The Wolf & the Shepherd – ஆடு மேய்ப்பவனும் காவல் காத்த ஓநாயும்-Tamil Aesop Stories :- ஒரு கிராமத்துக்கு பக்கத்துல ஒரு பெரிய காடு இருந்துச்சு
![The Wolf & the Shepherd Tamil Aesop Stories](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/12/The-Wolf-the-Shepherd-3.jpg)
அந்த காட்டுல இருந்து உணவு தேடி வந்த ஓநாய் அந்த கிராமத்துல ஒரு ஆடு மேய்கிறவரு நிறைய ஆடுகள மேய்க்கிறத பார்த்துச்சு
![The Wolf & the Shepherd Tamil Aesop Stories](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/12/The-Wolf-the-Shepherd-5.jpg)
உடனே அந்த ஆட்டு மந்தைக்கு பக்கத்துல போய் உக்காந்துச்சு ,அத பார்த்த ஆடு மேய்கிறவரு ரொம்ப கவனமாகிட்டாரு
![The Wolf & the Shepherd Tamil Aesop Stories](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/12/The-Wolf-the-Shepherd-1.jpg)
எப்ப வேணும்னாலும் அந்த ஓநாய் ஆட்டு குட்டிகளை திருடிட்டு போயிடும்னு நினைச்சாரு அந்த ஆடு மேய்கிறவரு
ஆனா அந்த ஓநாய் அப்படி எதுவும் செய்யல ,தினமும் அந்த இடத்துக்கு வந்த ஓநாய் அந்த ஆடுகள் கூடவும் ஆடு மேய்கிறவர் கூடவும் நட்பா பழக ஆரம்பிச்சுச்சு ,
![The Wolf & the Shepherd Tamil Aesop Stories](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/12/The-Wolf-the-Shepherd-2.jpg)
காட்டு விலங்கா இருந்தாலும் தனக்கு உதவி செய்யிறதால அந்த ஓநாய தன்கூட சேர்த்துக்கிட்டாரு அந்த ஆடு மேய்கிறவரு
ஒருநாள் வேலை விஷயமா பக்கத்து கிராமத்துக்கு போன ஆடு மேய்கிறவரு ,அந்த ஓநாய ஆடுகளுக்கு பாதுகாப்பா விட்டுட்டு போனாரு
![The Wolf & the Shepherd Tamil Aesop Stories](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/12/1-7.jpg)
திரும்பி வந்து பார்த்தா ,எல்லா ஆடுகளையும் பிடிச்சி தின்னுட்டு காட்டுக்குள்ள ஓடி போய்டுச்சு அந்த ஓநாய்
![The Wolf & the Shepherd Tamil Aesop Stories](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/12/The-Wolf-the-Shepherd-4.jpg)
என்னதான் நல்லா நடந்துகிட்டாலும் ஒரு காட்டு விலங்கை நம்புவது தன்னோட முட்டாள்தனம்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு அந்த ஆடு மேய்கிறவரு
நீதி :-ஒருமுறைகெட்டவன் , எப்போதும்கெட்டவன்
நீதி :- பிறவி குணம் எப்போதும் மாறாது