The Wise Owl and the Boastful Frog – ஆந்தையும் தவளையும் :-ஒரு காட்டு பக்கத்துல இருக்குற ஏரியில ஒரு தவளை வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அதோட கால் மத்த தவளைகள விட ரொம்ப வலிமையா இருக்கிறதா நினைச்சுகிட்டு ரொம்ப சேட்டை பண்ணுச்சு அந்த தவள
எப்பப்பாத்தாலும் குதிக்குறது ,ஓடுறதுனு சேட்டை பண்ணிகிட்டே இருந்துச்சு

ஒருநாள் ஒரு ஆந்தை மரத்தடியில தூக்கிகிட்டு இருக்குறத பார்த்துச்சு தவளை
அதுகிட்ட போயி ஏய் ஆந்தையாரே என்ன பகல்லயே தூக்கம் என்ன மாதிரி சுறுசுறுப்பா இருக்க மாட்டிங்களானு சொல்லிட்டு குதிச்சுச்சு

தவளை குதிக்கிறப்ப வந்த சத்தத்தால ஆந்தையால நிம்மதியா தூங்க முடியல
தவளையோட தொல்லைய தாங்க முடியாத ஆந்த ஒரு யோசனை செஞ்சுச்சு

தவளைகிட்ட உன்னால அந்த மரத்து மேல ஏறி அங்க இருந்து குதிக்க முடியுமான்னு கேட்டுச்சு
சேட்டைக்கார தவளையும் இது என்ன பிரமாதம் நான் மலை மேல இருந்து கூட குதிப்பேனு சொல்லிட்டு மரத்து மேல ஏறுச்சு
அங்க இருந்து குதிச்ச தவளை தன்னோட கால்களை உடைச்சிகிடுச்சு
தேவையில்லாம அடுத்தவங்கள தொந்தரவு பண்ணுனா என்ன நடக்கும்னு அந்த தவளை புரிஞ்சிகிடுச்சு