The Wizard Of OZ Story in Tamil – டோராவும் மாயாஜாலமும் :- ஒரு ஊருல டோரானு ஒரு பாப்பா வாழ்ந்துகிட்டு வந்தா

அவ எப்பவும் தன்னோட நாய்க்குட்டி கூட சேர்ந்து தோட்டத்துல விளையாடுறது வழக்கம்

ஒரு மழை காலத்துல டோராவும் அந்த நாய்க்குட்டியும் விளையாடிட்டு இருக்கும்போது ஒரு பெரிய சூறாவளி வந்துச்சு

அந்த சூறாவளி எல்லா வீட்டையும் உடைச்சு போட்டுக்கிட்டு இருந்துச்சு

உடனே டோரா வீட்டோட பேஸ் மண்டுக்கு போக பார்த்தா ,அப்ப அந்த சூறாவளி அந்த வீட்ட அப்படியே தூக்கிகிட்டு போச்சு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த வீட்டை ஒரு இடத்துல போட்டுச்சு , வீட்டை விட்டு வெளிய வந்த டோரா எங்க வந்திருக்கோம்னு பார்த்தா

அப்பதான் வீட்டுக்கு அடியில யாரோ நசுங்கி கிடைக்கிறத பார்த்தா டோரா ,அப்ப திடீர்னு யாரோ கைதட்டுற சத்தம் கேட்டுச்சு

திரும்பி பார்த்த டோராவுக்கு அந்த ஊர் காரங்க எல்லாரும் கைதட்டி வாழ்த்துக்கள் சொன்னாங்க ,

டோராவுக்கு எதுவுமே புரியல ,அப்பத்தான் அங்க இருந்த தாத்தா ஒருத்தர் சொன்னாரு இந்த வீட்டுக்கு அடியில இருக்குறது ஒரு சூனிய காரி ,அவ எங்களை எப்பவும் தொல்ல படுத்திக்கிட்டே இருந்தா

நல்ல காலமா நீ வீட்டோட வந்து அவ மேல விழுந்து எங்கள காப்பாத்துனனு சொன்னாரு

இத கேட்ட டோரா தான் ஒண்ணுமே செய்யலனும் இது எதேச்சையா நடந்துச்சுன்னும் சொன்னா

அப்ப அங்க ஒரு நல்ல சூனிய காரி வந்தா ,வந்து டோராவுக்கு பரிசு கொடுக்க போறேன் உனக்கு என்ன வேணும்னு கேட்டா

இத கேட்ட டோரா எனக்கு பரிசு ஒண்ணும் வேணாம் எனக்கு வீட்டுக்கு போறதுக்கு வழி மட்டும் சொல்லுங்கன்னு சொன்னா
அதுக்கு அந்த சூனியக்கார கிழவி இந்த காட்டோட முனையில ஒரு மாயாவி தாத்தா இருக்காரு அவருகிட்ட போனா உனக்கு எல்லா உதவியும் கிடைக்கும்னு சொன்னா

அதோட ஒரு சிகப்பு செருப்பையும் கொடுத்து ,இது இப்ப சாதாரண செருப்பு நீ அந்த மாயாவி கிட்ட போனதும் இந்த செருப்பு மாயாஜால செருப்பா மாறிடும்னு சொன்னா
உடனே டோராவும் அந்த குட்டி நாயும் மாயாவிய தேடி காட்டுக்குள்ள நடந்தாங்க

அப்ப அங்க ஒரு சோலைக்காட்டு பொம்மை இருந்துச்சு ,அது திடீர்னு பேச ஆரம்பிச்சுச்சு ,அழகிய பெண்ணே நீ எனக்கு ஒரு உதவி செய் , எனக்கு கை கால்கள் இருந்தாலும் எனக்கு மூளை இல்ல அத எனக்கு கொடுன்னு கேட்டுச்சு

அதுக்கு டோரா நானே உதவி கேட்டு ஒரு மாயாவிய தேடி போறேன் ,நீ யும் என்கூட வந்தா உனக்கும் உதவி கிடைக்கும்னு சொன்னா ,உடனே அந்த பொம்மையும் அவ கூட சேர்ந்து குதிச்சு குதிச்சு நடக்க ஆரம்பிச்சுச்சு

அப்படி போகுறப்ப ஒரு இரும்பு விறகு வெட்டிய பார்த்தாங்க அவுங்க ,அப்ப அந்த இரும்பு விறகுவெட்டி எனக்கு அதிக பலம் இருக்கு ஆனா எனக்கு இதயம் இல்ல எனக்கு உன்னோட உதவி கிடைக்குமான்னு கேட்டுச்சு

அதுக்கு டோரா நாங்க ஒரு மாயாவிய தேடி போறோம் ,நீ யும் என்கூட வந்தா உனக்கும் உதவி கிடைக்கும்னு சொன்னா ,உடனே அந்த இரும்பு விறகுவெட்டியும் அவுங்க கூட சேர்ந்து டங்கு டங்குனு நடக்க ஆரம்பிச்சுச்சு

அப்படி போகுறப்ப ஒரு சிங்கத்தை அவுங்க பார்த்தாங்க ,அந்த சிங்கம் அவுங்க கிட்ட சொல்லுச்சு ,எனக்கு மிக அதிகமா பலம் இருக்கு ஆனா எனக்கு தைரியம் கொஞ்சம் கம்மியா இருக்கு ,எனக்கு உதவி செய்யுங்கன்னு சொல்லுச்சு அந்த சிங்கம்

நாங்களே உதவி கேட்டுத்தான் போய்கிட்டு இருக்கோம் ,எங்க கூட வானு சொல்லி சிங்கத்தையும் கூட்டிகிட்டு எல்லாரும் நடக்க ஆரம்பிச்சாங்க

கடைசியா ஒரு பெரிய மாளிகை அவுங்க கண்ணுல பட்டுச்சு, அந்த மாளிகைக்கு பெரிய கதவு இருந்துச்சு , உடனே டோரா அந்த கதவ தட்டுனா

உள்ள இருந்து அந்த மாயாவி தாத்தா வந்தாரு ,உடனே டோரா தன்னோட கதையை சொன்னா
அதுக்கு அந்த மாயாவி என்னோட மாயாஜாலத்தை எல்லாம் பக்கத்துல இருக்குற கெட்ட சூனியக்கார கிழவி கட்டி போட்டு வச்சிருக்கா அவள நீங்க எல்லாரும் சேர்த்து விரட்டு அடிச்சிடீங்கன்னா நான் உங்களுக்கு உதவி செய்ய தயாரா இருக்கேனு சொன்னாரு

உடனே எல்லாரும் அந்த சூனியக்கார கிழவிய தேடி போனாங்க ,தன்னோட மாயாஜாலதாள டோரா வர்றத தெரிஞ்சிகிட்ட கிழவி அவுங்கள தொரத்த ஓநாய் கூட்டத்த அனுப்பி வச்சா

ஓநாய்கள பார்த்ததும் எல்லாரும் ரொம்ப பயந்து போனாங்க,ஆனா அந்த இரும்பு விறகுவெட்டி அந்த எல்லா ஓநாய்களையும் அடிக்க ஆரம்பிச்சாரு

உடனே எல்லா ஓநாய்களும் ஓட ஆரம்பிச்சுங்க ,உடனே அந்த சூனிய கார கிழவி நிறய கேட்ட காக்காக்கள அவுங்க மேல ஏவி விட்டா

உடனே அந்த சோளக்காட்டு பொம்ம அந்த காக்கா எல்லாத்தையும் விரட்டி விட்டுடுச்சு

உடனே சூனியக்கார கிழவி பறக்கிற கொரங்குகள அனுப்புச்சா ,அந்த குரங்குக அவுங்க எல்லாத்தையும் தூக்கிட்டு போயி அந்த சூனிய கார கிழவி முன்னாடி போட்டுச்சுங்க

எல்லாரும் பயந்தோபோயி அந்த கிழவிய பார்த்துகிட்டு இருந்தப்ப டோரா ஒரு விஷயத்த கவனிச்சா

அந்த சூனியக்கார கிழவியோட உடம்பு மெழுகால செய்ய பட்டு இருக்குறத பார்த்தயும் ,பக்கத்துல ஒரு வாளியில வெண்ணி கொதிச்சிகிட்டு இருக்குறதையும் பார்த்தா

உடனே அந்த வாளிய எடுத்து கிழவி மேல வெண்ணி தண்ணிய ஊத்துனா

வெண்ணி கிழவி மேல பட்டதும் மெழுகு உருக ஆரம்பிச்சிடுச்சு ,உடனே கிழவி கீழ விழுந்துட்டா

அங்க நிறய பேர சிறையில அடைச்சு வச்சிருந்தத பார்த்த டோரா எல்லாரையும் விடுதலை செஞ்சா

உடனே மாயாஜால சக்தி கிடைச்ச அந்த மாயாவி தாத்தா அங்க வந்தாரு , எல்லார் கேட்டதையும் கொடுத்த அந்த மாயாவி சொன்னாரு

இனி உன்னோட சிகப்பு செருப்பு மந்திர செருப்பா மாறிடும் நீ எங்க போகணும்னு நினச்சு மூடுதடவ தரையை தட்டினாலும் ,உடனே அந்த இடத்துக்கு அந்த மந்திர செருப்பு உன்ன கொண்டுபோய் விட்டுடும்னு சொன்னாரு
உடனே டோரா தன்னோட நாய்க்குட்டியை கைல வச்சிக்கிட்டு தன்னோட வீட்டுக்கு போகணும்னு சொல்லி மூணு தடவ தரையை தட்டுனா
அடுத்த நிமிஷம் அவ சொந்த ஊருல இருக்குற வீட்டுக்கு அவுங்க ரெண்டு பேரும் போய்ட்டாங்க