ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும் :- ஒரு ஊருல ஒரு வயசான செருப்பு செய்ற தாத்தா இருந்தாரு ,அவருக்கு ரொம்ப வயசானதால அவரால ரொம்ப உழைக்க முடியல அதனால சாப்பாட்டுக்கே அவரும் அவர் மனைவியும் கஷ்டப்பட்டாங்க

ஒரு நாள் தன்னோட கடைல இருந்த கடைசி தோல வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப அவரோட மனைவி வந்து கேட்டாங்க ரொம்ப நேரமாச்சு இன்னும் என்ன செய்ரீங்கனு கேட்டாங்க

அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு இதுதான் நம்ம கிட்ட இருக்குற கடைசி தோல் இதவச்சு நல்ல சூ செய்ய போறேன்னு சொன்னாரு

ரொம்ப நேரமாச்சு காலைல எந்திரிச்சு அத செய்ங்கன்னு சொன்னாங்க அந்த பாட்டி ,உடனே அவர் அந்த தோல அப்படியே வச்சுட்டு தூங்க போய்ட்டாரு
மறுநாள் காலைல வந்து பாத்தா அந்த தோல் நல்ல சூவா மாறியிருந்துச்சு ,அடடா இது என்ன நான் இந்த சூவ செய்யலையே யார் இத செஞ்சிருப்பான்னு அத எடுத்து பாத்தாரு

அந்த சூ ரொம்ப அழகாவும் நல்லா உழைக்கிற மாதிரியும் இருந்துச்சு ,அத எடுத்து கடைக்கு முன்னாடி வச்சாரு தாத்தா


அப்ப அங்க வந்த ஒரு வியாபாரி ,அடடா என்ன ஒரு அற்புதமான சூ இந்த சூ இருந்தா பாலைவனத்துல கூட நடக்கலாம்னு சொல்லி நிறைய காசு கொடுத்து அந்த சூவ வாங்கிட்டு போனாரு

ரொம்ப சந்தோஷமான அந்த தாத்தா கடைக்கு போயி நிறைய சாப்பிடும் சூ செய்றதுக்கு நிறைய தோலும் வாங்கிட்டு வந்தாரு

வாங்கிட்டு வந்த தோல வெட்டி மேஜைமேல வச்சுட்டு தூங்க போனாரு ,மறுநாள் வந்து பாத்தா இந்த தோலை அருமையான ரெண்டு சூவா யாரோ செஞ்சிருந்தாங்க

அந்த சூவ எடுத்து கடைக்கு முன்னாடி வச்சாரு அந்த தாத்தா ,உடனே அந்த சூ வித்துடுச்சு ,ரொம்ப சந்தோஷமான அந்த தாத்தா நிறைய தோல்வாங்கிட்டு வந்து மேஜைல வச்சிட்டு தூங்க போனாரு

மறுநாளும் இதேமாதிரி நிறைய சூ யாரோ செஞ்சு வச்சிட்டு போயிருந்தாங்க ,அத வாங்க கடை முன்னாடி ஒரே கூட்டமா இருந்துச்சு

அந்த தாத்தா பாட்டி கிட்ட சொன்னாரு ,யார் இந்த சூவ செய்றானே தெரியலையே ,நம்ம கடைய பூட்டிட்டுட்டுதான் தூங்கறோம் ,கடைக்குள்ள யாரும் வந்த மாதிரியும் தெரியலன்னு சொன்னாரு

உடனே அந்த தாத்தவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நாம ரெண்டு பேரும் இன்னைக்கு தூங்காம இருந்து பாப்போம்னு சொல்லிட்டு பீரோவுக்கு பின்னாடி பொய் அந்த தாத்தாவும் பாட்டியும் ஒளிஞ்சுக்கிட்டாங்க

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா பூன வர்ற அளவு ஓட்ட வழியா ரெண்டு அழகான குட்டி மனிதர்கள் வந்தாங்க

ரெண்டு பேரும் சேந்து அந்த மேஜைல இருக்குற தோல எடுத்து அழகான சூ தயாரிச்சாங்க ,இத பாத்த பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஒரே ஆச்சர்யம்

அந்த பாட்டி அன்னைக்கு ரெண்டு அழகான குட்டி சட்டையும் ,நிறைய உணவும் அந்த குள்ளமனிதர்களுக்கு செஞ்சு மேஜை மேல வச்சுட்டு தூங்க போய்ட்டாங்க

ஓட்ட வழியா வந்த அந்த ரெண்டு குள்ள மனிதர்களும் ,பாட்டியோட சாப்பிட சாப்டுட்டு அந்த புது துணிய போட்டுக்கிட்டாங்க

இத ஒளிஞ்சிருந்து பாத்த தாத்தாவும் பாட்டியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ,கொஞ்ச நாள் கழிச்சு தாத்தா சொன்னாரு நமக்கு இனிமே வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை நமக்கு சூ செய்ய நல்ல வேலைகாரங்க கிடைச்சுட்டாங்க, நாம சாப்பாடு கொடுத்தா அவுங்க வேல செய்வாங்கன்னு முட்டாள் தனமா பேசுனாரு

மறுநாள் காலைல வந்து பாத்தா சாப்பாடு அப்படியே இருந்துச்சு ,சூ தைக்க வச்சிருந்த தோலும் அப்படியே இருந்துச்சு ,என்ன ஆச்சுன்னு தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒரே குழப்பம்

அதுக்கு அப்புறம் அந்த குள்ள மனிதர்கள் அந்த கடைக்கு வரவே இல்ல ,அப்ப பாட்டி சொன்னாங்க நீங்க எப்ப உழைக்குறத கைவிட்டீங்களோ அப்ப இருந்து தான் அவுங்க வர்றது நின்னு போச்சு
ஊக்கமது கைவிடேல் அப்படிங்கிற பழமொழிக்கு ஏற்ப எப்பவும் உழைக்குறத கைவிட கூடாதுனு சொன்னாங்க

பாட்டியோட பேச்ச புரிஞ்சுகிட்டு தாத்தா மறுபடியும் சூ செய்ய ஆரம்பிச்சாரு ,இந்த தடவ அந்த குள்ள மனிதர்கள் செஞ்ச சூ மாதிரியே செஞ்சு கஷ்டம் இல்லாம வாழ்ந்தாங்க அந்த தாத்தாவும் பாட்டியும்