The Tortoise and the bird – ஆமையும் குருவியும் :- ஒரு ஆத்துக்கு பக்கத்துல ஒரு ஆமை வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அது எப்பவும் அடுத்தவங்கள குறை சொல்லிகிட்டே இருக்கும்
ஒருநாள் பக்கத்துல இருந்த மரத்துல ஒரு குருவி கூடுகற்றத பாத்துச்சு

உடனே ஒய் சிறிய பறவையே உனக்கு ஏன் ஒழுங்கவே கூடு கட்ட தெரியல
என்னோட வீட்ட பாத்தியா எவ்வளவு கெட்டியான ஓடு
உன் வீடு லேசா காத்து அடிச்சாலே விளுந்துனும்போல அப்படினு சொல்லி சிரிச்சது

ஆமையோட திமிர்த்தனமான பேச்ச கேட்ட குருவிக்கு கோபம் வந்துச்சு
என்னோட வீட்டுக்கு உறவினர்கள் வரலாம் ,நண்பர்கள் வரலாம் வருவேனா வரலாம் தங்கலாம்

ஆனா உன்னோட வீட்டுல நீமட்டும்தான் தங்க முடியும்
எப்பவும் யாரையாவது கோரசொல்றத விட்டுட்டு வேலைய பொய் பாருன்னா சொல்லுச்சு
குருவியோட பேச்ச கேட்ட ஆமைக்கு ஒரே அசிங்கமா போச்சு உடனே அங்க இருந்து ஓடி போயிடுச்சு