The Rope – கடவுளும் கயிறும் – நம்பிக்கை கதை :- ஒரு நாள் ஒரு மலை ஏறும் வீரர் எவரெஸ்ட் மலை சிகரத்துல எறிகிட்டு இருந்தாரு
அப்ப ரொம்ப பனியடிச்சது , சுத்தி என்ன இருக்குன்னே கண்ணுக்கு தெரியல
வானமும் , பூமியும் எதுவுமே அவருக்கு தெரியல திடீர்னு கால் இடறி ஒரு பெரிய மலை சரிவில விழ ஆரம்பிச்சாரு அந்த வீரர்
ஒரு நிமிஷம் என்ன நடக்குதுன்னே அவருக்கு தெரியல , திடீர்னு அவர் இடுப்பில கட்டியிருந்த கயிறு எதோ ஒரு இடத்துல மாட்டி தொங்க ஆரம்பிச்சாரு
தான் எங்க தொங்குறோம் , எவ்வளவு உயரத்துல தொங்குறோம்னு எதுவுமே அந்த வீரருக்கு தெரியல
அப்பத்தான் கடவுள்கிட்ட வீணடிக்க ஆரம்பிச்சாரு ,கடவுளே என்ன காப்பாத்து அப்படினு வேண்டிகிட்டாரு
கடவுள் அசரீரியா பேசுனாரு நான் உன்ன காப்பாத்திக்கிட்டே தான் இருக்கேன் அதனாலதான் நீ உயிரோட இருக்க அப்படின்னு சொன்னாரு
மேலும் உன்ன தாங்கி இருக்குற கயிறை அறுத்துடு நான் உன்ன கேக்குறேன்னு சொன்னாரு
கடவுளே சொல்லியும் உயிருக்கு பயந்து அந்த கயிறை அறுக்கமா தொங்கிகிட்டே இருந்தாரு
மறுநாள் அவரோட உடலைத்தான் மீட்ப்பு குழு மீட்டாங்க அவுங்க அப்பத்தான் பாத்தாங்க அவரு தரைல இருந்து ரெண்டு மூணு அடிக்கு மேலதான் தொங்கிகிட்டு இருந்தாரு
மெதுவா அந்த கயிறை கட்டியிருந்தாலும் அவர் கீழ விழுந்து பாதுகாப்பா இருந்திருப்பாரு அப்படின்னு சொன்னாங்க
நீதி :- நம்பிக்கை வைக்கணும்னு முடிவு முழுமையா வைக்கணும்