The Thread of Love – Mariyadhai Raman Stories in Tamil-யார் குழந்தை :- ஒருநாள் மரியாதை ராமன் தன்னோட கிராமத்துல நடந்து போய்கிட்டு இருந்தாரு
அப்ப ஒரு தெருவுல நிறயபேர் நின்னு பேசிகிட்டு இருந்தாங்க ,அங்க ஒரே கூச்சல் குழப்பம் இருக்குறத பார்த்தாரு மரியாதை ராமன்
உடனே அங்க என்ன சத்தம்னு தெரிஞ்சிக்கிட அந்த கூட்டத்துக்கிட்ட போனாரு
அங்க ரெண்டு பெண்கள் சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க , அவுங்க ஒரு குழந்தையை கையில வச்சிக்கிட்டு இது என்னோட குழந்தைனு ரெண்டு பேருமே சொல்லிக்கிட்டு சண்டை போட்டாங்க
கூட்டத்துல மரியாதை ராமன் நிக்குறத பார்த்த அந்த ஊர் பெரியவர் ஒருத்தரு அவருகிட்ட வந்தாரு
அடடா இந்த நாட்டுலயே மிகவும் புத்திசாலியான மரியாதை ராமன் இங்க வந்திருக்காரு
இவரோட புத்தி கூர்மையாள பல பிரச்சனைகள் தீர்த்து வைக்க பட்டிருக்கு ,அதனால யாரோட குழந்தை இதுனு இவர் கண்டு பிடிச்சி கொடுப்பாருனு சொன்னாரு
உடனே மரியாதை ராமனும் அந்த ரெண்டு பெண்களை கூப்பிட்டு தனி தனியா விசாரிச்சாரு
அவுங்க ரெண்டு பேருமே அது தன்னோட குழந்தை தான்னு சத்தியம் செஞ்சு சொன்னாங்க
உடனே மரியாதை ராமன் சொன்னாரு எனக்கு அந்த குழந்தை யாரோடதுனு ஏற்கனேவே தெரியும் ,நீங்க உண்மையா சொல்லலைனா நானே அரசருக்கு சொல்லி அனுப்பிச்சு ,காவலாளிகள் கிட்ட பிடிச்சி கொடுத்துடுவேன்னு சொன்னாரு
அத கேட்ட பிறகும் அவுங்க ரெண்டு பேரும் அது தன்னோட குழந்தைதானு சொன்னாங்க
இத கேட்ட அந்த கூட்டத்துல இருந்த எல்லாரும் இப்ப மரியாதை ராமன் என்ன செஞ்சு உண்மைய கண்டுபிடிக்க போறாருனு ஆவலா பார்த்தாங்க
அப்பத்தான் ஊர் தலைவரை கூப்பிட்டு ஒரு பெரிய நூல் கண்டு கொண்டுவர சொல்லி சொன்னாரு
உடனே ஊர் தலைவர் ஒரு பெரிய நூலை கொண்டுவந்து மரியாதை ராமன் கிட்ட கொடுத்தாரு
அத வாங்கி பார்த்த மரியாதை ராமன் ஒரு பெரிய நூல எடுத்து அத ரெண்டு சரி பாகமா வெட்டுனாரு
ஒரு நூல அந்த குழந்தையோட வலது கையில கட்டுனாரு ,இன்னொரு நூலை குழந்தையோட இடது கையில கட்டுனாரு
அப்படி குழந்தையோட ரெண்டு கையிலயும் நூல கட்டிட்டு ,அதே பெண்கள் கிட்ட சொன்னாரு இது தீர்க்க முடியாத பிரச்னையா மாறிடுச்சு
அதனால உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் யார் இதுல ஜெயிக்கிறீங்களோ அவுங்க அந்த குழந்தையை வச்சிக்கிடலாம்னு சொன்னாரு
உடனே அந்த ரெண்டு பெண்களும் என்ன போட்டின்னு கேட்டாங்க ,அதுக்கு மரியாதை ராமன் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு நூல கொடுத்து இந்த நூலோட நுனி குழந்தையோட கையில கட்டி இருக்கு
நீங்க ரெண்டு பேரும் இன்னொரு நுனியை பிடிச்சு இழுங்க யாருகிட்ட குழந்தை வந்து சேருதோ அவுங்கதான் வெற்றி பெற்றதா அறிவிக்க படும் , அவுங்க கிட்டயே அந்த குழந்தையும் ஒப்படைக்க படும்னு சொன்னாரு
உடனே ரெண்டு பெண்களும் குழந்தையை கட்டி இருந்த நூல பிடிச்சி இழுத்து குழந்தையை தங்க பக்கம் இழுக்க முயற்சி செஞ்சாங்க
முதல்ல இருந்த பெண் நூல மெதுவா இழுத்தா ,ஆனா ரெண்டாவதா இருந்த பெண் வேகமா நூல இழுக்க அந்த நூல் பிஞ்சு போச்சு
உடனே மரியாதை ராமன் சொன்னாரு முதல் பெண் தான் ஜெயிச்சது அவ கிட்ட அந்த குழந்தைய ஒப்படைக்க சொன்னாரு
இத பார்த்த ஊர் பெரியவர் சொன்னாரு அடடா இது என்ன உண்மையான அம்மாவ கண்டு பிடிச்சி அவுங்க கிட்டாதான குழந்தையை ஒப்படைக்கணும் ,நீங்க என்னடானா போட்டி வச்சி ஒருத்தர்கிட்ட குழந்தைய ஒப்படைக்கிறீங்களேன்னு கேட்டாரு
அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு , இந்த போட்டியில ஜெயிச்சவங்க தான் உண்மையான அம்மானு சொன்னாரு
உடனே கூட்டத்துல இருந்த எல்லாரும் கேட்டாங்க அத எப்படி கண்டுபிடிசீங்கனு கேட்டாங்க
அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு ரெண்டாவதா நூல இழுத்த பெண் குழந்தைக்கு வலிக்குமேனு கூட பார்க்காம ,தான் போட்டியில ஜெயிக்கணும்னு ரொம்ப வேகமா இழுத்த தால தான் அந்த நூல் அறுந்து போச்சு
அதே நேரத்துல தன்னோட குழந்தைய கட்டி இருந்த நூல் குழந்தையோட கைய இறுக்கி ,குழந்தைக்கு வலிக்க கூடாதுன்னு நினச்சா உண்மையான அம்மா மெதுவா அந்த நூல இழுத்தங்க
அத வச்சுதான் அவுங்கதான் உண்மையான அம்மானு முடிவு செஞ்சேன்னு சொன்னாரு
இத கேட்ட எல்லாரும் மரியாதை ராமனோட அறிவை பார்த்து வியந்தாங்க