The Real Owner-Akbar Birbal Tamil Story- குதிரை எஜமானர் :-அக்பர் மற்றும் பீர்பாலோட புகழ் பக்கத்து நாடுகள் எல்லாத்துலயும் பரவி இருந்துச்சு
இத கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசருக்கு ,பீர்பால் மற்றும் அக்பரோட திறமையை நேர்ல பாக்கணும்னு ஆசவந்துச்சு
அதனால் ஒரு வியாபாரி மாதிரி வேசம்போட்டுகிட்டு ஒரு குதிரையில் ஏறி டெல்லிக்கு கிளம்புனாரு
டெல்லி கிட்ட வந்ததுக்கு அப்புறமா ஒரு ஆள் உதவி கேட்டு கெஞ்சிகிட்டு இருக்குறத பார்த்தாரு
அவரு கிட்ட போனாரு பக்கத்து நாட்டு அரசர் ,அவரு கிட்ட அந்த பயணி கேட்டாரு ,ஐயா என்னால நடக்க முடியல அதனால உங்க குதிரைல என்ன உக்கார வச்சு டெல்லி வரைக்கும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னாரு
உடனே அந்த பக்கத்து நாட்டு அரசரும் அவருக்கு உதவி செய்ய ,தான் கீழ இறங்கிக்கிட்டு ,அந்த பயணிய குதிரைல உக்கரவச்சு டெல்லி நோக்கி போனாரு
டெல்லி கோட்டையை அடைஞ்சதும் அந்த பயணிய கீழ இறங்கிக்கிட சொன்னாரு ,அதுக்கு அந்த பயணி சொன்னாரு ,இது என்னோட குதிரை ,எனக்கு டெல்லிய சுத்திப்பாக்க உதவி செய்றேன்னு சொல்லி எங்கூட நடந்து வந்துட்டு இப்ப என் குதிரைய கேக்குறியான்னு சத்தம் போட்டாரு
இந்த சத்தத்த கேட்ட அரண்மனை காவலர்கள் ரெண்டுபேரையும் இழுத்துகிட்டு அக்பர் கிட்ட கூட்டிட்டு போனாங்க
அந்த பக்கத்து நாட்டு அரசர பாக்கும்போது ரொம்ப கம்பீரமா இருந்ததால சந்தேகம் வந்துச்சு அக்பருக்கு ,அதனால அந்த வழக்க பீர்பால விசாரிக்க சொன்னாரு
நடந்தத விசாரிச்ச பீர்பால் அந்த குதிரைய அரண்மனை தோட்டத்துல மத்த குதிரைங்களோட சேர்த்து கட்ட சொன்னாரு
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த அரசரையும் ,அந்த பயணியையும் கூட்டிகிட்டு அந்த குதிரைங்க இருக்குற இடத்துக்கு போனாரு
அங்க போனதும் உங்க குதிரை இதுல எதுன்னு கேட்டாரு பீர்பால் அந்த பயணிக்கிட்ட ,அந்த பயணியாள சரியா சொல்ல முடியல ,பாக்குறதுக்கு அங்க இருந்த எல்லா குதிரையும் ஒரே மாதிரி இருந்துச்சு
உடனே அவனை காவலர்கள் சிறைக்கு இழுத்துட்டு போய்ட்டாங்க
அடுத்ததா அந்த குதிரைய கண்டுபிடிக்க சொல்லி பக்கத்து நாட்டு அரசருக்கு சொன்னாரு பீர்பால்
உடனே அந்த அரசர் சரியா அந்த குதிரையை கண்டுபிடிச்ச்சு ,அதுகிட்ட போய் நின்னாரு ,அந்த குதிரையும் அவருகிட்ட வந்து தலையை தலைய ஆட்டுச்சு
உடனே அக்பர் மற்றும் எல்லாரும் அது அந்த பக்கத்து நாட்டு அரசரோட குதிரைத்தானு உறுதியாகிடுச்சுனு சொன்னாங்க
ஆனா பீர்பால் மட்டும் இல்லை,இல்லை இந்த குதிரையோட முதுகுல அரசர்கள் உக்காருற சப்பரம் போட்ட தழும்பு இருக்கு
அதனால் இது ஏதோ ஒரு அரசரோட குதிரை ,இத எங்க இருந்து திருடி கொண்டு வந்தனு கேட்டாரு
இத கேட்ட அந்த அரசருக்கு ,பீர்பால் தன்னை யாருனு கண்டுபிடிச்சிட்டாருனு புரிச்சிக்கிட்டாரு ,உடனே அக்பர் கிட்ட போயி தன்னோட தாடி மீசை எல்லாத்தையும் எடுத்துட்டு
நான் பக்கத்து நாட்டு அரசர் ,பீர்பாலோட திறமைய கண்டுபிடிக்க ஆசைப்பட்டு இப்படி வந்தேனு சொன்னாரு
அப்படி வந்ததால இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டு ,என்னோட கண்ணாலேயே அக்பர் பீர்பால் அரசவை ஏன் உலக புகழ் அடைஞ்சிருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன்னு சொன்னாரு
உடனே அக்பர் அவர அரண்மனைக்கு கூட்டிட்டு போயி விருந்து வச்சு அனுப்புனாரு