காந்தியின் செம்பு நாணயம் – The value of a copper coin :- சுதந்திரத்துக்கு முன்னாடி காந்தி தாத்தா எல்லா ஊருக்கும் நடை பயணம் மேற்கொண்டாரு
அப்படி ஒருநாள் பீகார் மாநிலத்துல ஒரு கூட்டம் போட்டாரு
அப்ப ஒரு வயசான பாட்டி மெதுவா அவர் கிட்ட வந்து ஒரு செம்பு நாணயத்த காந்தி தாத்தா கிட்ட கொடுத்தாங்க
அத வாங்குன காந்தி தாத்தா அப்படியே தன்னோடயே வச்சுக்கிட்டாரு
அவரோட கூட இருந்தவங்க என்ன அய்யா எவ்வளவு லச்ச ரூபா யார் கொடுத்தாலும் எங்க கிட்ட கொடுத்து பாதுகாக்க சொல்லுவீங்க
ஆனா இந்த ஒத்த செம்பு நாணயத்த மட்டும் எங்களை நம்பி கொடுக்க மற்றிங்களேன்னு கேட்டாரு
இத கேட்ட காந்தி சொன்னாரு இந்த நாணயம் ரொம்ப முக்கியமானது கொடியில சம்பாதிக்கிற ஒருத்தர் தர்ற லச்ச ரூபாய விட
ஒண்ணுமே இல்லாம தன்னோட ஒரு செம்பு நாணயத்த மட்டும் வச்சிருக்கிற ஒருத்தர்அதையும் கொடுக்குற மனச நான் ரொம்ப நேசிக்கிறேன்
அதனால தான் அந்த நாணயத்த நானே வச்சிருக்கேன்னு சொன்னாரு