The Weeping River – நதியின் கண்ணீர் – Akbar Birbal Story:- அது ஒரு மழை காலம் ,யமுனா நதில வெள்ளம் போய்கிட்டு இருந்துச்சு
அக்பரோட அரண்மன நதிக்கு பக்கத்துல இருந்த்ததால அக்பரோட படுக்கை அறை வரைக்கும் நதி வெள்ளத்தோட சத்தம் கேட்டுச்சு
அந்த சத்தத்த கேட்டு கிட்டே அக்பர் தூங்கிகிட்டு இருந்தாரு,அப்ப திடீர்னு அக்பருக்கு முழிப்பு வந்திடுச்சு
ஜன்னல் வழியா நதிய பார்த்தாரு ,ஆர்பரித்து ஓடுன நதில தெறிச்ச தண்ணிய பார்த்த அக்பருக்கு நதி அழுற மாதிரி தெரிஞ்சது
இது என்ன யமுனா நதி அழுகுதுனு தனக்குள்ளேயே கேட்டுட்டு ,ஒரு புத்தகத்த படிக்க ஆரம்பிச்சாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா தூங்கி போனாரு அக்பர்
காலைல எழுந்துள்ள இருந்து நதி ஏன் அழுகுதுன்ற கேள்வி அக்பருக்கு வந்துகிட்டே இருந்துச்சு
அதனால் பீர்பால் கிட்ட இத பத்தி கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே ,நதி தன்னோட பிறந்த வீடான மலைல இருந்து கணவர் வீடான கடலுக்கு போறதுனால நதி அழுகுதுனு சொன்னாரு
இத கேட்ட அக்பருக்கு ஒரு திருப்தி வந்துச்சு,அதுக்கு அப்புறமா நதியோட சத்தத்துல நிம்மதியா தூங்குனாரு அக்பர்