The Tree And The Axe – மரமும் கோடாரியும்:- ஒரு விறகுவெட்டி ஒருநாள் காட்டுக்குள்ள விறகு வெட்ட போனாரு

அங்க ஒரு நல்ல மரமா பார்த்து வெட்ட ஆரம்பிச்சாரு

அப்பத்தான் பார்த்தாரு அவரோட கோடாரியோட கைப்பிடி ஒடஞ்சு இருந்துச்சு ,அடடா இத வச்சு பெரிய மரங்கள வெட்ட முடியாதேன்னு வருத்தப்பட்டாரு

அப்பத்தான் அந்த மரம் பேசுச்சு ,ஏன் வறுத்தப்படுறீங்கனு அந்த விறகு வெட்டிய பார்த்து கேட்டுச்சு

அந்த விறகு வெட்டி சொன்னாரு எனக்கு கோடாரி கைப்பிடி ஒடஞ்சுடுச்சுனு ,அதுக்கு ஏன் கவலை படுறீங்க அத வெச்சு பெரிய மரத்தை தானே வெட்ட முடியாது அதைவெச்சு சின்ன கிளை ஒண்ண வெட்டி புது கைபிடி செய்யுங்கன்னு யோசனை சொல்லுச்சு

உடனே அந்த மரத்துலயே ஏறி ஒரு நல்ல கிளைய வெட்டி எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போனாரு அந்த விறகு வெட்டி

வீட்டுக்கு போனதும் அந்த கிளையை செதுக்குனாரு விறகுவெட்டி

செதுக்குன அந்த கிளை கச்சிதமா அந்த கோடரிக்கு கைப்பிடியா அமைஞ்சுச்சு

அத எடுத்துக்கிட்டு மீண்டும் காட்டுக்கு வந்த விறகுவெட்டி ,தனக்கு உதவி செஞ்ச மரத்துக்கிட்ட வந்தாரு , தன்னோட புது கோடாரியை வச்சு எல்லா மரத்தையும் வெட்ட ஆரம்பிச்சாரு

அத பார்த்த அந்த உதவி செஞ்ச மரம் சொல்லுச்சு ,யாருக்கு உதவி செய்யணும்னு ஒரு வரைமுறை இருக்கு ,அத மீறி தங்களை வெட்டி வாழ்வு நடத்துற இவருக்கு உதவி செஞ்சது மிக பெரிய தவறுன்னு சொல்லுச்சு

சுத்தி இருக்குற எல்லா மரத்தையும் வெட்டுன விறகுவெட்டி ,கடைசியா தனக்கு உதவி செஞ்ச மரத்தையும் வெட்டுனாரு , தேவையில்லாத உதவி செஞ்ச அந்த மரமும் வெட்டு பட்டு கீழ விழுந்துச்சு