The Three Billy Goats Gruff Story in Tamil – மூன்று ஆடுகள் :- ஒரு காட்டு பகுதியில மூணு ஆட்டு குட்டிகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க

அது மூணும் உருவத்துல வேற மாதிரி இருந்துச்சுங்க, ஒரு ஆடு ரொம்ப குட்டியவும் ,இன்னொன்னு கொஞ்சம் சுமாரான ஆடு , ஆனா இன்னொரு ஆடு ரொம்ப பெரிய ஆடு கெடா

ஒருநாள் அந்த குட்டி ஆடு ,நாம கட்டோட இந்த பகுதியில இருக்குற எல்லா புல்லையும் தின்னுட்டோம் , இப்ப நாம கட்டோட அடுத்த பகுதிக்கு போவோமான்னு கேட்டுச்சு

அதுக்கு அந்த சுமாரான ஆடு சொல்லுச்சு ,கட்டோட அந்த பகுதிக்கு போக நாம அந்த ஆத்த கடக்கணும் ,அதுக்கு நமக்கு இருக்குற ஒரே வழி அந்த பாலம் தான் அதையும் ஒரு ராட்சசன் பாதுகாக்குறான்,அவன் நம்மள பாலத்தை கடக்க விடமாட்டானு சொல்லுச்சு

அதுக்கு அந்த ஆட்டு கெடா சொல்லுச்சு நான் தான் பலசாலி இருக்கன்ல நான் போயி அவனை முட்டி தள்ளி விட்டுறேன் அதுக்கு அப்புறம் நீங்க வாங்க நாம் அந்த பாலத்தை கடந்திடலாம்னு சொல்லுச்சு

அதுக்கு அந்த குட்டி ஆடு சொல்லுச்சு ஒருவேளை அவன் திரும்ப வந்துட்டா நாங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் மாட்டிக்குவோம் ,அந்த அரக்கன் உஷாராகிட்டா உன்னாலயும் திரும்ப வர முடியாதுனு சொல்லுச்சு

உடனே மூணு ஆடும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டாங்க ,அதுபடி அந்த குட்டி ஆடு மெதுவா பாலத்துல நடந்து போச்சு

குட்டி ஆட்டோட காலடி சத்தம் கேட்டதும் தூங்கிட்டு இருந்த அரக்கன் மெதுவா எந்திரிச்சு பார்த்தான்

குட்டி ஆட்ட பார்த்த அந்த அரக்கன் என் பாலத்தை பயன்படுத்த உன்ன அனுமதிக்க முடியாது அதனால் உன்ன திங்க போறேன்னு சொன்னான்

அதுக்கு அந்த குட்டி ஆடு சொல்லுச்சு ,நானே ரொம்ப குட்டியா இருக்கேன் என்ன திண்ணா உனக்கு எப்படி பசி போகும்,அதனால என்ன இந்த ஆத்த கடக்கவிடு ,என்ன தேடி இன்னொரு பெரிய ஆடு வரும் அத நீ பிடிச்சு தின்னுக்கொன்னு சொல்லுச்சு

அதுக்கு அந்த அரக்கன் நான் உன்னையும் தின்னுடறேன் ,அந்த பெரிய ஆடு வந்தா அதையும் திண்ணுறேன்னு சொன்னான்

அதுக்கு அந்த குட்டி ஆடு சொல்லுச்சு ,நான் அந்த பக்கம் ஆபத்து இல்லாம போனாதான் அடுத்த ஆடு இங்க வரும் ,நீ என்ன கொன்னுட்டா ஆபத்து இருக்குனு தெரிஞ்சி அந்த பெரிய ஆடு இங்க வராதுன்னு சொல்லுச்சு

உடனே அந்த குட்டி ஆட்ட பாலத்தை கடக்க வழி விட்டான் அந்த அரக்கன் ,குட்டி ஆடு அந்த பக்கம் போனதுக்கு அப்புறமா அந்த சுமாரான ஆடு பாலத்துல ஏறி நடக்க ஆரம்பிச்சுச்சு

அந்த ஆட்ட பார்த்த அரக்கன் நீதான் அந்த பெரிய ஆடா ,நான் உன்ன திங்க போறேன்னு சொன்னான் ,அதுக்கு அந்த சுமாரான ஆடு சொல்லுச்சு,அந்த பெரிய ஆடு பின்னாடி வருது என்னையும் அந்த பக்கம் போக விட்டனா தான் அந்த பெரிய ஆடு இங்க வரும்னு சொல்லுச்சு

உடனே அரக்கனும் அதுக்கு வழி விட்டான் ,அடுத்ததா அந்த ஆட்டு கெடா வந்துச்சு

அத பார்த்த அரக்கனுக்கு ஒரே சந்தோசம் ஆகா ரொம்ப பெரிய ஆடு ,பாவம் பார்த்து ரெண்டு ஆடுகளை அந்த பக்கம் போக விட்டதுக்கு நமக்கு நல்ல விருந்துனு நினைச்சான்

மத்த ஆடுகள் மாதிரியே இந்த ஆடும் நம்ம கிட்ட எதாவது பேசனும்னு நினச்சு எழுந்திரிச்சி நின்னான் அரக்கன்,அப்ப அந்த ஆட்டு கெடா மெதுவா பின்னாடி போச்சு

இந்த ஆடு என்ன செய்யுதுனு யோசிக்கிறதுகுள்ள அந்த ஆடு ஓடி வந்து அந்த அரக்கனை முட்டி தள்ளி விட்டுச்சு

அத கொஞ்சம்கூட எதிர் பார்க்காத அரக்கன் அப்படியே ஆத்துக்குள்ள விழுந்துட்டான்

அவன் எழுந்து பாலத்துக்கு வர்றதுக்கு முன்னாடி அந்த ஆட்டு கெடா அந்த பக்கம் போய்டுச்சு

ஆத்துக்கு அந்த பக்கம் தங்களோட திட்டப்படி எல்லாம் சரியா நடந்ததை நினச்சு சந்தோஷப்பட்டாங்க எந்த மூணு ஆடும்

அங்க புதுசா இருந்த புல்வெளி எல்லாத்தையும் ஆசையோட சாப்பிட்டு சந்தோசமா இருந்தாங்க அந்த மூணு நண்பர்களும்