The two brothers full story – இரண்டு மகன்கள் நீதி கதை :- ஒரு பண்ணை வீட்டுல ரெண்டு மகன்களும் ஒரு பெரியவரும் வாழ்த்துகிட்டு வந்தாங்க
அவுங்க மூணு பேரும் அந்த இடத்துலயே மிருக பண்ணையும் விவசாயமும் செஞ்சாங்க
அப்பதான் அந்த மூத்த மகனுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு
தன்ன விட தன்னோட தம்பிக்கு அப்பா ரொம்ப பொறுப்புகளை கொடுக்குறாரோன்னு
இத அவுங்க அப்பாகிட்டயே போய் நேரடியா கேட்டான் அந்த மூத்த பையன்
அதுக்கு அந்த புத்திசாலியான அப்பா ஒரு சின்ன செயல் முறை விளக்கத்தோடு அவனுக்கு புரிய வச்சாரு
நீ போயி பக்கத்துக்கு தோட்டத்துல கோழி விலைக்கு கிடைக்குமான்னு கேட்டுட்டு வானு சொன்னாரு
உடனே அவனும் போய் கேட்டுட்டு வந்தான்
அப்பா அவுங்க கோழி விலைக்கு வச்சிருக்காங்கன்னு சொன்னான்
உடனே எவ்வளவு கோழி விலைக்கு இருக்குன்னு கேட்டுட்டு வானு சொன்னாரு
உடனே திரும்ப போன அவன் திரும்பி வந்து அப்பா 20 கோழி விலைக்கு இருக்காம்னு சொன்னான்
ஓ ஒரு கோழி எவ்வளவுன்னு கேட்டாரு
உடனே திரும்ப போன அவன் திரும்பி வந்து அப்பா 1 கோழி 50 ரூபாய்னு சொன்னாங்கன்னு சொன்னான்
உடனே அவன பக்கத்துல உக்கார வச்சுட்டு
தன்னோட இளைய மகன கூப்பிட்டாரு, தம்பி நீ போய் பக்கத்துல இருக்குற தோட்டத்துல கோழி விலைக்கு இருக்கான்னு கேட்டு வானு சொன்னாரு
கொஞ்ச நேரத்துல திரும்பி வந்த இளைய மகன் , அப்பா அவுங்ககிட்ட 10 கோழி விலைக்கு இருக்காம் , ஒரு கோழி 50 ரூபா சொல்ராங்க, மொத்தமா வாங்குனா 40 ரூபாய்க்கு தருவீங்களான்னு கேட்டேன் அதுக்கு அவுங்க 45 ரூபாய்க்கு வாங்கிக்கிட சொன்னாங்க அப்படின்னு சொன்னான்
அப்பதான் தன்னோட திறமைக்கும் தன்னோட தம்பியோட திறமைக்கும் இருக்குற வித்தியாசத்த அவன் புரிச்சிக்கிட்டான்