The Three Statues – Akbar Birbal Tamil Stories-மூன்று பொம்மைகள் :-அக்பர் பீர்பாலோட புகழ் உலக நாடுகளுக்கு எல்லாம் பரவுச்சு ,இத கேள்விப்பட்ட ஈரான் அரசர் அவுங்களுக்கு மூணு பொம்மய பரிசா அனுப்பி வச்சாரு
அது கூட ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பிச்சார் ,அதுல இந்த மூணு பொம்மைகளையும் எது நல்லது கேட்டதுனு சரியா வரிச படுத்த சொல்லி எழுதி இருந்துச்சு
அப்படி சரியா இருந்தா பீர்பால் புத்திசாலின்னு நானும் ஒத்துக்கிறேன்னு எழுதி இருந்துச்சு
உடனே பீர்பால கூப்பிட்டு விஷத்தை சொன்னாரு அக்பர் ,உடனே பீர்பால் அந்த பொம்மைகளை ரொம்ப உத்து பாத்தாரு ,ஆனா அந்த பொம்மைங்க ஒரே மாதிரி இருந்துச்சு ,ஒரே நிறத்துல ,ஒரே எடையில இருந்த அந்த பொம்மைகளை பீர்பால் எப்படி வரிசபடுத்த போறாருனு அக்பருக்கு ஆவலா இருந்துச்சு
ரொம்ப நேரம் அந்த பொம்மைகள பார்த்துட்டே இருந்த பீர்பால் ,ஒரு நூல எடுத்து பொம்மையோட காதுல விட்டாரு ,முதல் பொம்மையில காதுல போன நூல் வாய் வழியா வந்துடுச்சு ,
ரெண்டாவது பொம்மையில் காது வழியா போன நூல் இன்னொரு காது வழியா வந்துடுச்சு
மூணாவது பொம்மையில் காது வழியா போன நூல் உள்ளயே தங்கிடுச்சு
அதுக்கு அப்புறமா பீர்பால் சொன்னாரு இந்த மூணாவது பொம்மதான் ரொம்ப நல்ல பொம்மை ,ரெண்டாவது இருந்த பொம்ம அடுத்தும் ,கடைசியா முதல்ல இருந்த பொம்மையையும் வரிசை படுத்தலாம்னு சொன்னாரு
அக்பர் விளக்கமா சொல்ல சொல்லி கேட்டாரு
அரசே இந்த பொம்மைகளை மனுசனா நினச்சா தான் கேட்ட விஷயத்தை தனுக்குள்ளயே வச்சுக்கிடுற இந்த கடைசி பொம்மதான் சிறந்தது,ரெண்டாவதா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு தன்னோட வேலைய பாக்குற பொம்ம ரெண்டாவது இடம் ,காதுல கேட்டு வாய் வழியா பேசிக்கிட்டே இருக்குற இந்த முதல் பொம்மைக்கு கடைசி இடம்னு சொன்னாரு
இத ஒரு கடிதமா எழுதி ஈரான் அரசருக்கு அனுப்புனாரு அக்பர்,இந்த விஷயங்களை படிச்ச அரசர் ,பீர்பால் இந்த உலகத்துலயே புத்திசாலின்னு திரும்பி கடிதம் போட்டாரு