The Wise Owl and the Greedy Squirrel – ஆந்தையும் பேராசை அணிலும் :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு அணில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த அணிலுக்கு ஒரு புதையல் பெட்டி கிடைச்சுச்சு ,ஆர்வமான அணில் அந்த பெட்டியை திறந்து பார்த்துச்சு
அந்த பெட்டிக்குள்ள நிறைய நகைகளும் ஒரு ஓலையும் இருந்துச்சு
அந்த ஓலைல என்ன எழுதி இருக்குனு படிச்சு பாத்துச்சு அணில்
அதுல “இந்த பெட்டியில இருக்குற எல்லாத்தையும் எடுத்துக்கலாம் ஆனா சபிக்க பட்ட சிகப்பு கல் பதிச்ச மணிய மட்டும் யாரும் தொடாதீங்க’னு அந்த ஓலையில எழுதி இருந்துச்சு
அந்த ஓலைய படிச்சி பார்த்த அணிலுக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு ,உடனே அந்த சிகப்பு கல் பதிச்ச மணிய பார்க்கணும்னு ஆவல் அதுக்கு வந்துச்சு
உடனே அந்த பெட்டிக்குள்ள இருந்த அந்த மணிய தேடி எடுத்துச்சு
அந்த சிகப்பு கல் பதிச்ச மணி ரொம்ப அழகா இருக்குறத பார்த்த அணிலுக்கு ஆபத்த விட ஆச அதிகமாகிடுச்சு
ஓலையில எழுதி இருந்த கடிதத்தை பொருட்படுத்தாம அந்த சிகப்பு கல் மணிய தன்னோட கழுத்துல கட்டிக்கிட்ட நினச்சுச்சு
உடனே ஒரு பெரிய தங்க வலயத்தை எடுத்து தன்னோட கழுத்துல மாட்டிகிடுச்சு ,அந்த வலயத்துல அந்த சிகப்பு கல் மணிய தொங்க விட்டுச்சு அணில்
அந்த மணியோட தான் ரொம்ப அழகா இருக்கிறதா நினைச்சுச்சு அணில்
அந்த மணியோடயே காட்டுக்குள்ள சுத்தி வந்துச்சு அணில் ,ஆனா அந்த வளையம் நாள் ஆக ஆக சின்னதாகி கிட்டே வந்துச்சு
கொஞ்ச நாள்ல அந்த வளையம் அணிலோட கழுத்த இருக்க ஆரம்பிசிடுச்சு
அப்பத்தான் அந்த ஓலையில எழுதி இருந்த எச்சரிக்க அந்த அணிலுக்கு ஞாபகம் வந்துச்சு
அடடா பேராசையால மிக பெரிய தப்ப செஞ்சுட்டமேன்னு அணிலுக்கு அப்பத்தான் புரிஞ்சுச்சு
உடனே பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த புத்திசாலியான ஆந்தை நண்பர் கிட்ட போய் நடந்தத சொல்லுச்சு
அணிலாரே என்ன காப்பாத்துங்க இந்த வளையம் என்னோட கழுத்துல இறுக்கி மூச்சுக்கூட விட முடியலைன்னு சொல்லுச்சு
நடந்த தப்பு எல்லாம் அணிலொடதுனு புரிஞ்சிகிட்ட ஆந்த யோசிக்க ஆரம்பிச்சுச்சு
டக்குனு அணிலுக்கு ஒரு யோசனை வந்துச்சு , இந்த மணி மட்டும்தான் சபிக்க பட்டு இருக்கு அதனால தான் அந்த மணி தன்னோட கட்டி இருக்குற வளையத்தை நாளுக்கு நாள் சின்னத்துக்குதுனு புரிஞ்சிகிடுச்சு
உடனே அந்த சிகப்பு கல் மணிய கழட்டி அணிலோட உடம்புல படுற மாதிரி துணிய வச்சு கட்டுச்சு
ஆனா அணிலுக்கு ஒன்னும் புரியல ,அப்பத்தான் ஆந்த சொல்லுச்சு , இந்த மணி பட்டு பெருசா இருந்த வளையம் சின்னதா மாறுச்சுன்னா ,இந்த மணி பட்டு உன் உடம்பும் சின்னதா மாறிடும் அப்ப நீ சுலபமா வளையத்துல இருந்து வெளிய வந்துடலாம்னு சொல்லுச்சு
ஆந்த சொன்ன மாதிரியே , அணில் நாளுக்கு நாள் சின்னதா மாறிகிட்டே வந்துச்சு ,ஒரு நாள் அந்த வளயத்தை விட சின்னதா ஆனதுக்கு அப்புறம் அந்த வளையத்தையும் மணியையும் கழட்டி போட்டுட்டு ஆந்தைக்கு நன்றி சொல்லுச்சு அணில்