The Real Slave – யார் திருடன் – அக்பர் பீர்பால் கதை :-ஒரு பணக்காரர் ஒரு வேலையாள வேலைக்கு வச்சிருந்தாரு . அவர் இல்லாத நேரம் பார்த்து அந்த வேலைக்காரன் வீட்டுல இருந்த பணத்த எடுத்துக்கிட்டு ஓடிட்டான்
அவரைத்தேடி அலைஞ்ச அந்த பணக்காரனுக்கு அவன் கிடைக்கவே இல்ல
ஒருநாள் அக்பரோட ராஜா வீதியில அவரு நடந்து போய்கிட்டு இருக்கிறப்ப அந்த வேலைக்கார திருடன பார்த்தாரு
அந்த திருடனும் இவர பாத்துட்டேன் ,இந்த இடத்துல அரண்மனை காவலர்கள் நிறைய இருக்காங்க இங்க மாட்டுனா நேரா அரசர்கிட்ட போய் சிறைக்கு போக வேண்டியது தான்னு தோணுச்சு அந்த திருடனுக்கு
உடனே அந்த திருடன் ஒரு திட்டம் போட்டான் ,நேரா அந்த பணக்காரர் கிட்ட ஓடிவந்து ஏ வேலைக்கார திருடனே என்கிட்ட திருடிட்டு இங்க வந்து சுத்திகிட்டு இருக்கியான்னு கேட்டான்
அந்த பணக்காரருக்கு ஒண்ணுமே புரியல ,நீ திருடிட்டு என்ன உன் வேலைக்காரன் ,திருடன்னு சொல்லுறியான்னு கேட்டாரு அந்த பணக்காரர்
இவுங்க சத்தம் கேட்டு வந்த அரண்மனை காவலாளிகள் பீர்பால் கிட்ட ரெண்டுபேரையும் கூட்டிட்டு போனாங்க
உடனே பீர்பால் இதுல உண்மையான வேலைக்கார திருடன எப்படி கண்டுபிடிக்கிறதுனு யோசிச்சாறு
அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு ,ரெண்டு பேரோட தலையையும் ஜன்னலுக்கு வெளியில நீட்ட சொன்னாரு
அவுங்களும் நீட்டுனாங்க ,அப்ப அக்பர் சொன்னாரு ,ஜன்னலுக்கு வெளியில இருக்குற காவலாளியே அந்த வேலைக்காரனோட தலைய வெட்டுன்னு சொன்னாரு
உடனே அந்த உண்மையான வேலைக்கார திருடன் டக்குனு தன்னோட தலையை உள்ள எடுத்துக்கிட்டான் ,ஆனா அந்த பணக்காரர் எந்த பயமும் இல்லாம தலைய வெளியவே வச்சிருந்தார்
உடனே அந்த திருடன காவலாளிகள் மூலமா சிறையில அடச்சாரு பீர்பால்