The Real Test – Akbar Birbal Stories in Tamil-நல்ல கவசம் :-ஒரு தடவ அக்பர் பாதுஷாவோட அரண்மனைல இருந்த ஒரு மந்திரிக்கும் அரண்மனை கொல்லருக்கும் சின்னதா சண்டை வந்துச்சு
உடனே அந்த மந்திரி சொன்னாரு உனக்கு பதிலா வேற ஒரு கொல்லன அரண்மனைக்கு கொண்டு வரேன்னு சொன்னாரு
மறுநாள் அரண்மனைக்கு புது கவசத்தை கொண்டுவந்து அரசர்கிட்ட காமிச்சாரு அந்த கொல்லன் ,உடனே அந்த மந்திரி எழுந்திரிச்சி அரசே நீங்க ஏன் புது கவசங்களை சோதிக்க மாற்றிங்கனு கேட்டாரு
உடனே அக்பர் சொன்னாரு அப்ப நீங்களே சோதிச்சு பாருங்கன்னு சொன்னாரு , அந்த கொல்லன் கொண்டுவந்த கவசத்த தரைல வச்சு வாளால வெட்டுனாரு அந்த மந்திரி அப்ப அந்த கவசம் பிஞ்சு போச்சு
அதுக்கு பதிலா இன்னொரு கொல்லன் கொண்டுவந்த கவசத்த எடுத்துட்டு வந்து வெட்டி காட்டுனாரு ,அந்த கவசம் உடையாம இருந்துச்சு
அரசே இந்த புது கொல்லன அரண்மனை கொல்லனா ஏத்துக்கோங்கன்னு சொன்னாரு
ஆனா அரசருக்கு இதுல ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சது ,இந்த பழைய கொல்லனோட திறமையை நிறய தடவ கண்ணால கண்ட அரசருக்கு முடிவு எடுக்க முடியல
முடிவ நாளைக்கு சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டாரு ,இத எல்லாம் பார்த்துகிட்டு இருந்த பீர்பாலுக்கு புரிஞ்சது ,இந்த கொல்லனுக்கும் மந்திரிக்கும் எதோ சண்டைனு
அன்னைக்கு ராத்திரி கொல்லன கூப்பிட்டு விசாரிச்சாரு பீர்பால்,
அப்பத்தான் அந்த கொல்லன் சொன்னாரு ,எங்களு சின்ன சண்டைனு ,கூடவே பீர்பால் அவர்களே இந்த கவசம் உடல்ல போட்டிருக்கப்ப தான் இதோட முழு பலமும் கிடைக்கும் ,ஆனா இத தரைல வச்சு வெட்டுறது தவறுன்னு சொன்னாரு
அந்த கவசத்த பத்தி நல்லா விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்ட பீர்பால் மறுநாள் ,பழைய கொல்லன் கொண்டுவந்த கவசம் தான் நல்ல கவசம்னு சொன்னாரு
கவசம் கிறது உடம்புல போட்ருக்கப்ப நம்மள பாதுகாக்கிறது,இத தரைல வச்சு வெட்றது தப்புனு சொன்னாரு
அதுக்கு அந்த மந்திரி ஒத்துக்குவே இல்ல ,உடனே பீர்பால் சொன்னாரு ,நான் இந்த கவசத்த போட்டுகிறேன் ,நீங்க அந்த புதிய கவசத்த போட்டுக்கோங்க
கத்திய வச்சு வெட்டப்ப எந்த கவசம் நல்லதுன்னு தெரிஞ்சுடும்னு சொன்னாரு ,இத கேட்ட அந்த மந்திரி அதுக்கு சம்மதம் சொல்லவே இல்ல
இனிமே பீர்பால ஜெயிக்க முடியாதுனு தெரிஞ்சதும் அந்த பழைய கொல்லன் கிட்டயும் அரசர் கிட்டயும் ,பீர்பால் கிட்டயும் மன்னிப்பு கேட்டாரு