The Traveller And The Plane Tree – 2 பயணிகளும் மரமும் :- ஒரு கோடை காலத்துல ரெண்டு பயணிகள் கால் நடையை நடந்துகிட்டு இருந்தாங்க
அன்னைக்கு ரொம்ப வெயிலடிச்சதால அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப சோர்ந்து போனாங்க
நிழல் தேடி ரொம்ப தூரமா நடந்த அவுங்களுக்கு அங்க ஒரு பெரிய மரம் கண்ல பட்டது
அண்டா மரம் ரொம்ப பெருசா இருந்தது, பல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அடிக்கலமா இருந்தது அந்த மரம்
பயணிகள் ரெண்டுபேரும் ஓடி போயி அந்த மரத்தடி நிழல்ல உக்காந்தாங்க
வெயிலோட தாக்கம் அதிகரிச்சு சாவோட விளிம்புக்கு சென்ற அவுங்களுக்கு அந்த பயணிகளுக்கு அந்த நிழல் நிம்மதிய தந்தது
அப்பத்தான் அந்த பயணிகள்ள ஒருத்தர் மரத்துல ஏறி எதாவது பழங்கள் இருக்கன்னு பாத்தாரு
ஆனா அந்த மரம் பழம் காய்க்கிற மரம் இல்லைன்றதால அவருக்கு சாப்பிட ஒண்ணுமே கிடைக்கல
அந்த மரத்த பாத்து இந்த மரம் ஒரு உதவாக்கரை மரம் இதுனால நமக்கு ஒன்னும் புரயோஜனமும் இல்லைனு சொன்னாரு
இத கேட்ட இன்னொரு பயணி நமக்கு உணவு கொடுக்கலைனு இந்த மரத்த திட்டுற ஆனா இந்த மரம் மட்டும் இல்லைனா நீயும் நானும் வெயில்ல வதங்கி செத்திருப்போம்
உனக்கு வேணும்கிறத விட அதிகமாவே நமக்கு அந்த மரம் கொடுத்திருக்குனு சொன்னாரு
தன்னோட தவற உணர்ந்த அந்த பயணி மனம் உருகினாரு