The Wild Swans – அன்னப்பறவை இளவரசர்கள் : முன் ஒரு காலத்துல ஒரு மிக பெரிய ராஜாங்கம் இருந்துச்சு

அந்த ராஜாங்கத்த ஒரு அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவருக்கு பதினோரு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தாங்க,ஆனா அரசரோட மனைவியான மகாராணி இல்ல

அந்த பதினோரு இளவரசர்களையும் தங்களோட அக்காவோட சொல்படி நடந்தாங்க ,அவுங்கமேல ரொம்ப வச்சிருந்தாங்க எல்லாரும்

தாய் இல்லாத அந்த பதினோரு இளவரசர்களையும் ரொம்ப பாசத்தோடு பார்த்துக்கிட்டாங்க அந்த இளவரசி

அவுங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறது ,விளையாட்டு சொல்லி கொடுக்குறதுனு அவுங்க அம்மா செய்யவேண்டிய எல்லா வேலையையும் இவுங்களே செஞ்சாங்க

ஒருநாள் அரசர் தன்னோட பிள்ளைகள் எல்லாரையும் கூப்பிட்டு நான் மறுமணம் செஞ்சுக்க போறேன்னு சொன்னாரு ,உடனே எல்லாரும் தங்களுக்கு புது அம்மா கிடைக்க போறாங்கன்னு சந்தோஷப்பட்டாங்க

ஆனா புதுசா வந்த அரசி ஒரு சூனியக்காரி ,அவுங்க அந்த இளவரசர்கள ஒளிச்சி கட்டணும்னு நினைச்சாங்க

அந்த சூனியக்காரிய பார்த்தாலே அந்த இளவரசர்கள் ரொம்ப பயந்தாங்க ,ஆனா அவுங்க அக்கா அவுங்களுக்கு ஆறுதல் சொல்லி தைரியமா இருக்க சொன்னாங்க

இந்த இளவரசி அரண்மனைல இருந்தா இளவரசர்கள ஒன்னும் பண்ண முடியாதுனு தெரிஞ்சிகிட்ட சூனியக்காரி, அரசர்கிட்ட சொல்லி வேற நாட்டுக்கு படிக்கிறதுக்கு அந்த இளவரசிய அனுப்பிட்டா

இளவரசி படிக்கிறதுக்கு வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறமா ரொம்ப பயந்து போயிருந்தாங்க இளவரசர்கள்

அவுங்க கிட்ட வந்த அந்த சூனியக்கார அரசி ஒரு மந்திரம் சொன்னாங்க

அந்த மந்திரம் சொன்னதும் 11 இளவரசர்களும் 11 அன்னப்பறவைகளா மாறிட்டாங்க

அந்த அன்ன பறவைகள வெளிய தொரத்தி விட்டுட்டாங்க அந்த சூனியக்கார இளவரசி

கொஞ்சநாள் கழிச்சு வெளிநாட்டுக்கு படிக்க போன இளவரசி திரும்ப வந்தாங்க ,அவங்க வந்தத பார்த்த சூனியக்காரி ஒரு மந்திரம் போட்டாங்க

உடனே அந்த இளவரசியோட முகம் அவலட்சணமா மாறிடுச்சு , அவுங்கள பார்த்தாலே யாருக்கும் அடையாளம் தெரியல

அதனால அரசர் அவுங்கள வேற யாரோன்னு நினச்சு காசு கொடுத்து அனுப்ப சொல்லிட்டாரு

ரொம்ப வருத்தப்பட்ட இளவரசி காட்டுக்கு போயி தன்னோட தம்பிகளை தேட ஆரம்பிச்சாங்க

அப்ப அங்க ஒரு மந்திர குளத்தை பார்த்தாங்க அதுல இருந்த தண்ணி பளிங்கு மாதிரி மின்னுச்சு ,அந்த தண்ணிய எடுத்து குடிச்சாங்க இளவரசி

உடனே இளவரசியோட முகம் திரும்ப வந்திட்டுது ,அப்பத்தான் ஒரு நல்ல மந்திர பாட்டி அங்க வந்தாங்க

அவுங்க இளவரசி படிக்க போனதும் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னாங்க ,உடனே இளவரசி ரொம்ப வளர்ட்பட்டு தன்னோட தம்பிங்கள பார்க்கணும்னு சொன்னாங்க

உடனே அந்த மந்திர பாட்டி ஒரு மந்திரம் வானத்தை பார்த்து சொன்னாங்க

உடனே 11 இளவரசர்களும் அன்னப்பறவை ரூபத்துல பறந்து வந்தாங்க

வந்த இளவரசர்கள் மேல அந்த மந்திர தண்ணிய தெளிச்சாங்க அந்த மந்திர பாட்டி உடனே இளவரசர்கள் திரும்பவும் மனிதர்களா மறுனாங்க

ஆனா இரவு வந்ததும் அவுங்க திரும்பவும் அன்னப்பறவையா மாறிட்டாங்க ,அப்ப அந்த பாட்டி சொன்னாங்க ,இந்த சூனியக்காரியோட பலம் அதிகமா இருக்க உங்கள நீங்க முழுசா காப்பாத்திக்கிடணும்னு என்னோட தங்கை அடுத்த காட்டுல இருக்கா அவகிட்ட போங்கன்னு சொன்னாங்க

உடனே ஒரு பெரிய பாய எடுத்து அதுல இளவரசிய உக்கார வச்சு அத எல்லா அன்னப்பறவை இளவரசர்களும் தூக்கிட்டு அந்த காட்டுக்கு போனாங்க

அங்க போனதும் அந்த குட்டி மந்திர வாதிய பார்த்தாங்க ,இளவரசர்களை காப்பாத்த ஒரு வழி சொன்னாங்க அவுங்க

மந்திர மூலிகைகலை எடுத்து 11 உடை செஞ்சு இளவரசர்களும் போட்டு விட்டா எல்லாம் சரியாகிடும்னு சொன்னாங்க ,ஆனா அந்த உடைகள் செய்து முடிக்கிற வரைக்கும் யாருகிட்டயும் பேசக்கூடாதுனும்னு சொன்னாங்க

உடனே இளவரசர்கள் 11 பெரும் பகல்ல அன்னப்பறவையா எல்லா மந்திர மூலிகைகளையும் சேகரிச்சாங்க

ராத்திரி ஆனதும் மனிதர்களா மாறி உடை தைக்க அவுங்க அக்காவுக்கு உதவி பண்ணுனாங்க

ஒருநாள் காட்டு பகுதியில மந்திர மூலிகைகள எடுத்துக்கிட்டு இருக்குறத பார்த்த ஒரு இளவரசரும் அவரோட தளபதியும் என்ன விஷயம்னு கேட்டாங்க

ஆனா மந்திர உடை செஞ்சு முடிக்கிற வர யார்கூடயும் பேசக்கூடாதுனு மந்திரக்காரி சொன்னதுனால அமைதியா இருந்தாங்க

உடனே அவுங்கள தன்னோட அரண்மனைக்கு கூட்டிட்டு போயி தங்க வச்சாரு இளவரசர் , ராத்திரி ஆனதும் யாருக்கும் தெரியாம காட்டு பகுதிக்கு போனாங்க அந்த இளவரசி

இத ரகசியா ஒளிஞ்சிருந்து பார்த்த பக்கத்து நாடு இளவரசரும் அவரோட தளபதியும் பார்த்தாங்க ,

அப்ப புத்திசாலியான அந்த தளபதி இந்த மூலிகை நீங்க எடுக்குறதுனால ஏதோ முக்கியமான விஷயம்னு நினைக்குறேனு சொல்லி ,காவலர்களை விட்டு நிறய மூலிகைகள பிடிங்கி அவுங்ககிட்ட கொடுத்தாரு அந்த தளபதி

அந்த மூலிகையை வச்சு எல்லா இளவரசர்களும் உடை தயார் செஞ்சாங்க இளவரசி

மறுநாள் காலையில அன்னப்பறவை வடிவுல இருந்த இலவசர்கள் எல்லாருக்கும் அந்த உடைய போட்டு விட்டாங்க அந்த இளவரிசையும் தளபதியும்

உடனே எல்லா இளவரசர்களும் சாபம் நீங்கி நல்ல படியா மனிதர்களா மறுனாங்க ,அப்பத்தான் இத்தனை நாள் அமைதியா இருந்த இளவரிசி நடந்த எல்லாத்தையும் அந்த உதவி செஞ்ச இளவரசர்கிட்டயும் தளபதி கிட்டயும் சொன்னாங்க ,சாபம் நீங்கதான் இத்தனை நாள் பேசாம இருந்ததாவும் சொல்லி மன்னிப்பும் கேட்டாங்க

உடனே அந்த பக்கத்து நாட்டு இளவரசர் சொன்னாரு உங்க அப்பாவுக்கு உண்மை தெரியாம இருக்கிறதுதான் பிரச்னையேனு சொல்லி

நிறய பாதுகாப்பு வீரர்கள் எல்லாரையும் கூப்பிட்டுக்கிட்டு அரசரை போய் பார்த்தாங்க

அப்பத்தான் அந்த அரசருக்கு உண்மை புரிஞ்சது உடனே அந்த சூனியக்காரிய பாதாள சிறையில அடைச்சிட்டாங்க
தன்னோட சந்தோஷத்துக்காக மறுபடியும் திருமணம் செஞ்சது எவ்வளவு தப்புனு புரிஞ்சிகிட்ட அரசர் தன்னோட மகன்களையும் இளவரிசையையும் அன்னைல இருந்து ரொம்ப பாதுகாப்பா வளர்க ஆரம்பிச்சாரு

இதுக்கு எல்லாம் துணை செஞ்ச அந்த பக்கத்து நாட்டு இளவரசருக்கும் அவரோட தளபதிக்கு நன்றியும் சொன்னாரு அவரு