கடலுக்கு கல்யாணம் -The Wedding of the Sea-Akbar Birbal Story :-ஒரு முறை அக்பருக்கு , பீர்பாலுக்கும் சின்னதா ஒரு சண்ட வந்துச்சு

கோபமான அக்பர் ,இனிமே நீங்க மந்திரி கிடையாது ,வேற நாட்டுக்கு போய்டுங்கனு சொன்னாரு

பீர்பலும் அது மாதிரியே வேற நாட்டுக்கு போய்ட்டாரு
கொஞ்ச நாளுக்கு அப்புறமா பீர்பால் இல்லாம அக்பரால இருக்க முடியல
சின்ன சண்டைக்கு இப்படி பீர்பால வெளியில அனுப்பிச்சுட்டமேன்னு வருத்தப்பட்டாரு
உடனே தன்னோட காவலர்கள விட்டு பக்கத்துல இருந்த எல்லா நாட்டுலயும் தேட சொன்னாரு

ஆனா அவுங்களால பீர்பால கண்டுபிடிக்க முடியல
அப்பத்தான் அக்பருக்கு ஒரு யோசனை தோணுச்சு ,பக்கத்துக்கு நாட்டு அரசர் எல்லாருக்கும் ஒரு கடிதம் அனுப்புனாரு

அந்த கடிதத்துல எங்க நாட்டுல இருக்குற கடலுக்கு கல்யாணம் ,உங்க நாட்டு நதிகளை எல்லாம் அனுப்பி வைங்கன்னு அதுல சொல்லி இருந்துச்சு

இத பார்த்த எல்லா அரசர்களுக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு ,என்ன நதிய அனுப்பி வைக்கணுமா ,அது எப்படி முடியும்னு குழம்பி போனாங்க

அக்பர் மற்ற அரசர்கள் கிட்ட இருந்து பதில் கடிதம் வரும்னு எதிர்பார்த்து காத்திருந்தாரு
ஆனா ஒரே ஒரு ராஜா கிட்ட இருந்து மட்டும் ஒரு கடிதம் வந்துச்சு
அதுல ,நாங்க எங்க நதிகளை கடலோட கல்யாணத்துக்கு அனுப்பி வைக்கிறோம் ,ஆனா அத வரவேற்க்க முதல்ல உங்க நாட்டுல இருக்குற கிணத்த அனுப்பி வைங்கன்னு அதுல எழுதி இருந்துச்சு
உடனே அக்பருக்கு புரிஞ்சு போச்சு ,பீர்பால் அந்த நாட்டு ராஜாவோடதான் இருக்காருன்னு
உடனே நேர்ல போயி பீர்பால தன்னோட நாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு