The Shared River – Elephants and Ants- யானை கூட்டமும் எறும்பு கூட்டமும்

The Shared River – Elephants and Ants- யானை கூட்டமும் எறும்பு கூட்டமும் :- ஒரு காட்டுக்கு நடுவுல இருக்குற ஆத்துக்கு ஒரு யானை கூட்டம் வந்துச்சு

அந்த ஆத்துல நிறைய தண்ணி இருக்குறத பார்த்த யானைங்க ரொம்ப குதூகலத்தோட அந்த தண்ணிய எல்லாம் கலங்கடிச்சுச்சுங்க

அப்ப பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த எறும்பு கூட்டம் எல்லாம் சேர்த்து இது எல்லாருக்கும் பொதுவான ஆறு ,இந்த காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் இந்த தண்ணியத்தான் குடிச்சி உயிர் வாழுறாங்க அதனால தண்ணிய கலங்கள் பண்ணாதீங்கன்னு சொல்லுச்சுங்க

அத கேக்காம எல்லா யானைகளும் ஆத்து தண்ணிய கலங்கடிச்சுச்சுங்க

இத பார்த்த எறும்புகளுக்கு ஒரே கோபமா வந்துச்சு ,மறுநாள் எல்லா எறும்புகளும் இலையில செஞ்ச சின்ன படகுல ஏறி அந்த ஆத்துல மிதக்க ஆரம்பிச்சுச்சுங்க

யானைக்கூட்டம் வந்து தண்ணி குடிக்க ஆம்பிச்சதும் ஒவ்வொரு எறும்பா யானையோட துதிக்க வழியா உள்ள போயி கடிக்க ஆரம்பிச்சுச்சுங்க

வலி பொறுக்க முடியாத யானைகள் தறிகெட்டு ஓட்டுச்சுங்க ,அப்பத்தான் சின்ன எறும்புகளை உதாசீன படுத்துனது தவறுன்னு எல்லா யானைகளுக்கும் புரிஞ்சது

காட்டு பொது சொத்தான ஆத்த அழுக்கக்குணத்துக்கு மன்னிப்பு கேட்டுச்சுங்க.

நீதி :சிறிய உயிரினங்கள் கூட பெரிய உயிரினங்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.

Leave a comment