இது என்ன வர வர இந்த பையன் ரொம்ப மோசமா நடந்துக்கிட்டே இருக்கான்
ஐயா உங்க மகனுக்கு மன வளர்ச்சி சரி இல்லயா அப்படின்னு கேட்டாங்க
இந்த கேள்வியை எதிர் பாக்காத அந்த பெரியவர் “தம்பிகளா அப்படி பேசாதிங்கப்பா என்னோட மகனுக்கு சின்ன வயசுல இருந்து கண்பார்வை கிடையாது “
கடவுள் அருளாலே ஒருத்தர் கொடுத்த கண்தானதால இப்ப என் மகனுக்கு கண்ணு தெரியுது அவன நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்
அவனுக்கு இந்த ட்ரெயின் , வானம் ,அப்பிளோட கலர் எல்லாமே புதுசு
இத கேட்ட அந்த காலேஜ் பசங்க எல்லோரும் ஒரு நிமிஷம் வறுத்த பட்டாங்க, அவசர பட்டு அந்த பையன பத்தி தப்பா பேசிட்டமேன்னு வறுத்த பட்டாங்க
இதுக்குதான் பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது