The Peacock’s True Colors – மயிலின் அழகு – சிறுவர்மலர் கதைகள் :- ஒரு பெரிய காட்டுல ஒரு பறவை கூட்டம் இருந்துச்சு
அதுல சில குட்டி இளம் வயசு பறவைகளும் இருந்துச்சு ,அந்த குட்டி பறவைங்க கூட்டத்துல ஒரு குட்டி மயிலும் இருந்துச்சு

அந்த குட்டி மயில் கூவுறது ரொம்ப எரிச்சலா இருந்துச்சு எல்லா குட்டி பறவைகளுக்கும் குட்டி மயிலை கிண்டல் செய்ய ஆரம்பிச்சுங்க
அதனால அந்த மயிலுக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,எப்ப பார்த்தாலும் தான் மட்டும் மட்டம் தட்ட படுறத குட்டி மயிலால சகிச்சிக்கிட முடியல
ரொம்ப வருத்தப்பட்ட குட்டி மயில் அங்க வாழ்ந்துகிட்டு வந்த வயசான புறா கிட்ட போயி தன்னோட வருத்தத்த சொல்லுச்சு

சின்ன பறவைகளோட சண்டைய நினச்சு அந்த வயசான புறாவுக்கு ரொம்ப சிரிப்பு வந்துச்சு
அந்த குட்டி மயிலுக்கு தன்னம்பிக்க வரணும்னு நினச்ச புறா , அழகான குரல் வச்சிருந்த குயில பத்தி சொல்லுச்சு
குட்டி மயிலே நீ என்னைக்காவது குயில் பாட்டு கேட்டுருக்கியான்னு கேட்டுச்சு
அத கேட்ட குட்டி மயில் ஆமா நான் கேட்டிருக்கேன் குயில் ரொம்ப அழகா பாடும் அதோட குரல் ரொம்ப அழகா இருக்கும்னு சொல்லுச்சு

உடனே அந்த குட்டி மயிலை குயில் கிட்ட கூட்டிட்டு போயி ,அழகா பாடுற குயிலே உனக்கு வாழ்க்கையில உனக்கு வாழ்க்கையில வருத்தமே இல்லையானு கேட்டுச்சு
உடனே அந்த குயில் சொல்லுச்சு , அழகா பாடி என்ன பயன் ,என்னால அழகா நடனமாட முடியாது ,வேகமா பறந்து இரைதேட முடியாது ,என்னோட உருவம் வேற சின்னதுனு தன்னோட குறைகள அடுக்கிகிட்டே போச்சு

இத கேட்ட புறா சொல்லுச்சு பார்த்தியா குரல் நல்லா இருந்தா நல்லா வாழலாம்னு நீ நினைக்கிற ஆனா குரல் நல்லா இருக்குற பறவையே ரொம்ப வருத்தத்துல இருக்கு உனக்கு அது மாதிரி வாழணுமான்னு கேட்டுச்சு
இதே கேட்ட குட்டி மயிலுக்கு நல்ல குரல் மேல இருந்த ஆசையே போய்டுச்சு , அப்பத்தான் குயில் கிட்ட கேட்டுச்சு உனக்கு எந்த பறவை மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைன்னு கேட்டுச்சு
அதுக்கு அந்த குயில் சொல்லுச்சு எனக்கு மயில் மாதிரி மாறணும்னு ஆசைன்னு சொல்லுச்சு

இதே கேட்ட குட்டி மயில் கேட்டுச்சு ஏன் அந்த குயில் என்ன மாதிரி மாறணும்னு கேட்டுச்சு .எனக்கு நல்ல குரல் இல்லையேன்னு சொல்லுச்சு
அதுக்கு அந்த புறா சொல்லுச்சு உனக்கு குறைன்னு நினைக்குறது ,இன்னொரு பறவைக்கு இருக்குறமாதிரி ,மத்த பறவைகளுக்கு இருக்காத நல்ல விஷயங்கள் உனக்கு இருக்கு
நீ குட்டியா இருக்குறதுனால உனக்கு தொகை இன்னும் வளரல ,நீ பெரியவனா வளர்ந்ததும் உனக்கு மிக அழகான தொகை வரும் ,எல்லா பாறவைகளும் உன்னோட அழக பார்த்து கொண்டாடுவாங்க
அதனால இன்னைக்கு நீ இருக்குற நிலைமைய பார்த்து கிண்டல் செய்யுறவங்கள விட்டுட்டு நல்ல மனசோட ,நல்ல தன்னம்பிக்கையோட வளரனும்னு சொல்லுச்சு
பெரிய பறவையான புறாவோடை அறிவுரைய கேட்ட குட்டி மயில் மனசு தைரியமா வாழ ஆரம்பிச்சுச்சு